• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு குட் நியூஸ்! CM விஜய் அறிவித்த புதிய திட்டங்கள்.. என்னென்ன?

தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு குட் நியூஸ்! CM விஜய் அறிவித்த புதிய திட்டங்கள்.. என்னென்ன?

CM Vijay Announcement: தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு புதிய திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் விஜய் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

Written ByUmabarkavi K
Published: Oct 19, 2026, 01:59 PM IST|Updated: Oct 19, 2026, 02:09 PM IST
joinshare
தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு குட் நியூஸ்!  CM விஜய் அறிவித்த புதிய திட்டங்கள்.. என்னென்ன?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சிஎஸ்கே அணிக்குள் வரும் உதய் சகரன்? யார் இவர்? முழு விவரம்!

சிஎஸ்கே அணிக்குள் வரும் உதய் சகரன்? யார் இவர்? முழு விவரம்!

2

பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை! நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..யாருக்கெல்லாம்?

3

ஐஐடியில் தொடர் மர்மம்.. பாஜக ஆட்சியில் அதிகரித்த மாணவர்களின் மரணங்கள்.. பகீர் ரிப்போர்ட்!

4

விஜயதசமி 2026 : குழந்தைகளை ‘அ..ஆ’ எழுத வைக்கலாம்! நல்ல நேரம் எது? இதோ முழு விவரம்..

5

கதையே மாறப்போகுது..இனி சமூக வலைதளத்தில் ஒரு தலைபட்ச கருத்தே வராது! மத்திய அரசு அதிரடி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

CM Vijay Announcement: சமீபத்தில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் தாராபுரம் தொகுதியில்  தவெகவின் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்று, இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். இந்த நிலையில், தாராபுரம், மதுராந்தகம்  தொகுதிகளுக்கு புதிய திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதிக்கான புதிய திட்டங்கள்

  • அத்திமனம் கிராமத்தில் புக்கத்துறை மடுவின் குறுக்கே ஒரு தடுப்பணை சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். செம்பூண்டி ஊராட்சியில் உள்ள பொதுப்பணித் துறை ஏரியின் மதகுகள் சுமார் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
  • நெல்வாய் ஊராட்சியிலுள்ள மடுவைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தும் பணி சுமார் 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். தின்னலூர் ஊராட்சியில் ஒரு புதிய சமுதாய நலக்கூடக் கட்டடம் சுமார் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • மதுராந்தகம் தொகுதியில் தலா 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 நெல் கொள்முதல் நிலையங்கள் சுமார் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • கொள்முதல் செய்யப்படும் நெல்லினைப் பாதுகாக்கும் வகையில் ஆத்தூரில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட SEMI COVERED கிடங்கு அமைக்கப்படும். மேலும், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் மாநில விதைப் பண்ணை அமைக்கப்படும்.
  • மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசரகாலச் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்
  • மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேற்கொள்ளப்படும்.
  • மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்

மேலும் படிக்க: "2 ஆண்டில் பணம் இரட்டிப்பு": தமிழ்நாட்டில் பரவும் கவர்ச்சி விளம்பரங்கள் – அரசு எச்சரிக்கை

  • மதுராந்தகம் நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கான ஒரு புதிய தங்கும் விடுதி அமைக்கப்படும். மேலும், படித்த இளைஞர்களுக்காக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கப்படும்
  • புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும். கருங்குழியில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மினி விளையாட்டு மைதானம் சுமார் 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்துத்தரப்படும்
  • மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் கூடுதலாக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 MVA திறன்கொண்ட மின்மாற்றி நிறுவப்படும்.

தாராபுரம் தொகுதிகளுக்கான புதிய திட்டங்கள்

  • தாராபுரம், காங்கேயம், குண்டடம். பொங்கலூர், வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மூலனூரின் ஊராட்சிகள், பல்லடத்தின் 17 ஊராட்சிகளைச் சார்ந்த மொத்தம் 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்கு, காவிரி ஆற்றுநீரினை ஆதாரமாகக் கொண்ட 7 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் 1,439 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  • தாராபுரம் சட்டமன்றத் வீடற்றவர்களுக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்
  • தாராபுரம் வட்டம், சின்னபுத்தூர் கிராமம், மஜரா குருவப்ப நாயக்கன் பாளையத்தில் 20 ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருந்துவரும் சுமார் 87 குடும்பங்களுக்குப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தாராபுரம், மூலனூர், குண்டடம் வட்டாரங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து, சுமார் 13,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்

மேலும் படிக்க: TN Shutdown: தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.. எங்கெல்லாம்? பட்டியல் இங்கே!

  • தாராபுரம் வட்டம், மூலனூரில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும்.
  • தாராபுரம் நகராட்சியில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளும், சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளும், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளும், மேலும் மழைநீர் வடிகால் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
  • திருப்பூர் மாவட்டத்தில், பாசன கால்வாய்களில் உள்ள மண்திட்டுக்களை அகற்றி தூர்வாரும் 159 பணிகள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy