• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் கனமழை அலர்ட்.. வானிலை அப்டேட்

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் கனமழை அலர்ட்.. வானிலை அப்டேட்

TN Weather Update: தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 13)காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 13, 2026, 09:36 AM IST|Updated: Oct 13, 2026, 09:43 AM IST
joinshare
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் கனமழை அலர்ட்.. வானிலை அப்டேட்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு துறையில் வேலை.. மாதம் ரூ.40,000 சம்பளம் - முழு விவரம்!

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு துறையில் வேலை.. மாதம் ரூ.40,000 சம்பளம் - முழு விவரம்!

2

நெசவாளர்களுக்கு கூலி உயர்வு, விரைவில் அறிவிப்பு: அமைச்சர் எம். விஜய் பாலாஜி

3

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி! சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

4

இன்னும் 15 தொகுதிக்கு இடைத்தேர்தலா? போட்டு உடைத்த செங்கோட்டையன்.. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா?

5

அரசியலுக்கு வரும் நயன்தாரா? விக்னேஷ் சிவன் சொன்ன பதில்! என்ன சொன்னார்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழைக்கான எந்த அறிகுறியும்  இல்லாமல் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் கடந்த வருடம் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து. ஆனால், இந்த வருடன் அக்டோபர் தொடங்கிய பிறகும், மழைக்கான எந்த அறிகுறியும் இல்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது எல் நினோ.  எல் நினோ தாக்கத்தின் காரணமாக, பல இடங்களில் மழை பெய்யாமல், வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில்,  தற்போது தமிழகத்தில் அடுத்த சில தினங்களில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது

தென்மேற்கு பருவமழை விலக தொடங்கிய நிலையில், இன்று இரண்டு தினங்களில் வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிமையில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சுமார் 0.9 கிமீ உயரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.  சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, அக்டோபர் 13-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்று மழைக்கு வாய்ப்பா?

இதன் காரணமாக, அக்டோபர் 13ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 14ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர்,
நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை மையம் முக்கிய தகவல்

அக்டோபர் 15ஆம் தேதி கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.  ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 17ஆம் தேதி  நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather