• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கட்சிக்குள் குழப்பம்.. தொகுதி மறுவரையால் வந்த வினை.. திமுகவில் 2 விக்கெட் ஆவுட்டா?

கட்சிக்குள் குழப்பம்.. தொகுதி மறுவரையால் வந்த வினை.. திமுகவில் 2 விக்கெட் ஆவுட்டா?

DMK On Delimitation: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு அளித்தது தேசிய அரசியலில் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது. இந்த முடிவிற்கு கட்சியில் உள்ள சீனியர் தலைவர்களும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் திமுகவில் இருந்து வெளியேறி வேறு கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 29, 2026, 10:33 IST|Updated: Nov 29, 2026, 10:56 IST
joinshare
கட்சிக்குள் குழப்பம்.. தொகுதி மறுவரையால் வந்த வினை.. திமுகவில் 2 விக்கெட் ஆவுட்டா?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நாடாளுமன்றத்தில் மாறும் இருக்கை அமைப்பு:  NDA-க்கு அருகில் செல்லும் திமுக எம்.பி.க்கள், மாறும் அரசியல் களம்?

நாடாளுமன்றத்தில் மாறும் இருக்கை அமைப்பு: NDA-க்கு அருகில் செல்லும் திமுக எம்.பி.க்கள், மாறும் அரசியல் களம்?

2

ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, ராகுல்... சென்னையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் - முடிவை மாற்றுமா திமுக?

3

கட்சிக்குள் குழப்பம்.. தொகுதி மறுவரையால் வந்த வினை.. திமுகவில் 2 விக்கெட் ஆவுட்டா?

4

8வது ஊதியக் குழு: OPS, CGHS முதல் கம்யூடட் பென்ஷன் வரை... ஓய்வூதியதாரர்கள் முன்வைத்த 11 முக்கிய கோரிக்கைகள்

5

ஆகாஷ் தீப் தலையில் காயம்... ஆனாலும் சிராஜை இறக்காத கம்பீர்... கலாய்த்த அஸ்வின்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

DMK On Delimitation: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாள (நவம்பர் 30) தொடங்கப்பட உள்ளது. மக்களவை கூட்டத்தொடர் நாளை தொடங்கி, டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்ற உள்ளது.

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு

திருத்தப்பட்ட மசோதாவிற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். இந்த மசோதாவை நிறைவேற்ற பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுகிறது. அப்படியிருக்க தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஒய்எஸ்ஆர்சிபி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்திருக்கும் நிலையில், இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக நேற்று (நவ. 28) அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளது. இதை அடுத்து, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரின் இல்லத்தில் வைத்து, திமுக மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ. ராசா, கலாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேசினர். தொகுதி மறுவரையறைக்கு திமுகு ஆதரவளித்து இருப்பது  தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவின் ஆதரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, ராகுல்... சென்னையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் - முடிவை மாற்றுமா திமுக?

கட்சிக்குள்ளே குழப்பம்

தொகுதி மறுவரையறை ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்த திமுக, தற்போது ஆதரவளித்து இருக்கிறது.  இந்த முடிவு திமுகவில் சீனியர் தலைவர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. குறிப்பாக, திமுக முன்னாள அமைச்சர் மனோ தங்கராஜ், திருச்சி சிவா எம்பி ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றன.  

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூக வலைதளத்தில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கட்சிக்குள்ளே தொகுதி மறுவரையறையில் முரண்பாடு இருப்பது அப்பட்டசமாக தெரிகிறது.

விரைவில் மனோ தங்கராஜ் கட்சி மாறுதலா?

மனோ தங்கராஜ் தொகுதி மறுவரையறை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "தொகுதி மறுவரையறை மசோதாவால், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவில் 50% மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று சொல்லி ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட மசோதாவை மீண்டும் மக்களவையில் முன்மொழிந்து நிறைவேற்றிடத் துடிக்கும் பாசிச பாஜக அரசின் செயல் வெட்கக்கேடானது.  பின்வாசல் வழியாக நுழைந்த மக்கள் பிரதிநிதிகளை வைத்து நிறைவேற்றிடலாம் என எண்ணுவது கோழைத்தனமானது.

மேலும் படிக்க; அமித்ஷா உடன் சந்திப்பு... காங்கிரஸை கதறவிட்ட கனிமொழி - பாஜக கூட்டணிக்கு நோ

பாஜக தற்போது கொண்டு வரக்கூடிய தொகுதி மறுவரையறை மசோதாவானது மாநிலங்களுக்கிடையேயான அதிகாரச் சமநிலையை சீர்குலைக்கும் வகையிலானதாகும்.  விரும்பினால் வெகுமதி.. மறுத்தால் தண்டனை.. என்பது போன்ற அரசியலைக் கையில் வைத்துக்கொண்டு தென்மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, வட மாநிலங்களுக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நரித்தனத்திற்கு தென் மாநிலங்கள் பலி ஆகிவிடக்கூடாது" என  காட்டமாக விமர்சித்தார்.  திமுகவின் முடிவுக்கு நேர் மாறாக அவர் கருத்து கூறியிருப்பது, விரைவில் மனோ தங்கராஜ் கட்சி மாற உள்ளாரா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்டனையா? வெகுமதியா? இது ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான வெள்ளோட்டமா? வெறும் 50% தொகுதி உயர்வு என்பது சமநீதிக்கான தீர்வல்ல. தொகுதி மறுவரையறை என்பது மக்கள்தொகை அடிப்படையிலான கணக்கீடாக மட்டும் இல்லாமல், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள், நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் குரல் வலிமை, சிறுபான்மையினர் மற்றும் விழிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அனைத்துத் தரப்பினரின் சமமான ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு அணுகப்பட வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை. ஆனால் பாசிஸ்ட்களிடம் நீதியை எதிர்பார்ப்பதும் கண்ணை திறந்து பார்த்துக்கொண்டே குழியில் விழுவததும் ஒன்றுதான்! 1. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அநீதி: 1971-ல் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 4.1 கோடியாகவும், உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை 8.3 கோடியாகவும் இருந்தது. அப்போது தமிழ்நாட்டிற்கு 39 எம்.பி. இடங்களும், உத்தரப் பிரதேசத்திற்கு 85 இடங்களும் இருந்தன. உத்தரகாண்ட் பிரிக்கப்பட்ட பிறகு உ.பி.யின் இடங்கள் 80 ஆகக் குறைந்தன. 2026-ல் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடியாகவும், உ.பி.யின் மக்கள்தொகை 24 கோடியாகவும் உயர்ந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் மக்கள்தொகை இரு மடங்காகவும், உ.பி.யின் மக்கள்தொகை மூன்று மடங்காகவும் உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் பேரில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை செயல்படுத்திய மாநிலங்களுக்கும், செயல்படுத்தாத மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு என்பது தென் மாநிலங்களை வஞ்சிக்கும் செயல். இந்திரா காந்தி, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தும் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தக் கடுமையாக உழைத்த மாநிலங்களின் குரலை நாடாளுமன்றத்தில் குறைப்பதும், அந்தக் கடமையில் தவறிய மாநிலங்களுக்கு அதிக இடங்கள் வழங்குவதும் மிகப்பெரிய அநீதி என்பதே அவரது கருத்தின் சாரம். 2. தொகுதிகளை 50% உயர்த்துவது சமநீதியாகாது: மக்களவையில் தற்போது உத்தரப் பிரதேசத்திற்கு தமிழ்நாட்டைவிட 41 இடங்கள் கூடுதலாக உள்ளன. முன்மொழியப்படும் 50% உயர்வின்படி உ.பி.யின் இடங்கள் 120 ஆகவும், தமிழ்நாட்டின் இடங்கள் 58 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையிலான வித்தியாசம் 41-லிருந்து 62 ஆக அதிகரிக்கும். நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றவும், திருத்தவும், தடுக்கவும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையே முக்கியம் என்பதால், ஒரே விகிதத்தில் இடங்களை உயர்த்துவது தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவப் பாதிப்பைச் சரிசெய்யாது. 3. அமித்ஷாவின் அரசியல் நோக்கம்: அமித்ஷா முன்மொழியும் 50% இட உயர்வின் நோக்கம், மக்களவை இடங்களை 800-க்கு மேல் உயர்த்தி, பின்னர் தொகுதிகளை மறுவரையறை செய்வதாகும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அசாம், காஷ்மீரில் சிறுபான்மையினரின் வாக்கு வலிமையைப் பாதிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதைப் போல, நாடு முழுவதும் தொகுதி எல்லைகளை மாற்றி பாஜகவுக்குச் சாதகமான தொகுதிகளை 10% வரை அதிகரிப்பதே மோடி அரசின் அரசியல் நோக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும், மொழிவழி மாநிலங்களுக்குப் பதிலாக 75 'ஜன்பத்' மண்டலங்களாக இந்தியாவைப் பிரிப்பது ஆர்.எஸ்.எஸ். திட்டம் என்றும் விமர்சிக்கப்படுகிறது. 4. நாடாளுமன்றத்தில் மதச் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை நீக்குதல்: தற்போது நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு 241 மக்களவை எம்.பி.க்களும், 118 மாநிலங்களவை எம்.பி.க்களும் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இவ்விரு அவைகளிலும் பாஜக சார்பில் ஒரு கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ கூட இல்லை. இந்தியாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து சுமார் 24 கோடி மக்கள் வாழும் நிலையில், அவர்களின் பிரதிநிதித்துவம் எங்கே? தொகுதி மறுவரையறையில் எல்லைகளை மாற்றி நிர்ணயிக்கும்போது பாஜக ஜெர்ரிமாண்டரிங் (Gerrymandering) செய்யும். அதனால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் முழுவதுமாக இல்லாமலே போகும். அதுபோக தென் மாநிலங்களின் தேவை இல்லாமல் போவதால் இங்கிருந்து பிரதமர் உருவாகும் நிலையும் இல்லாமல் போகும். 1/2

— Mano Thangaraj (@Manothangaraj) November 29, 2026

திருச்சி சிவா அதிருப்தியா?

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக ஆதரவு அளித்திருப்பது எம்பி திருச்சி சிவா அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என கட்சி தலைமையிடம் தொடர்ந்து  திருச்சி சிவா வலியுறுத்தியதாகவும், ஆனால், திமுக தலைமையின் குடும்பம் இதை ஆதரிக்கும் முடிவை எடுத்துவிட்டதாகவும் தகவல்கள் சமூக வலைதளங்களில பரவி வருகிறது.  

சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவலுக்கு எம்பி திருச்சி சிவா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் திருச்சி சிவா கூறியிருப்பதாவது, "எனது பெயரைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இழிவான, மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் மன வருத்தத்தை அளிக்கின்றன. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது மட்டுமே உண்மை. 

ஆனால் சமூக வலைதளங்களில் சில பதிவுகள் எனது பெயரைப் பயன்படுத்தி விஷயங்கள் மிகைப்படுத்தி வருகின்றன. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்போது எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம்” என கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரம் திமுகவில் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த நாட்டின் கவமும் திமுகவின் பக்கம் திரும்பி இருக்கிறது.

மேலும் படிக்க: காங்கிரஸ் பல்டி.. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு.. காரணத்தை விளக்கிய ஸ்டாலின்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
DMK