• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /CM விஜய்யை இழிவாக பேசிய திமுக கவுன்சிலர் மீது வழக்கு..யார் அந்த பெண்? கண்டித்த கனிமொழி, சேகர்பாபு!

CM விஜய்யை இழிவாக பேசிய திமுக கவுன்சிலர் மீது வழக்கு..யார் அந்த பெண்? கண்டித்த கனிமொழி, சேகர்பாபு!

DMK Controversy: முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக மகளிர் அணி நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Written ByUmabarkavi K
Published: Oct 20, 2026, 09:52 AM IST|Updated: Oct 20, 2026, 10:20 AM IST
joinshare
CM விஜய்யை இழிவாக பேசிய திமுக கவுன்சிலர் மீது வழக்கு..யார் அந்த பெண்? கண்டித்த கனிமொழி, சேகர்பாபு!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை: சென்னையில் ஆட்சேர்ப்பு - டிகிரி / டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை: சென்னையில் ஆட்சேர்ப்பு - டிகிரி / டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

2

புதிய தலைமைச் செயலகமாக மாறும் பல்லவன் இல்லம் – ஒரு வாரத்தில் அதிரடி முடிவு! Explained

3

சுக்கிரன் அஸ்தமனம்: இந்த 3 ராசிகளுக்கு நவம்பர் வரை பொற்காலம்.. வெற்றி, அதிர்ஷ்டம் பெருகும்

4

தங்கம், கச்சா எண்ணெய் முதல் தலால் ஸ்ட்ரீட் பங்குகள் வரை: AI மூலம் கமாடிட்டி சந்தையை எளிதாக்கும் க்வாலா இன்டெல்

5

அனிருத்-காவ்யா திருமணம்! 4 குடும்பங்கள் மட்டும் தனி விமானத்தில் கிரீஸ் பயணம்..யார் யார்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

DMK Controversy: சென்னை நேற்று முன்தினம் (அக்டோபர் 7) திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. திமுக சென் கிழக்கு மாவட்டம் ஏற்பாட்டில்,  திமுக மகளிர் தொண்டரணி சார்பில் அக்கட்சியின் மும்பபெரும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.  அப்போது, திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் முதலமைச்சர் விஜய்யை இழிவாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திமுக மகளிர் அணி நிர்வாகி சர்ச்சை பேச்சு

திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மேடையில் பேசியதாவது, "சட்டப்பேரவையில் அமர்ந்து, எங்கள் தலைவர் (ஸ்டாலின்) அழகை குறை சொல்கிறார். எங்கள் தலைவருக்கு வயது 74. உனக்கு என்ன வயது 52 வயது தான்” போன்று அவர் சொன்ன வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு இருந்தது. அந்தளவுக்கு முதல்வர் விஜய் தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசினார்.  கவுன்சிலர் சுதா தீனதயாளன் பேசுகையில் மேடையில் அமர்ந்துக் கொண்டிருந்த மேயர் பிரியா சிரிக்க, கனிமொழி எம்பி முகம்சுழித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சர்ச்சையை கிளப்பியது.  

மேலும் படிக்க: இரவு முதல் தீவிரமாக கனமழை பெய்யும் .. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் அப்டேட்!

கனிமொழி, சேகர்பாபு கண்டனம்

திமுக பெண் நிர்வாகியின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  மேடையில் ஆவேசமாக திமுக பெண் நிர்வாகி பேசியதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்ச்ர சேகர்பாபு மேடையிலேயே கண்டித்தார். அவர் கூறுகையில், "சுதாவுக்கு ஒரு அறிவுறுத்தல். வேகமாகவும், கோவமாகவும் பேசுகிறீர்கள். ஆனால், நாம் நாகரித்தில் இருந்து விடுபடாமல் பேச வேண்டும். ஒருமையில் எல்லாம் பேசக் கூடாது" என தெரிவித்தார்.

தொடர்ந்து, அதே மேடையில் கனிமொழி எம்பி பேசுகையில், "நம் எதிராளிகள் யாராக இருக்கிறார்கள் என்பதை வைத்து, நாம் நம்மை உருவாக்கி கொள்ளக் கூடாது. அவர்கள் பேசட்டும்.  அவர்களுக்கு தெரிந்த அவர்களின் தரம் அவ்வளவு தான். நாம் தந்தை பெரியார்,  அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்திருப்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேச வேண்டும். இதுதான் மேடையில் இருப்பவர்களுக்கு நாம் வைக்கும் கோரிக்கை" என கூறினார்.

போலீசார் வழக்குப்பதிவு

திமுக வில்லிவாக்கம் பகுதி 95வது வட்ட கவுன்சிலர்  சுதா தீனதயாளன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முரளி ஆகியோர் மீது தவெக துறைமுக பகுதி  செயலளார் உதயகுமார் பி2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகாரை அடுத்து, பி2 எஸ்பிளனேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய, திமுக கவுன்சிலரை கைது செய்ய வேண்டும் என தவெகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: RTI மனுக்களுக்கு அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

அமைச்ச்ர ஆதவ் அர்ஜுனா கண்டனம்

திமுக பெண் நிர்வாகியின் பேச்சுக்கு ஏற்கனவே தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்தன; அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 

ஆனால், அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க., அரசியல் மேடைகள் தனிநபர் தாக்குதல் மேடைகளாக மாறின; அதுவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கும் தி.மு.க-வின் தற்போதைய மேடைகள், ஆபாசப் பேச்சுக்கள் - அசிங்கமான வார்த்தைகள் - அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அருவருப்பான மேடைகளாக மாறிவிட்டன.

அதுவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தோற்று வீட்டில் முடங்கி இருக்கும் தி.மு.க., தன் ஆற்றாமையை, காழ்ப்புணர்வை தன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்துகிறது. அவற்றில் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் மேடைகளை தி.மு.க-விற்கு எதிரணியில் இருக்கும் அரசியல் கட்சிகளை, அரசியல் கட்சிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாகத் தாக்கும் களங்கம் சூழ்ந்த களமாகப் பயன்படுத்தி வருகிறது.

ஒரு காலத்தில் அழகிய தமிழின் அடுக்குமொழிகளால் கட்சியை வளர்த்த தி.மு.க-வினர் இன்றைக்கு அசிங்கமான பேச்சுக்கள், ஆபாசமான வாக்கியங்கள், கொச்சையான வார்த்தைகளுக்குள் முடங்கிப்போய் கிடக்கின்றனர். அவர்களை முறைப்படுத்தி கட்சியை வளர்க்கும் வழி தெரியாமல் அந்தக் கட்சியின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். 

தந்தை பெரியாரின் பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிக் கருத்துக்களையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்கு வகுத்துக் கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற இலக்கணத்தையும் மறந்துவிட்ட தி.மு.க-வினர்... அவர்களுடைய இதுபோன்ற அவதூறுகளையும் ஆபாசப் பேச்சுக்களையும் கடந்துதான் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தமிழக மக்களின் மனங்களிலும் நிரந்தர வெற்றியைப் பெற்றுள்ளார்; இனியும் பெற்றுக் கொண்டே இருக்கப்போகிறார் என்பதையாவது மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மேலும் படிக்க: நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக தகுதி மதிப்பெண்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

 

Add Zee News as a Preferred Source
TAGS:
DMK