Bisleri Water Explained: இந்தியாவின் முன்னணி குடிநீர் பாட்டில் நிறுவனமாக பிஸ்லெரி இருந்து வருகிறது. பல்வேறு பொது இடங்களிலும் பிஸ்லெரி நிறுவனத்தின் தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், உணவகங்கள், தெருவோரக் கடைகள் என எங்கு சென்றாலும், பிஸ்லெரி வாட்டர் பாதுகாப்பான குடிநீருக்கான அடையாளமாக மாறிவிட்டது. இந்த சூழலில் தான் பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பற்று தின தெரியவந்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பிஸ்லெரி நிறுவனத்தின் குடிநீர் மாதிரி ஆய்வக பரிசோதனையில் அந்நிறுவனத்தின் தண்ணீர் பாதுகாப்பற்றது என கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், நாள்தோறும் மக்கள் செல்லக்கூடிய அனைத்து இடங்களில் பிஸ்லெரி தண்ணீர் தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் பாதுகாப்பற்றது என கண்டறியப்பட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாம் அன்றாடம் நம்பி வாங்கி அருந்தும் பாட்டில் குடிநீர் உண்மையிலேயே பாதுகாப்பானதுதானா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
பிஸ்லெரி நிறுவனத்தின் பாட்டில் குடிநீர் மாதிரி, ஆய்வகப் பரிசோதனையில பாதுகாப்பற்றது என தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி அளித்துள்ளது.
முதற்கட்ட சோதனையில், அந்த தண்ணீரில் புரோமேட் (Bromate) எனப்படும் வேதிப்பொருள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதை எதிர்த்து நிறுவனம் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, மேல்நிலை உணவுப் பரிசோதனை ஆய்வகத்தில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அதிலும், அந்த பிஸ்லெரி தண்ணீரில 'பாலிநியூக்ளியர் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள்' (PAHs) இருப்பது கண்டறியப்பட்டு, அது பாதுகாப்பற்றது என உறுதி செய்யப்பட்டது. இந்த இரண்டு வேதிப்பொருட்களுமே புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை (Carcinogens) என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புரோமேட் மற்றும் பாலிநியூக்ளியர் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் ஆகிய இரண்டுமே புற்றுநோயை உண்டாக்கும தன்மை கொண்ட ரசாயனங்கள் ஆகும். தண்ணீரை சுத்திகரிக்கும் சில முறைகளின்போது புரோமேட் உருவாக வாய்ப்புள்ளது. குறிப்பாக தண்ணீரில் உள்ள கிருமிகளை அழிக்க ஓசோன் வாயுவை பயன்படுத்தும் போது இந்த புரோமேட் இன்னும் வேதிப்பொருள் உருவாகிறது.
தண்ணீருக்குள் ஓசோன் செயல்படுத்தும் போது அது கிருமிகளை மட்டும் அளிப்பதில்லை. தண்ணீரில் இயற்கையாக கலந்துள்ள புரோமைடு (Bromide) உடன் சேர்ந்து வேதியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பல கட்ட மாற்றங்களுக்கு பிறகு அந்த புரோமைடு புரோமேட் என்ற வேதிப்பொருளாக மாறிவிடுகிறது. எனவே தண்ணீரை சுத்திகரிக்கும் போது இதனை மிக கவனமாக கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்த வேதிப்பொருள் முக்கிய கவலையாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அடிப்படையில், புரோமேட் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்புள்ள பொருள் என உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் செயல்படும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் வகைப்படுத்தி இருக்கிறது. இது உடலில் நீண்டகாலம் சேரும்போது சிறுநீரகம், தைராய்டு மற்றும் பிற பிரச்சனைகள் உடலில் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
மேலும் இது உடலில் உள்ள செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி டிஎன்ஏவை சேதப்படுத்தகூடும் எனவும் தெரியப்படுத்துகிறது. அதிக அளவில் புரோமேட் உடலில் சென்றால் குமட்டல், வாந்தி, வயிற்று வலி, சிறுநீரக பாதிப்பு மற்றும் காது கேளாமை பிரச்சனைகள் ஏற்படலாம். நீண்டகால பாதிப்புகளை தவிர்க்க, குடிநீரில் ஒரு லிட்டருக்கு 10 மைக்ரோகிராம் அளவிற்கு மேல் புரோமேட் இருக்கக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.
…Recent inspections and compliance verifications have led to immediate enforcement actions against various FBOs. #FSSAINotice #FSSAIAction 2(2) https://t.co/KNtqHyIED0
— FSSAI (@fssaiindia) November 22, 2026
இரண்டாவதாக கண்டறியப்பட்ட வேதிப்பொருட்களும் இதே அளவு ஆபத்தானவை. நிலக்கரி, பெட்ரோலியம், மரம் போன்ற பொருட்கள் முழுமையாக இல்லாத போது உருவாகும் வேதிப் பொருட்களின் தொகுப்பே இது. வாகன புகை, தொழிற்சாலை மாசு, மாசுபட்ட மண் மற்றும் அதிக வெப்பநிலையில் சமைக்கும்போது சில உணவுகளில் இவை காணப்படுகின்றன. அனைத்து PAHs வேதிப்பொருட்களும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் இதில் உள்ள 'பென்சோ ஏ பைரின் (Benzo (A) pyrene) என்ற வேதிப்பொருள் மனிதர்களுக்கு நிச்சயம் புற்றுநோயை உண்டாக்கக் கூடியது என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் உறுதிப்படுத்தி உள்ளது. இவை உடலுக்குள் சென்று மாற்றமடைந்து டிஎன்ஏ உடன் சேர்ந்து புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. இவை தவிர, இவை நோய் எதிர்ப்பு மண்டலத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனவா என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. குடிநீரில் ஒரு லிட்டருக்கு 0.7 மைக்ரோகிராம் அளவுக்கு மேல் பென்சோ ஏ பைரின் (Benzo (A) pyrene) இருக்கக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல் வழங்கி இருக்கிறது.
இப்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், பிஸ்லெரி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் பாதுகாப்பற்றவை என்ற முடிவுக்கு வர முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. குறிப்பாக எந்த பேட்ச் தண்ணீர் பாதிக்கப்பட்டது, எந்த ஆலையில் தயாரிக்கப்பட்டது, அதன் வேதிப்பொருட்கள் உண்மையான அளவு என்ன மற்றும் சந்தை உள்ள மற்ற பாட்டில்களை சோதிக்க வேண்டுமா? அல்லது திரும்ப பெற வேண்டுமா என்பது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.
அதேபோல பிஸ்லெரி நிறுவனமும் இந்த ஆய்வக முடிவுகள் குறித்து பதிலளிப்பதோடு தங்கள் தரப் பரிசோதனை விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொது இடங்களில் கிடைக்கும் குடிநீர் தரத்தை நம்ப முடியாத சூழலில் பல இந்தியர்கள் பாட்டில் குடிநீர் என்பது அத்தியாவசிய தேவையாக உள்ளது. எனவே பாதுகாப்பான குடிநீர் என்ற பெயரில் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலிலும் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென நுகர்வோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மக்கள் வெறும் பிராண்ட் பெயரை மட்டும் நம்பாமல் பாட்டிலில் உள்ள விவரங்களை கவனிக்க வேண்டும் என்பது இந்த நிகழ்வு உணர்த்தும் பாடமாக உள்ளது. தண்ணீர் பாட்டில் வாங்குவதற்கு முன் கீழ்க்கண்டவற்றை சரி பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
லேபிள் விவரங்கள்: பாட்டிலில் FSSAI உரிம எண், தயாரிப்பாளரின் முகவரி, பேட்ச் எண், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவை தெளிவாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்.
பாட்டிலின் நிலை: தண்ணீர் பாட்டிலில் மூடியின் சீல் உடையாமல் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும். நசுங்கிய, நீர்க்கசியும் அல்லது அழுக்கு படிந்த பாட்டில்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
சேமிப்பு முறை: பாட்டில்களை நேரடி சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பம் படாத இடங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கும் கடைகளில் மட்டுமே தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும்.
ஆனால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் உரிமை உண்டு. தண்ணீரில் கலந்துள்ள புரோமேட் மற்றும் PAHs போன்ற வெயில் பொருட்களை பார்ப்பதன் மூலமோ முகர்ந்து பார்ப்பதன் மூலமோ சுவைப்பதன் மூலமோ கண்டறிய முடியாது. பார்ப்பதற்கு மிக தெளிவாகவும் சுத்தமாகவும் இருக்கும் தண்ணீரில் கூட இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது. முறையான ஆயுத பரிசோதனைகளால் மட்டுமே இவற்றை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://t.co/qOBmfxcYj9
— BisleriZone (@BisleriZone) November 23, 2026
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியாகும் செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பிஸ்லரி நிறுவனம் தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் சுமார் 14 மாதங்களுக்கு முன்பு, அதாவது 2025 செப்டம்பரில் நாட்டில் உள்ள 143 ஆலைகளில் ஒன்றான கோவா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பேட்ச் (Batch) தண்ணீர் தொடர்பானது என பிஸ்லரி தெரிவித்துள்ளது. குடிநீர் பாதுகாப்பிற்கே தங்களது நிறுவனம் எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகக் பிஸ்லெரி கூறியுள்ளது.