• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்குவோருக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 1 முதல் டாஸ்மாக்கில் புதிய நடைமுறை!

ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்குவோருக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 1 முதல் டாஸ்மாக்கில் புதிய நடைமுறை!

Tasmac Digital Payments: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.1000க்கு மேல் மதுபோனம் வாங்குசூவாருக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலாக உள்ளது. ரூ.1,000க்கு மதுபானம் வாங்குவோர் யுபிஐ வாயிலாக பணத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 27, 2026, 04:16 PM IST|Updated: Oct 27, 2026, 04:52 PM IST
joinshare
ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்குவோருக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 1 முதல் டாஸ்மாக்கில் புதிய நடைமுறை!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
5 மாதங்கள்.. 50 கைதிகள் தப்பி ஓட்டம்.. சட்டம் ஒழுங்கில் கோட்டை விடும் CM  விஜய்! Explained

5 மாதங்கள்.. 50 கைதிகள் தப்பி ஓட்டம்.. சட்டம் ஒழுங்கில் கோட்டை விடும் CM விஜய்! Explained

2

தினமும் 8 லிட்டர் பால்.. இலவச கறவை மாடுகள் திட்டம்.. பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

3

ஹைதராபாத்தில் வற்றிப்போன தண்ணீர்! எமர்ஜென்சி நிலை அறிவிப்பு..8 மாசத்திற்கு கஷ்டம்..

4

இஸ்ரேல் தேர்தல் 2026: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா... ஏன்? காரணம் என்ன? -Explained

5

60000 உழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்! வெளியான அதிரடி அறிவிப்பு..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tasmac Digital Payments: தமிழகம் முழுவதும் மொத்தம் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, டாஸ்மாக்கில் சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.1000க்கு மேல் மதுபோனம் வாங்குசூவாருக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலாக உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் புதிய நடைமுறை

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட  அறிவிப்பின்படி, அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும் தற்போது, ரொக்கமில்லா மின்னணு பணப்பரிவர்த்தனையைப் படிப்படியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகைகளுக்கு மேல் மதுபானங்கள் வாங்கும் நுகர்வோரிடமிருந்து விற்பனைத் தொகை மின்னணு முறையில் (UPI/ கிரெடிட்/டெபிட் கார்டு) மட்டுமே பெறப்பட வேண்டும். அதன்படி, 

  • நவம்பர் 1ஆம் தேதி முதல் ரூ.1,000க்கு மதுபானம் வாங்குவோர் யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டு வாயிலாக பணத்தை செலுத்த வேண்டும்.
  • 2027, ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ.500க்கு மேல்  டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குவோர் யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டு வாயிலாக பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வரம்பு வரையிலான (அத்தொகை உட்பட) விற்பனைகளுக்கு நுகர்வோர் தமது விருப்பப்படி ரொக்கமாகவோ மின்னணு முறையிலோ தொகை செலுத்தலாம். ஒரு விற்பனை' என்பது ஒரே நேரத்தில் ஒரு நுகர்வோருக்கு வழங்கப்படும் மதுபானங்களின் மொத்த மதிப்பைக் குறிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. யாருக்கு எவ்வளவு? முதல்வர் விஜய் அறிவிப்பு

மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவு

தங்கள் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சில்லறை விற்பனை கடையிலும் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட, செயல்படும் நிலையிலுள்ள POS இயந்திரமும் 01112026. க்கு முன்னரே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறைபாடு உள்ள இயந்திரங்களை சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப பணியாளருடன் தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும் அல்லது மாற்று இயந்திரங்களை பெற்று கொள்ள வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட, POS இயந்திரத்தின் மூலமாக மட்டுமே மேற்கண்ட மின்னணு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆன்லைன் பரிவர்த்தனை ஏன்?

நாள்தோறும் பெறப்படும் பெருந்தொகையைக் கடையில் பாதுகாப்பாக வைத்திருப்பதில் எதிர்கொள்கின்றனர் கடைப் பணியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ரொக்கத்தை வங்கியில் செலுத்துவதற்காகப் பணியாளர்கள் நாள்தோறும் பயணிக்க வேண்டியிருப்பதால், அவர்களின் பணிச்சுமையும் இடர்பாடும் அதிகரிக்கின்றன.

ரொக்கப் பரிவர்த்தனையில் கள்ள நோட்டுகள், பணப் பற்றாக்குறை மற்றும் கணக்கு வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.  அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு (MRP) மேல் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன. ரொக்கப் பரிவர்த்தனையில் செலுத்தப்பட்ட தொகைக்குச் சான்று இல்லாததால், இத்தகைய புகார்களைத் தடுப்பதும் விசாரணை மேற்கொள்வதும் கடினமாக உள்ளது.

மின்னணு முறையில் விற்பனைத் தொகை பெறப்படும்போது ஒவ்வொரு பரிவர்த்தனையின் தொகையும் நேரமும் பதிவாகுவதால், MRP-க்கு மேல் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது தவிர்க்கப்படுவதுடன், விற்பனைத் தொகை நேரடியாகக் கழகத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க: அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu