Kanimozhi Amit Shah Meet In Delhi: சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (நவ. 30) தொடங்க உள்ளது. மக்களவை நாளை தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலங்களவை டிசம்பர் 2, 3 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதா, 33% மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
குறிப்பாக, இந்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் (நவ. 27) ஒப்புதல் வழங்கியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அவையில் நிறைவேற்றப்படவில்லை. அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியிருக்க, தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஒய்எஸ்ஆர்சிபி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்திருக்கும் நிலையில், இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக நேற்று (நவ. 28) அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளது. இதை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரின் இல்லத்தில் வைத்து, திமுக மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ. ராசா, கலாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, "இன்று (அதாவது நேற்று) காலை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அமித் ஷாவை நேரில் சந்தித்து தெரிவித்தோம்.
ஏற்கனவே கொண்டுவரப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ்நாடு பாதிக்கக் கூடாது என்பதே திமுகவின் நிலைபாடு. நியாயமான தொகுதி மறுவரையறை (Fair Delimitation) செய்வதற்காக பல்வேறு மாநில முதல்வர்கள் அழைக்கப்பட்டு ஆலோசனை நடத்தியது திமுகதான்.
எனவே அனைவருக்கும் சமமான எண்ணிக்கையில் அந்த எண்ணிக்கை இருக்க வேண்டும். இந்த விவகாரத்தியில் தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது.
#WATCH | Delhi: After DMK MPs met Union Home Minister Amit Shah to convey the party's support for the Delimitation Bill, DMK MP Kanimozhi says, "This morning, our leader Mr MK Stalin had called for a DMK MPs' meeting, and we reached a decision about our stand on the Delimitation Bill, and a statement was issued that we are going to support it. So we came to tell the Home Minister and the government about our stand." On the party's position on Tamil Nadu's representation and women's quota, she says, "When the government said that they will be increasing the number of seats, we wanted it to be done on the 1971 basis, and they have agreed to that, and a freeze on that for 25 years has also been accepted. So today, Tamil Nadu's number of MPs will be going up from 39 to 59... After this bill is passed, the Women's Reservation Bill will be implemented."
— ANI (@ANI) November 28, 2026
1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எண்ணிக்கையை உயர்த்துவதாக பாஜக தற்போது கூறியுள்ளது. இது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைகளை உறுதி செய்வது மகிழ்ச்சியான ஒன்றாகும். திமுக இப்போதுவரை தன் நிலைபாட்டில் உறுதியாக மாறாமல் உள்ளது" என்றார்.
மேலும், சில கட்சிகள் கோழையாக மாறி, பாஜகவின் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருக்கின்றன என ராகுல் காந்தி கூறியது தொடர்பான கேள்விக்கு, "திமுக எதற்கும் அஞ்சியவர்கள் கிடையாது. இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி பல விஷயங்களுக்காக கடுமையாக போராடி இருக்கிறோம்.
உயிர் தியாகம் செய்துள்ளோம். எனவே திமுக எப்படிப்பட்டது என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்றாகவே தெரியும். ராகுல் யாரை கூறுகிறார் என்று தெரியவில்லை" என கனிமொழி பதிலளித்தார்.
பாஜக உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, "ஒரு மசோதாவை ஆதரித்தால் பாஜகவுடன் கூட்டணி என்று பல கட்சிகள் பேசி வருகின்றனர். இதே கட்சிகள் பொருளாதார அடிப்படையிலான EWS இடஒதுக்கீடு கொண்டு வந்த போது ஆதரவளித்தார்கள்.
குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்டவை பாஜகவின் அந்த மசோதாவுக்கு ஆதரவளித்தது. அப்படி எனில் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி என்று கூற முடியுமா?" என கனிமொழி காட்டமாக பதிலளித்தார்.