• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

Tamil Nadu Govt New Transfer Rules : பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கட்டாய பணி மாற்றம், ஆன்லைன் கலந்தாய்வு குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. முழு விவரம்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 23, 2026, 11:20 IST|Updated: Nov 23, 2026, 11:28 IST
joinshare
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained
Image Credit: Tamil Nadu Govt New Transfer Rules

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

2

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

3

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

4

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

5

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Govt New Transfer Rules : தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் இடமாற்றம் மற்றும் பணி நியமனங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு மிக முக்கியமான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கடந்த 19.11.2026 அன்று இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளார். இந்தப் புதிய உத்தரவின் மூலம், இனி பேரூராட்சி ஊழியர்கள் ஒரே அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

யாருக்கெல்லாம் இந்தப் புதிய அரசாணை பொருந்தும்?

பேரூராட்சி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் சம்பள நிலை Pay Level 20 மற்றும் அதற்குக் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இந்தப் புதிய இடமாற்ற விதிகள் பொருந்தும். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023-ன் கீழ் வரும் அனைத்துப் பணியாளர்களும் இதில் அடங்குவர். குறிப்பாக, தமிழ்நாடு பேரூராட்சி கீழ்நிலை பணி, தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு பேரூராட்சி பணி மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி சுகாதாரம் மற்றும் துப்புரவுப் பணிகளில் உள்ள அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் இந்த விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.  

3 ஆண்டுகள் முடிந்தால் கட்டாய இடமாற்றம்

புதிய வழிகாட்டுதலின்படி, ஒரு பேரூராட்சி அலுவலகத்தில் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் கட்டாயமாக வேறு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதி கணக்கெடுக்கும் நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதன்படி, மே 31-ஆம் தேதிக்குள் 3 ஆண்டுகள் நிறைவடைபவர்களும் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவர். எந்தவொரு ஊழியரும் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர முடியாது. மேலும், பதவி உயர்வு பெறும் ஊழியர்கள் கட்டாயமாகத் தாங்கள் தற்போது பணியாற்றும் உள்ளாட்சி அமைப்பு அல்லாத வேறு உள்ளாட்சி அமைப்பில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள்.

விருப்ப இடமாற்றம் மற்றும் தகுதி நிபந்தனைகள்

புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள், அதே பிரிவு அலுவலகங்களில் கட்டாயமாக ஒரு வருடம் பணியாற்றிய பிறகே விருப்ப இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும். ஒருமுறை விருப்ப இடமாற்றம் பெற்றவர்கள், அடுத்த 2 ஆண்டுகளுக்கு மீண்டும் விருப்ப இடமாற்றம் கோரி விண்ணப்பிக்க இயலாது. அதேபோல், புகார் அல்லது முறைகேடுகள் காரணமாக நிர்வாக ரீதியாக இடமாற்றம் செய்யப்பட்டவர்கள், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் அதே அலுவலகத்தைத் தேர்வு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறவுள்ளவர்கள் மற்றும் மருத்துவக் காரணங்களுக்கான விலக்குகள்

3 ஆண்டுகள் நிறைவு செய்து இடமாற்றத்திற்குத் தகுதி பெற்ற ஒரு ஊழியர், பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் அல்லது அதற்குக் குறைவான காலமே இருந்தால், அவர் வேறு ஊருக்கு மாற்றப்பட மாட்டார். அவருக்கு அதே ஊரில் இருக்கை மாற்றம் மட்டுமே செய்யப்படும்; அதுவும் சாத்தியமில்லை எனில், ஓய்வு பெறும் வரை அதே பணியில் தொடர அனுமதிக்கப்படுவார். ஆனால், அது முக்கியத்துவம் வாய்ந்த Sensitive பணியாக இருந்தால் வேறு ஊருக்கு மாற்றப்படுவார்.

மேலும், கணவன் - மனைவி ஒரே இடத்தில் பணியாற்ற விண்ணப்பித்தாலோ அல்லது மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் மற்றும் மூளைக் கட்டி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலோ, அவர்களுக்கு ஒரு வருடம் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையான ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை

இனிவரும் காலங்களில் 3 ஆண்டுக் கட்டாய இடமாற்றம், விருப்ப இடமாற்றம் மற்றும் பரஸ்பர இடமாற்றம் என அனைத்தும் காலிப்பணியிடங்கள் மற்றும் பணியிட மூப்பு அடிப்படையில் ஆன்லைன் போர்ட்டல் மூலமாக மட்டுமே நடைபெறும். ஒவ்வொரு ஊழியரும் எந்தெந்தப் பணியில், எவ்வளவு காலம் பணியாற்றினார் என்ற முழு விவரமும் ஆன்லைனில் பதிவு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 3 இடங்களை மட்டுமே விருப்பமாகத் தேர்வு செய்ய முடியும்; அதில் ஒரு விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மற்ற விருப்பங்கள் ரத்து செய்யப்படும். கவுன்சிலிங் முடிந்த உடனேயே அல்லது அதிகபட்சம் 2 நாட்களுக்குள் இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்படும்.  

கூடுதல் விதிமுறைகள் மற்றும் அதிகாரம்

கவுன்சிலிங் நடைபெறும்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் அந்த அமர்வின் இறுதியில் மட்டுமே பட்டியலிடப்படும், அதனை ஒருமுறை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஏற்கனவே ஒரு இடத்தைத் தேர்வு செய்தவர் அதை விட்டுவிட்டு 'ரிசல்டன்ட் வேகன்சி'-யைத் தேர்வு செய்ய முடியாது. மற்றவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, இடமாற்றத்திற்குத் தகுதியற்றவர்களையோ அல்லது விருப்ப இடமாற்றம் கேட்காதவர்களையோ தேவையின்றி இடமாற்றம் செய்யக்கூடாது எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நிர்வாக அவசரம் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் இடமாற்றம் செய்யவும், தேவைக்கேற்ப ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் மாற்றங்களைச் செய்யவும் பேரூராட்சி இயக்குநருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer