Blood Relatives Marriage: கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி சார்வி. இவர் வழக்கறிஞர் அஞ்சுமன் திரிப்பாதி மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது இந்தியாவில் பின்பற்றப்படும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது . சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது காலம் காலமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது என்பதற்காகவே இப்போதும் அது தொடர்ந்து வருகிறது. சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது குழந்தை பிறப்பை கேள்வி குல்லாக்குவதோடு மரபணு பாதித்த குழந்தை பிறக்கும் வாய்ப்பை அதிகரிப்பதாக சொல்கிறார்கள்.
சொந்தத்தில் திருமணம் செய்வது மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு சார்ந்த குறைபாடுகள், உணர்ச்சி குறைபாடு, வளர்ச்சியில் சிக்கல், குழந்தை பருவத்திலே மரணம் உள்ளிட்டவற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் ரத்த சொந்தத்தில் திருமணத்தை அனுமதிக்க வேண்டுமா என்று பரிசீலனை செய்ய வேண்டும்" என்று அவர் மனுவில் கூறியிருந்தார் . ரத்த உறவுகளுக்கு இடையே நடக்கும் திருமணங்கள் ஹோமோசைகோசிட்டி ( Homozygosity) எனும் மரபணு பிரச்சனை கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது.
இதற்கிடையே 40% பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மனுதாரர் தனது சமூகத்தில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய வழக்கின்படி நெருங்கிய உறவினர்களுக்குள் நடைபெற்ற திருமணத்தின் மூலமே தான் பிறந்தவர் என்று மனுவில் குறிப்பிட்டார்.
இத்தகைய திருமணங்களால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து விரிவான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டார். இந்த மனு தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோரின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு சில முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கூறி இருப்பதாவது, "இதுபோன்ற ரத்த உறவுகளுக்கிடையான திருமணங்கள் நீதிமன்றத்தால் ஒழுங்குபடுத்த முடியாது. ஆனால் சமூக சீர்திருத்த சட்டம் மூலம் இத்தகைய திருமணங்களை ஒழுங்குபடுத்துவது சட்டமன்றத்தின் முழு அதிகார வரம்பிற்குள் வருகிறது. நெருங்கி இரத்த உறவுகளுக்கு இடையே நடைபெறும் திருமணங்களை தடுக்கும் வகையில் சட்டம் ஏற்றுவதன் அவசியம் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இதில் அரசுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இந்த விவகாரத்து தீவிரத்தை உணர்த்தவே விரும்புகிறோம். விவகாரத்தில் பொருத்தமான சட்டம் ஏற்றுவது குறித்து பரிசீலிக்கவும் அல்லது பாடத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்கள் வழியாக இதுகுறித்த விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரசுக்கு உணர்த்தும் நோக்கில் மட்டுமே நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம்.
ரத்த சொந்தத்தில் நடைபெறும் திருமணங்கள் குறித்து உரிய சட்டம் இயற்றாத அவசியத்தை கருத்தில் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உணர்த்தும் வரம்பிற்குட்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே நாங்கள் நோட்டீஸ் அனுப்ப முடியும். நாங்கள் அவர்களுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க மாட்டோம் " என்று கூறினர். இந்த வழக்கின் விசாரணையின் போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இத்தகைய திருமணங்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் நடைபெறுவதாகும் பின்விளைவுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலேயே மக்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் திருமணம் என்பது தனி நபர் விருப்பம் சார்ந்த விஷயம். இதனால் ஒருவரால் முழுமையான புரிதலுடன் திருமணம் முடிவை எடுக்கக் கூடிய வகையில் இது குறித்து பொதுமக்களிலே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டார். எச்ஐவி பாதித்த நபரின் திருமணம் தொடர்பான முந்தைய வழக்கு ஒன்றை சுட்டிக்காட்டி என் நீதிபதிகள் அந்த வழக்கிலும் கூட திருமணம் என்பது தனிநபர் விருப்பம் சார்ந்தது என்று நீதிமன்றம் கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலுக்கு மத்திய அரசு ஆலோசனை நடத்தி சட்டம் கொண்டு வந்தால் ரத்த உறவுகளுக்கு இடையேயான திருமணத்துக்கு சிக்கல் ஏற்படலாம். இதனால், அப்பா வழி அத்தை மகள், மகன் ஆகியோரை திருமணம் செய்ய முடியாத நிலை வரலாம். ஆனால், தற்போது வரை ரத்த சொந்தத்தில் திருமணத்தை கட்டுப்படுத்தவோ, தடை செய்யவோ எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இது தொடர்பாக மருத்துவர் மதுகர் பரத்வாஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ரத்த உறவுகளுக்கு இடையே திருமணங்கள் நடைபெறுவது கணவன் மனைவி இருவரிடம் மறைந்திருக்கும் குறைபாடுள்ள மரபணு மாற்றங்கள் இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. இது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு குறைபாடுகள் ஏற்படும் அபாயத்தை கணிசமாக உயர்த்தும். ரத்த சொந்தத்தில் நடைபெறும் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே சில குறைபாடுகள் ஏற்படும் அபாயத்தை நிச்சயம் அதிகரிக்கும்.
பொதுவாக பிறப்பிலேயே குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படுவதற்கான அபாயம் சுமார் இரண்டு முதல் மூன்று சதவீதமாக உள்ளது . இது ரத்த சொந்தத்தில் அல்லாத திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் ரத்த சொந்தத்தில் நடக்கும் திருமணங்களில் இந்த அபாயம் சுமார் இரண்டு முதல் இரண்டரை மடங்கு வரை அதிகரிக்கிறது.
இந்த எண்ணிக்கை பார்ப்பதற்கு சிறியதாக தோன்றினாலும் பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் இன்று உயர்வும் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. இந்த அபாயங்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. இதனைப் பற்றி வெளிப்படையாகும் பேசப்படுவதில்லை. காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை மற்றும் மரபணு ஆலோசனை பெறுவதற்கான குறைவான வாய்ப்புகள் ஆகியவை காரணமாக பல தம்பதிகள் இதன் பின் விளைவுகளை அறியாமலேயே திருமணம் செய்து கொள்கின்றனர்" என்றார்.
இரத்த உறவில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான உடல்நலம் பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்பு அதிகம். இவை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பாதிப்போடு நின்று விடாமல் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் ஆரியக்கத்தின் பல அம்சங்களை பாதிக்கப்படும். அதன்படி,
ரத்த சொந்தத்தில் நடைபெறும் திருமணங்களால் கருச்சிதைவுகள் குறைப்பிரசவம் குழந்தைகளின் வளர்ச்சியில் சிக்கல் தொடர்புடையவை என்பதை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சொல்கின்றன என மருத்துவர் பாரத்வாஜ் கூறினார்.
மரபணு ரீதியான அபாயத்தின் அளவு பெற்றோர்கள் இருவரும் எவ்வளவு நெருங்கி ரத்த உறவினர் என்பதை பூர்த்தி அமைகிறது. அதன்படி,
இதன் மூலம் எந்த குடும்பங்களில் இத்தக உறவுமுறை திரும்பினார்கள் தொடர்ந்து நடைபெறுகின்றனவோ அங்கே பரம்பரை நோய்கள் மற்றும் மரபணு குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.