• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /திருப்பதி செல்வோருக்கு குட் நியூஸ்! ஏழுமலையானை ஈஸியா தரிசிக்கலாம்.. தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

திருப்பதி செல்வோருக்கு குட் நியூஸ்! ஏழுமலையானை ஈஸியா தரிசிக்கலாம்.. தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

Tirupati Special Buses: திருப்பதியில் நடைபெற உள்ள பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 08, 2026, 08:29 AM IST|Updated: Oct 08, 2026, 08:38 AM IST
joinshare
திருப்பதி செல்வோருக்கு குட் நியூஸ்! ஏழுமலையானை ஈஸியா தரிசிக்கலாம்.. தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : இன்ஸ்டா பிரபலத்தின் விபரீத முடிவு..முத்துக்குமரன் காரணமா? நடந்தது என்ன?

Explained : இன்ஸ்டா பிரபலத்தின் விபரீத முடிவு..முத்துக்குமரன் காரணமா? நடந்தது என்ன?

2

SRH அணியில் கேப்டன்சி மோதல்? வெளியேற துடிக்கும் அபிஷேக் சர்மா – களமிறங்கிய யுவராஜ் சிங்!

3

ஈனச்செயல்.. அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மனித மிருகங்கள்.. மூடிமறைத்த பள்ளி நிர்வாகம்?

4

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை: டிகிரி போதும், 321 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

5

ஆண்களுக்கு சூப்பர் நியூஸ்! வெற்றிப் பயணம் பஸ்களில் கட்டணம் குறைப்பு? அரசு அதிரடி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tirupati Special Buses: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி பிரம்மோற்சவம்

அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திர பிரம்மோற்சவம் வருகிற அக்டோபர் 12ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்தை காண, ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருப்பதியில் கட்டுக்கடங்காக கூட்டம் இருக்கும். அக்டோபர் 12ஆம் தேதி கொடியேற்றம் நடைக்கிறது. அக்டோபர் 13ஆம் தேதி சின்ன சேஷ வாகனம், அக்டோபர் 14ஆம் தேதி சிம்ம வாகனம், அக்டோபர் 15ஆம் தேதி கல்பவிருட்ச வாகனம், அக்டோபர் 16ஆம் தேதி நவராத்திரி கருட சேவை நடைபெறுகிறது.

அக்டோபர் 17ஆம் தேதி கஜ வாகனம், அக்டோபர் 18ஆம் தேதி சந்திர பிரபை வாகனம், அக்டோபர் 19ஆம் தேதி தங்கத் தேரோட்டம், அக்டோபர் 20ஆம் தேதி சக்கர ஸ்நானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. இதனை காண ஏராளமான பக்தரக்ள் வருகை தருவார்கள்.

மேலும் படிக்க: தமிழகத்தில் வாக்காளர் பெயர்கள் நீக்கம்? ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன்? திமுக காட்டம்!!

சிறப்பு பேருந்து இயக்கம்

இதன் காரணமாக, தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  திருப்பதி திருமலையில் நடக்கும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக்டோபர் 8ஆம் தேதியான இன்று முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை பக்தர்களின் தேவைக்கேற்ப தினசரி 100 சிறப்பு பேருந்துகள் திருப்பதிக்கு இயக்கப்பட உள்ளது.

 

திருப்பதி திருமலையில் “பிரம்மோத்ஸவம்” திருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக 08.10.2026 முதல் 21.10.2026 வரை பக்தர்களின் தேவைக்கேற்ப தினசரி 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #Tirupati @CMOTamilnadu | @TamilanParthib1 | @TNDIPRNEWS

— ArasuBus (@arasubus) October 7, 2026

சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தாம்பரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர், ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள்  இயக்கப்பட உள்ளது. 

திருப்பதியில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள்  இயக்கப்பட உள்ளது. திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ள tnstc மொபைல் செயலி வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுஙகள். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 149 என்ற கட்டணமில்லை தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் நாளை (அக்.8) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu