• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /தமிழகத்திற்கு கூடுதலாக எத்தனை சீட்? நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தொகுதி மறுவரையறை!

தமிழகத்திற்கு கூடுதலாக எத்தனை சீட்? நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தொகுதி மறுவரையறை!

Delimitation Bill Explained: தொகுதி மறுவரையறை மசோதாவில் திருத்தம் செய்து, மத்திய அரசு புதிய மசோதா நகலை வெளியிட்டுள்ளது. புதிய மசோதாவின்படி, அனைத்து மாநிலங்களிலும் மக்களவை இடங்கள் 50 சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 28, 2026, 10:51 IST|Updated: Nov 28, 2026, 11:26 IST
joinshare
தமிழகத்திற்கு கூடுதலாக எத்தனை சீட்? நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தொகுதி மறுவரையறை!
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
காங்கிரஸ் பல்டி.. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு.. காரணத்தை விளக்கிய ஸ்டாலின்!

காங்கிரஸ் பல்டி.. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு.. காரணத்தை விளக்கிய ஸ்டாலின்!

2

தமிழகத்திற்கு கூடுதலாக எத்தனை சீட்? நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தொகுதி மறுவரையறை!

3

கோவையில் ஷாக்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, கணித ஆசிரியர் போக்சோவில் கைது

4

Delimitation மசோதாவை ஆதரிக்க... சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி? - பரபர டெல்லி அரசியல்

5

போக்சோ சட்டத்தில் DSP கைது: காவலர் பயிற்சி மையத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... வண்டலூரில் ஷாக்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Delimitation Bill Explained: பெரும் எதிர்ப்பாப்புக்கு மத்தியில் நவம்பர் 30ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால சிறப்பு கூட்டத்தொடர் கூடவுள்ளன. இந்த கூட்டத்தொடரில்  முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதாவது, தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக 3 திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில்  ஆளும் பாஜக நிறைவேற்றப்பட உள்ளன.

3 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

2029 லோக்சபா தேர்தலில், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைக்கப்பட்ட  மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜக அறிமுகம் செய்த நிலையில், அப்போது போதிய பெரும்பான்மை கிடைத்ததால் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், வரும் 30ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், இதில் 3 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்மிட்டுள்ளது.

  • 132வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா (மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது)
  • மாநிலங்களில தொகுதி மறுவரையறை மசோதா
  • யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா 2026

புதிய மசோதாவில் இருப்பது என்ன?

கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் திருத்தம் செய்து, புதிய மசோதா நகலை நேற்று மத்திய அரசு வெளியிட்டது. புதிய தொகுதி மறுவரையறை மசோதாவின் படி, அனைத்து மாநிலங்களிலும் மக்களவை இடங்கள் 50 சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசத்திலும் மக்களவை தொகுதிகள் 50% உயர்த்த முன்மொழிந்துள்ளது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 550ல் இருந்து 815 ஆக உயர்த்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத மசோதாவில் இடம்பெறாத 50% உயர்வு தற்போது எழுத்துப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.

மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 650ஆக உயர்த்தவும் முன்மொழி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை பின்பற்றி தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்ய முன்மொழிந்துள்ளது. 2051ஆம் ஆண்டு வரை மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தில் மாற்றம் இருக்காது, மகளிர் இடஒதுக்கீடு (33 சதவீதம்) சட்டத்தை உடனடியாக அமல்படுத்த இது வழிவகுக்கும் என திருத்தப்பட்ட புதிய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம் நாடு முழுவதும் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்து, 2029ம் ஆண்டில் 815 மக்களை தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் நடைபெறும்.

எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் உயரும்?

தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மத்திய அரசு கொண்டு வரும் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவின்படி, 50 சதவீத உயர்வு அடிப்படையில் தமிழக தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிரதிநிதித்துவ பங்கை பொறுத்தவரை, அனைத்து மாநிலங்களுக்கும் சீராக 50 சதவீதம் உயர்த்தப்படும் பட்சத்தில், தேசிய அளவில் தமிகத்தின் பிரதிநிதித்துவப் பங்கு தற்போதைய 7.18 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும். இதன் மூலம் தொடர்ந்து தமிழகம் பிரதிநிதித்துவ விகிதத்தை தக்க வைத்து கொள்கிறது. எனவே தமிழகம் உட்பட  அனைத்து மாநிலங்களின் உத்தேச பட்டியலை பார்ப்போம்.

மாநிலம்தற்போதைய தொகுதிகள்50% உயர்வு   அதிகரிக்கும் தொகுதிகள்
உத்தர பிரசேதம்8040120
மகாராஷ்டிரா482472
மேற்கு வங்கம்422163
பீகார்402060
தமிழ்நாடு3919.558.5
மத்திய பிரதேசம்2914.543.5
கர்நாடகா2814.543.5
குஜராத்261339
ஆந்திரா2512.537.5
ராஜஸ்தான்2512.537.5
ஒடிசா2110.531.5
கேரளா201030
தெலங்கானா178.525.5

யூனியன் பிரதேசங்களின் நிலை?

  • டெல்லியை பொறுத்தவரை தற்போது 7 மக்களவை தொகுதிகள் இருக்கும் நிலையில், புதிய மசோதாப்படி 10 தொகுதிகளாக உயரும்
  • ஜம்மு காஷ்மீர் மக்களவை தொகுதி 5ல் இருந்து 7ஆக உயரும்.
  • புதுச்சேரியை பொறுத்தவரை ஒரு தொகுதியில் இருந்து 1.5 என்ற தொகுதி அடிப்படையில் உயரும்
  • சண்டிகரில் தற்போது உள்ள ஒரு தொகுதியில் இருந்து 1.5 என்ற தொகுதி அடிப்படையில் உயரும்

உள்ளிட்ட 8 யூனியன் பிரசேதங்களின் தொகுதி எண்ணிக்கை 19ல் இருந்து 28 ஆக உயரக்கூடும்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது எப்படி?

அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாக்கள் என்பதால் இவற்ற நிறைவேற்ற  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை. மக்களவையில் தற்போது நிலவரப்படி, 540 எம்பிக்கள் உள்ளனர். மக்களவையில் ஆளுங்கட்சிக்கு 362 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.மக்களவையில் பாஜக கூட்டணியில் 319 எம்.பிக்கள் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் 183 எம்பிக்கள் உள்ளனர். இவர்களை தவிர்த்து  திமுக (22), ஆம் ஆத்மி (3) உள்ளிட்ட கட்சிகளிடம் 38 எம்பிக்கள் உள்ளனர்.  

தற்போதைய சூழலில், மக்களவில் மசோதாக்களை நிறைவேற்ற ஆளுங்கட்சிக்கு 41 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மாநிலங்களவைல் தற்போது  243 எம்பிக்கள் உள்ளனர். தற்போதைய சூழலில், மாநிலங்களவையில் ஆளுங்கட்சிக்கு மசோதாக்களை நிறைவேற்ற 11 எம்பிக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. மாநிலங்களவையில் பாஜக கூட்டணியில் 151 எம்பிக்கள் உள்ளனர். காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கு 64 எம்பிக்கள் உள்ளனர். இந்த இரு கூட்டணிகளையும் தவிர்த்து திமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடம் 28 எம்பிக்கள் உள்ளனர்.

திமுக ஆதரவு

இந்த மசோதாவை நிறைவேற்ற திமுகவின் ஆதரவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மக்களவையில் திமுகவில் உள்ள 22 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தால், தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது.  தற்போது வரவிருக்கும் புதிய மசோதா,  தமிழத்தின் இதே விகிதாசாரத்தை நிலைக்க வைக்குமானால் திமுக எம்பிக்கள் வரவேற்பார்கள் என சொல்லப்பட்டது. திமுக ஆரம்ப கட்டத்தில் இருந்தே பழைய தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்தது. திமுக வலியுறுத்திய fair  தொகுதி மறுவரையறை என்பது, 1971  மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தமிழகத்தில் தற்போதைய பிரதிநிதித்துவம் தொடரும்படி செய்ய வேண்டும் என்பது தான்.

மாறாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மறுவரையறை செய்தால்,  தமிழகத்திற்கு 49 இடங்களே கிடைத்திருக்கும். 5.78 சதவீதமாக குறைந்திருக்கும். இதனால், தொகுதி மறுவரையறையை எதிர்த்த திமுக, தற்போது அதில் மத்திய திருத்தம் செய்துள்ளதால், திமுக தொகுதி மறுவரையறைக்கு ஆதரவளிக்கும் என அரசியல் வட்டாரத்தில் சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது  இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer