• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /திருப்பரங்குன்றத்தில் CRPF... பிரதமர் பதிவு முதல் கம்யூனிஸ்ட்களின் பேரணி வரை - பரபரக்கும் அரசியல் களம்

திருப்பரங்குன்றத்தில் CRPF... பிரதமர் பதிவு முதல் கம்யூனிஸ்ட்களின் பேரணி வரை - பரபரக்கும் அரசியல் களம்

திருப்பரங்குன்றம் கல் தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் சூழலில், சிஆர்பிஎப் படை அங்கு வருகை தந்துள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பிரதமர் மோடியின் X பதிவு அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. திமுக தவெக அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் சூழலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மதநல்லிணக்க பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

Written BySudharsan G
Published: Nov 28, 2026, 07:02 IST|Updated: Nov 28, 2026, 07:10 IST
joinshare
திருப்பரங்குன்றத்தில் CRPF... பிரதமர் பதிவு முதல் கம்யூனிஸ்ட்களின் பேரணி வரை - பரபரக்கும் அரசியல் களம்
Image Credit: AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
காங்கிரஸ் பல்டி.. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு.. காரணத்தை விளக்கிய ஸ்டாலின்!

காங்கிரஸ் பல்டி.. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு.. காரணத்தை விளக்கிய ஸ்டாலின்!

2

தமிழகத்திற்கு கூடுதலாக எத்தனை சீட்? நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தொகுதி மறுவரையறை!

3

கோவையில் ஷாக்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, கணித ஆசிரியர் போக்சோவில் கைது

4

Delimitation மசோதாவை ஆதரிக்க... சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி? - பரபர டெல்லி அரசியல்

5

போக்சோ சட்டத்தில் DSP கைது: காவலர் பயிற்சி மையத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... வண்டலூரில் ஷாக்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Thiruparankundram Deepam Issue: கடந்த கார்த்திகை தீபம் தினத்தன்று (நவ. 24)மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலின் தீப மண்டபத்திலும், மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹா அருகில் உள்ள கல் தூணிலும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் கடந்த நவ. 20ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அந்த தீர்ப்பின் மீது இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இந்தாண்டு கார்த்திகை திபம் தினத்தன்று மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்திருந்தது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம்.. பக்தர்களுக்கு அனுமதி.. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்

இன்று தீபம் ஏற்ற உத்தரவு

இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை. இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பலர் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இன்றைய தினம் (நவ. 28) கல் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

  • தீப மண்டபத்தில் இருந்தோ அல்லது மாற்று வழியிலோ தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
  • அதேநேரத்தில் திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள பகுதி முழுவதும் சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்.
  • பாதுகாப்புக்கு உட்பட்டு தர்ஹாவில் இருந்து 50 மீட்டர் சுற்றளவு தாண்டி அனைத்து பக்கங்களிலும் தீபம் ஏற்றலாம்.
  • திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் தர்ஹா்வை வேறுபடுத்தும் விதமாக அதை சுற்றி தற்காலிக வேலி அமைக்கலாம்.
  • திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் சம்மன் மற்றும் அறங்காவலர் குழுவை கலைத்து உத்தரவு.
  • முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழு நியமனம். இந்த குழு உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்.
  • வரும் டிசம்பர் 15ஆம் தேதி திருப்பரங்குன்ற தீப வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவு. காணொளி வாயிலாக ஆஜராக வைத்து கோரிக்கை நிராகரித்தது.

சூடுபிடிக்கும் அரசியல் களம்

இதை முன்னிட்டு, பாஜகவினர், வலதுசாரிகள், இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பெரியாரிய மற்றும் இடதுசாரி அமைப்புகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

பிரதமர் மோடியின் பதிவு

பிரதமர் மோடி அவரது X பக்கத்தில், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என ஆங்கிலம், தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் பதிவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் பதிவை வரவேற்று குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கமெண்ட் செய்துள்ளார்.

Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!

— Narendra Modi (@narendramodi) November 27, 2026

மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு, மதநல்லிணக்கம், மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற தவெக அரசு என்றும்; திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி என்றும் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக சாடி உள்ளார்.

தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.

— M.K.Stalin (@mkstalin) November 27, 2026

இடதுசாரிகளின் பேரணி

அதேநேரத்தில், சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்) இணைந்து இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும்; இந்த பேரணியில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணையுமாறும், பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறும் வேண்டுகோள் விடுப்பதாகவும் இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ(எம்.எல்) லிபரேசன் இடதுசாரி கட்சிகளின் கூட்டறிக்கை: உச்சநீதிமன்றத் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது! நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி! இடதுசாரி கட்சிகள் அறைகூவல்! https://t.co/y7FudoATm0

— Shanmugam P (@Shanmugamcpim) November 27, 2026

CRPF வருகை

இந்தச் சூழலில், மதுரை திருப்பரங்குன்றத்திற்கு சிஆர்பிஎப் வீரர்கள் வருகை தந்துள்ளனர். திருப்பரங்குன்றம் முழுவதையும் சிஆர்பிஎப் தங்களின் கட்டுப்பாட்டில் எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் அதிரடி திருப்பம் - கெடு விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu