சூரிய பெயர்ச்சி வரும் நவம்பர் 16ஆம் தேதி அன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் நுழைகிறார். இதனால், இந்த மூன்று ராசிகளுக்கு ஒரு மாதக் காலத்திற்கு கெட்ட காலமாகும்.
வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதிவரை சூரிய பகவான் விருச்சிக ராசியில் வீற்றிருப்பார். இந்த காலகட்டத்தில் மிதுனம், துலாம், தனுசு உள்ளிட்ட மூன்று ராசிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
1/6
சூரிய பெயர்ச்சி
வேத ஜோதிடத்தின்படி, சூரிய பகவானின் பெயர்ச்சி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும், வேலையிலும், உடல்நலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நேர்மறையான தாக்கம் மட்டுமின்றி எதிர்மறைவான விளைவுகளும் இருக்கும். அந்த வகையில் வரும் நவம்பர் 16ஆம் தேதி (திங்கள்) துலாம் ராசியில் இருந்து சூரிய பகவான் விருச்சிக ராசியில் நுழைகிறார்.
2/6
ஒரு மாதம் இந்த 3 ராசிகளே கவனம்...
சூரிய பகவான் வரும் டிசம்பர் 16ஆம் தேதிவரை விருச்சிக ராசியில் வீற்றிருப்பார். சூரிய பெயர்ச்சி அசுபமான பலன்களை சில ராசிகளுக்கு அளிக்கும். வரும் நவம்பர் 16ஆம் தேதிமுதல் டிசம்பர் 16ஆம் தேதிவரை இந்த மூன்று ராசிகள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
3/6
மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள்
சூரிய பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரச்னையை இழுத்து வரும். இந்த நேரத்தில் சூரிய பகவான் ஜாதகத்தின் 6ஆம் வீட்டில் இருப்பார். வேலையிடத்தில் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருங்கள். மற்றவர்களின் வார்த்தையால் உங்களின் கவனத்தை தொலைக்காதீர்கள். கோபத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்காதீர்கள். உடல்நலத்தை பேணுங்கள், வயிறு சார்ந்த பிரச்னைகளும் வரலாம். குடும்ப வாழ்வில் கவனமாக இருங்கள். நீங்கள் எது பேசினாலும் உங்கள் காதல்/திருமண உறவில் பிரச்னையையே தரும். எனவே, பொறுமையாக இருந்து உங்களின் பார்ட்னரை புரிந்து நடந்துகொள்ளுங்கள்.
4/6
துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்
சூரிய பெயர்ச்சி காலகட்டத்தில் பொருளாதார ரீதியாகவும், குடும்ப வாழ்விலும் துலாம் ராசிக்காரர்கள் சவால்களை சந்திப்பார்கள். இந்த நேரத்தில் சூரிய பகவான் ஜாதகத்தில் 2ஆம் வீட்டில் இருப்பார். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். கோபத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள், இது குடும்ப உறவுகளை மட்டுமின்றி காதல்/திருமண வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். பண விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். இந்த நேரத்தில் முழு விவரத்தையும் அறியாமல் எந்தவித பெரிய முதலீட்டையும் செய்யாதீர்கள். வணிகர்கள் பண பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திடும் முன்னர் முழு விவரத்தையும் கேட்டறியுங்கள். எனவே, அவசரத்தில் எதையும் செய்யாமல் தீர ஆராய்ந்து செயல்படவும்.
5/6
தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்
சூரிய பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கும். இந்த நேரத்தில் உங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதேநேரத்தில் அதீத நம்பிக்கையும் உடம்புக்கு ஆகாது. வேலையிலும், வணிகத்திலும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வையுங்கள். புதிய ஒப்பந்தங்களை முழுமையாக படித்து அறிந்து கையெழுத்திடுங்கள். குடும்பத்தினர், மூத்தவர்களிடம் நன்கு ஆலோசதித்து எந்தவொரு முடிவையும் எடுங்கள். பொறுமையும், புரிதலும் உங்களுக்கும் தேவை.
6/6
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.