• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு துறையில் வேலை.. மாதம் ரூ.40,000 சம்பளம் - முழு விவரம்!

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு துறையில் வேலை.. மாதம் ரூ.40,000 சம்பளம் - முழு விவரம்!

Kanyakumari Govt Job: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Oct 13, 2026, 11:36 AM IST|Updated: Oct 13, 2026, 11:46 AM IST
joinshare
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு துறையில் வேலை.. மாதம் ரூ.40,000 சம்பளம் - முழு விவரம்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
டாடா நினைவு மையத்தில் அருமையான வேலைவாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

டாடா நினைவு மையத்தில் அருமையான வேலைவாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

2

சென்னை தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

3

20 லட்சம் சம்பளம் பேசிவிட்டு 1 கோடி கேட்ட இயக்குநர்! யாரை சொன்னார் திருப்பூர் சுப்பிரமணியம்?

4

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு துறையில் வேலை.. மாதம் ரூ.40,000 சம்பளம் - முழு விவரம்!

5

நெசவாளர்களுக்கு கூலி உயர்வு, விரைவில் அறிவிப்பு: அமைச்சர் எம். விஜய் பாலாஜி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Kanyakumari Govt Job: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நாகர்கோவில், வடசேரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் இயங்கும் மாநகர பொது சுகாதார ஆய்வகத்திற்கு கீழ்கண்ட தற்காலிக பதவிகள் வெளிகொணர்வு முகமை மூலம் தேர்ந்தெடுக்க வெளிகொணர்வு முகமை நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி பட்டியல் வரவேற்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு

இதனை மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், நாகர்கோவில் 1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ முத்திரையிடப்பட்ட உறையில் (Sealed Cover) 20.10.2026 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இயங்கி வரும் மாநகர பொது சுகாதார ஆய்வகத்தில் கீழ்க்கண்டுள்ள பதவிகள் வெளிக்கொணர்வு முறையில் தேர்ந்தெடுக்கபப்பட உள்ளது.

பணி விவரம்காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை
நுண்ணுயிரியாளர் (Microbiologist)01
ஆய்வக நுட்புநர் நிலை 3 (Lab Techinician) 01
ஆய்வக உதவியாளர் (Lab Assistant)01

கல்வித்தகுதி, மாதாந்திர ஊதியம்

நுண்ணுயிரியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் MSC (Medical Microbiology) படித்திருக்க வேண்டும். இதற்கு மாத சம்பளமாக ரூ.44000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வக நுட்புநர் நிலை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் DMLT படித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.17,000 வழங்கப்படும். ஆய்வக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.11,000 மாத சம்பளமாக வழங்க வேண்டும்.

மேலும் படிக்க: சிறப்பு TET தேர்வு முடிவுகள் வெளியீடு.. ரிசல்ட் பார்ப்பது எப்படி? எத்தனை ஆசிரியர்கள் தேர்ச்சி?

நிபந்தனைகள்

  • வெளிக்கொணர்வு முகமை நிறுவனத்தின் நிர்வாக செலவு GST 18% , EPF Employee share 12% மற்றும் EPF Employer share 13% ஆகிய அனைத்தும் மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான மாதாந்திர ஊதிய வரம்பிற்குள் உட்பட்டு இருக்க வேண்டும்.
  • நிர்வாக செலவு 5% அடிப்படை ஊதியத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், குறைந்த பட்ச ஒப்பந்தப்புள்ளி வழங்கும் வெளிக்கொணர்வு முகமைக்கு பணி ஆணை (Work Order) வாங்கப்படும். (GST = 18% of basic pay and Employer share EPF 12% and Employer share EPF 13%, wherever applicable + Admin cost).
  • பணியாளரின் சொந்த EPF (Employee share) பங்கீடு (இருந்தால்) மேற்கண்ட ஊதிய வரம்பிற்குள் இருக்க வேண்டும் 12% Employee Share போக மீதமுள்ள தொகை ஊழியருக்கு ஊதியமாக வழங்கப்பட வேண்டும்
  • வெளிகொணர்வு முகமையின் பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியத்தினை பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட பணியாளர்கள் ஊதியம் பெற்றுக்காண்ட ஒப்புகையினை (Revenue stamp உடன்) மாதந்தோறும் பட்டியலுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  • தேசிய நல குழுமத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டும். தலைவர், மாவட்ட நலச் சங்கம் / மாவட்ட ஆட்சித்தலைவரால் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் உத்திரவுகளுக்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • வெளிக்கொணர்வு முகமை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் உரிய நாட்களில், உரிய நேரத்தில் பணிபுரிய உறுதி செய்யாத நிலையில் நாள் ஒன்றுக்கு பணியாளர் ஒருவருக்கு ரூபாய் 100/- அபராதமாக விதிக்கப்படும்.
  • Bio Metric வருகைப் பதிவு முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கப்படவேண்டும். Bio Metric கருவிகளுக்கு உரிய செலவினங்கள் வெளிக்கொணர்வு முகமையை சார்ந்தது.
  • பணியாளர்களின் Bio Metric வருகைப் பதிவேட்டின் அடிப்படையிலேயே ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • இந்த ஒப்பந்தம் 11 மாத காலத்திற்கு மட்டுமானதாகும். NHM வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின் படியும் வெளிக்கொணர்வு முகமையின் செயல்பாட்டின் அடிப்படையில் நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • இந்த ஒப்பந்தப்புள்ளியை இரத்து செய்திட முழு அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவர் /தலைவர், மாவட்ட நலச் சங்கம் அவர்களுக்கு உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிகளுக்கு Kanyakumari.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அக்டோபர் 20ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

நிருவாக செயலாளர், மாவட்ட சுகாதார சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் /மாவட்ட சுகாதார அலுவலர், நாகர்கோவில் சுகாதாரப்பகுதி மாவட்டம். தலைவர், மாவட்ட சுகாதார சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் /மாவட்ட ஆட்சித்தலைவர், கன்னியாகுமரி மாவட்டம் (இ) நாகர்கோவில். உங்கள் பதவிகளுக்கு ஏற்ப உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் படிக்க: +2 படித்தவரா? மாதம் ரூ.23,000 சம்பளத்தில் தமிழக அரசின் வேலை.. எப்படி அப்ளை பண்ணலாம்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu