• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /ராகு, கேது பெயர்ச்சி: 4 ராசிகளின் தலைவிதி மாறும்... டிசம்பர் 5 முதல் கோடீஸ்வர யோகம்

ராகு, கேது பெயர்ச்சி: 4 ராசிகளின் தலைவிதி மாறும்... டிசம்பர் 5 முதல் கோடீஸ்வர யோகம்

Rahu Ketu Peyarchi: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த ராகு, கேது பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து வெற்றிவாய்ப்புகள் கிடைக்கும்.

Written BySripriya Sambathkumar
Published: Nov 17, 2026, 10:08 IST|Updated: Nov 17, 2026, 10:18 IST
joinshare
ராகு, கேது பெயர்ச்சி: 4 ராசிகளின் தலைவிதி மாறும்... டிசம்பர் 5 முதல் கோடீஸ்வர யோகம்
Image Credit: Representative / Rahu Ketu Peyarchi

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Rahu Ketu Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தில் ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு முக்கிய இடம் உள்ளது. இவற்றின் இட மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்விலும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன.

ராகு கேது பெயர்ச்சி

டிசம்பர் 5-ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 7:28 மணிக்கு, ராகு பெயர்ச்சியும் கேது பெயர்ச்சியும் நிகழவுள்ளது. அன்று, ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம்பெயர்கின்றனர். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த ராகு, கேது பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து வெற்றிவாய்ப்புகள் கிடைக்கும். இவர்களின் அதிர்ஷ்டம் திடீரென மேலோங்கும்; நிதி நெருக்கடிகள் நீங்கி, பொருளாதார வளம் பெருகும்.

டிசம்பரில் நிகழும் ராகு, கேது பெயர்ச்சியால் அட்டகாசமான நன்மைகளை அடையப்போகும் ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

ரிஷபம் (Taurus):

முக்கிய கிரகப் பெயர்ச்சியான, இந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். ஒரு சாதகமான காலம் இப்போது தொடங்கும். ராகு, கேது அருளால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மேலும், சிக்கலான பல பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வு கிடைக்கும். தொழில் தொடர்பான சவால்கள் தீரும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வேலை தேடிக்கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மேலும் படிக்க | Today Rasi Palan: இன்றைய ராசிபலன்.. 12 ராசிகளுக்கான பலன்கள் இங்கே!

கன்னி (Virgo):

ராகு, கேது பெயர்ச்சியால் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும் நன்மைகள் கிடைக்கவுள்ளன. நிதி நெருக்கடிகள் மறைந்துவிடும். இந்த கிரக அமைப்பின் காரணமாக, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் வருமானம் அதிகரிக்கும். முன்னர் செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். கடன்கள் அடைபடும். மேலும் நீண்டகாலமாக இருந்து வந்த தொல்லைகளிலிருந்தும் குழப்பங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். குழந்தைகள் மூலம் நன்மை நடக்கும். தொழில் செய்பவர்களுக்கு, ஒரு வளமான காலம் காத்திருக்கிறது. பெரிய முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளதால், லாபம் அதிகரிக்கும். புதிய கிளைகளைத் தொடங்கும் வாய்ப்பும் ஏற்படலாம். அதிர்ஷ்டம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு அற்புதமான நேரம்.... பணம், பதவி, புகழ் சேரும்

துலாம் (Libra):

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கும், ராகு மற்றும் கேதுவின் இந்த முக்கிய பெயர்ச்சிக் காலத்தில் மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கவுள்ளன. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டகாலமாகத் தடைபட்டிருந்த பணம் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வாழ்வில் செழிப்பு ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. மேலும், உங்கள் தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பீர்கள், உங்கள் வணிகமும் சிறப்பாக வளர்ச்சியடையும். அதிர்ஷ்டம் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், அனைத்துத் துறைகளிலும் திடீர் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

மகரம் (Capricorn):

ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் நடக்கும். குறிப்பாக ராகு மகர ராசிக்குள் நுழைவதால், இந்த ராசியில் பிறந்தவர்களின் தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். இவர்களின் நிதி நிலை மேம்படும். இதுமட்டுமின்றி, இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சாதகமான மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஏற்கனவே இருந்த சிக்கல்களும் குழப்பங்களும் முடிவுக்கு வரும். வாழ்வில் நிம்மதி இருக்கும்.

ராகு, கேது அருள் பெற

ராகு, கேது அருள் பெற, இந்த மந்திரங்களை பாராயணம் செய்யலாம்.

ராகு காயத்ரி மந்திரம்: 'ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு ப்ரசோதயாத்'.

கேது காயத்ரி மந்துரம்: ‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ கேது: ப்ரசோதயாத்’.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி: அடுத்த 86 நாட்கள் பொற்காலம்.. 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் தீரும், கோடீஸ்வர யோகம்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan