சனி பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்கு முந்தைய ராசியும் அடுத்த ராசியும் ஏழரைச் சனியின் தாக்கத்திற்கு உட்படும். 2027ஆம் ஆண்டில் ஏழரைச் சனியால் எந்தெந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை இங்கு காணலாம்.
2027ஆம் ஆண்டு ஜுன் 3ஆம் தேதி சனி பகவான் மேஷ ராசிக்கு நுழைவார். அக்டோபர் 20ஆம் தேதி அன்று வக்ர நிலையில் மீன ராசிக்கு நகர்வார். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கும் ஏழரைச் சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது.
1/7
ஏழரைச் சனி
ஜோதிடத்தில் சனியின் ஏழரைச் சனி காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த காலகட்டத்தில் ஒருவர் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளையும் ஏற்ற இறக்கங்களையும் சந்திக்க நேரிடும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, வேலை, தொழில், பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, 2027ஆம் ஆண்டில் ஏழரைச் சனியால் எந்தெந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை இங்கு காணலாம்.
2/7
2027ஆம் ஆண்டில் ஏழரைச் சனி
ஜோதிடத்தின்படி, சனி பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்கு முந்தைய ராசியும் அடுத்த ராசியும் ஏழரைச் சனியின் தாக்கத்திற்கு உட்படும். அந்த வகையில், வரும் 2027ஆம் ஆண்டில் சனி பகவான் மீனம் மற்றும் மேஷ ராசிகளில் சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக, 2027 புத்தாண்டில் மொத்தம் மூன்று ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் தாக்கத்திற்கு உள்ளாக இருப்பார்கள்.
3/7
மேஷம், மீனத்தில் சனி பகவான்
2027ஆம் ஆண்டு ஜுன் 3ஆம் தேதி சனி பகவான் மேஷ ராசிக்கு நுழைவார். அக்டோபர் 20ஆம் தேதி அன்று வக்ர நிலையில் மீன ராசிக்கு நகர்வார். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கும் ஏழரைச் சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. இதன்மூலம், மேஷம், ரிஷபம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கு ஏழரைச் சனியின் எந்தெந்த கட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும், அவர்களின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? என்பதை இங்கு பார்க்கலாம்.
4/7
மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள்
2027இல் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியின் முதல், 2ஆம் கட்டங்கள் நடைபெறும். முதல் கட்டம் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரையிலும், பின்னர் அக்டோபர் 20ஆம் தேதி முதல் ஆண்டின் இறுதி நாள் வரையிலும் நீடிக்கும். இரண்டாம் கட்டம் ஜூன் 3ஆம் தேதி முதல் அக்டோபர் 19ஆம் தேதிவரை இருக்கும். உடல்நலம், பணம், குடும்ப உறவுகளில் கவனம் தேவை. வேலையில் தாமதங்கள் ஏற்படலாம். அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும். திருமண வரன்கள், வீடு, நிலம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.
5/7
ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள்
இந்தாண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. வேலை, தொழிலில் குழப்பங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். அவசர முடிவுகளைத் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஆண்டின் இறுதியில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
6/7
மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள்
2027ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு ஜூன் 3ஆம் தேதி முதல் அக்டோபர் 19 வரை ஏழரைச் சனியின் இறுதிக்கட்டம் நடைபெறும். பழைய முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும். அக்டோபர் 20ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டம் தொடங்குவதால் உடல்நலம், பணம், செலவுகளில் கவனம் தேவை. வேலை பொறுப்புகள் அதிகரிக்கலாம். தொழில் தொடங்குவோர் கூடுதல் முயற்சி செய்ய வேண்டும்.
7/7
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.