• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /கோவையில் ஷாக்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, கணித ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் ஷாக்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, கணித ஆசிரியர் போக்சோவில் கைது

Coimbatore Crime News: கோவையில் உள்ள ஒரு மாநகராட்சி பண்ணியில் கணித ஆசிரியராக பணிபுரிபவர் செந்தில்குமார். இவருக்கு வயது 45. அவர் அந்த பள்ளியின் மாணவிகள் சிலருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் கடுமையான அச்சம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இது பற்றி கூறி அழுதுள்ளனர்.

Written BySripriya Sambathkumar
Published: Nov 28, 2026, 10:43 IST|Updated: Nov 28, 2026, 10:47 IST
joinshare
கோவையில் ஷாக்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, கணித ஆசிரியர் போக்சோவில் கைது
Image Credit: Representative / Teacher arrested under POCSO in Coimbatore

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது..! 100 ஆண்டு கனவு நிறைவேறியதாக இந்து அமைப்பினர் மகிழ்ச்சி..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது..! 100 ஆண்டு கனவு நிறைவேறியதாக இந்து அமைப்பினர் மகிழ்ச்சி..

2

பெண்களுக்கு இலவச ஆடு, மாடுகள்! தமிழக அரசின் டபுள் ஜாக்பாட் அறிவிப்பு.. எப்படி பெறுவது?

3

இனி ஆடு, மாடுனுதான் அழைக்கணும்! பெண்களை வெறுக்கும் தாலிபான்கள்.. ஆப்கானிஸ்தானில் அட்டூழியம்

4

இனி டிவிலையும் ரீல்ஸ் பாக்கலாம்! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..மெட்டா அறிவிப்பு

5

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் 45 வயதுடைய கணித ஆசிரியர், 11ஆம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் தகவல்படி, செந்தில்குமார் என்ற அந்த ஆசிரியர், சில மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்தச் சம்பவங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவிகளில் மூவர், இது குறித்துத் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | Tamil News LIVE: திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம்; சிறையில் தவெக எம்எல்ஏ; வானிலை அப்டேட்

போக்சோவில் கைதான ஆசிரியர்: நடந்தது என்ன?

கோவையில் உள்ள ஒரு மாநகராட்சி பண்ணியில் கணித ஆசிரியராக பணிபுரிபவர் செந்தில்குமார். இவருக்கு வயது 45. அவர் அந்த பள்ளியின் மாணவிகள் சிலருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் கடுமையான அச்சம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இது பற்றி கூறி அழுதுள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், இது குறித்து விசாரிக்க பள்ளிக்கு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து பெற்றோர் வியாழக்கிழமை அன்று கோயம்புத்தூர் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் விசாரணை நடத்தினர்.

காவல்துறை அதிகாரிகள் மூலம் பள்ளியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், செந்தில்குமார் மாணவிகளைத் தவறான முறையில் தொட்டுப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | போக்சோ சட்டத்தில் DSP கைது: காவலர் பயிற்சி மையத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... வண்டலூரில் ஷாக்

இந்த வழக்கில் காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

தனி மனித ஒழுக்கம் அவசியம்

ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. நேற்று காவல் துறை DSP ஒருவரும் போக்சோ சட்டட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பொறுப்பான பதவிகளில் இருக்கும், குழந்தைகளுக்கு வழிகாட்டும், குழந்தைகளை பாதுகாக்கும் பதவிகளை வகிக்கும் நபர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான குற்றங்களில் ஈடுபடுவது சமூக சீர்கேட்டின் எடுத்துக்காட்டாக உள்ளது. கடுமையான சட்டங்கள் ஒரு புறம் இருந்தாலும், தனி மனித ஒழுக்கமும், கட்டுப்பாடும் இந்த காலத்தில் மிக அவசியமானவையாக உள்ளன.

மேலும் படிக்க | அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு.. பள்ளி திறப்பு எப்போது? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime