TN Govt Free Cow Scheme: தமிழக அரசு பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடந்த முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலும் விஜய் தலைமையிலான தவெக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதனை செயல்படுத்தும் விதமாக அந்தந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கி வருகிறது. அந்த வகையில், கறவை மாடுகள் வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, 2026-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு பால் உற்பத்தியிலும், பால் கொள்முதல் செய்வதிலும், தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. பால் உற்பத்தியினை மேலும் அதிகரிக்கவும், ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவைமாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
அந்த செயல்படுத்திடும் வகையில், அறிவிப்பினைச் ஊரகப் பகுதிகளில் வாழும் தகுதிவாய்ந்த 10.000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்குவதற்காக 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு 57 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதி பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள்! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople https://t.co/trH8zesO58
— TN DIPR (@TNDIPRNEWS) October 27, 2026
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 8 லிட்டர் பால் கறக்கும் திறனுள்ள ஒரு ஆரோக்கியமான, அதிக பால் தரும் கலப்பினக் கறவை மாடு வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பயனாளி குடும்பத்திற்கு வழக்கமான வருமான ஆதாரம் உறுதி செய்வதுடன், முறையான கால்நடை பராமரிப்பு மற்றும் அறிவியல் மேலாண்மை ஆகியவற்றின் மூலம், ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மாடும் மூன்று முதல் நான்கு கன்றுகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது நீண்ட காலச் சொத்து உருவாக்கம் மற்றும் நிலையான பொருளாதார நன்மைகளுக்கும் வழிவகுக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கறவை மாடுகளை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.