• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /மீனாட்சிக்கு தொடர்பு இல்லை... சொன்னது நிஷாந்த் - மதுரை நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

மீனாட்சிக்கு தொடர்பு இல்லை... சொன்னது நிஷாந்த் - மதுரை நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

மதுரை தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் சுமார் 11 கிலோ 900 கிராம் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திற்கும், மீனாட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் நிஷாந்த் தெரிவித்துள்ளார்.

Written BySudharsan G
Published: Nov 19, 2026, 20:28 IST|Updated: Nov 19, 2026, 20:41 IST
joinshare
மீனாட்சிக்கு தொடர்பு இல்லை... சொன்னது நிஷாந்த் - மதுரை நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Image Credit: Meenakshi, Nishanth | Image Source : Bureau

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மதுரை பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் கடந்த 12ஆம் தேதி அதிகாலையில் நடந்த கொள்ளை சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 11 கிலோ 900 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இதில் நிஷாந்த் என்பவரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை போலீசார் தங்களின் விசாரணையின் மூலம் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவம் நடந்து 48 மணிநேரத்தில் கொள்ளை சம்பவத்தில் தொடர்பிருப்பதாக கூறி சமூக வலைதள பிரபலமாக அறியப்படும் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் என இருவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க | மதுரை நகைக்கடை கொள்ளை: 6.2 கிலோ தங்கம் மீட்பு.. நிஷாந்த் வாக்குமூலத்தில் திடுக் தகவல்

காவல்துறையினர் போட்ட மனு

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, நவம்பர் 16ஆம் தேதி அன்று தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி பகுதியில் நிஷாந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். மதுரை ஐந்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். டிசம்பர் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி லட்சுமி பிரியா உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் நிஷாந்த் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, மதுரை கொள்ளைச் சம்பவத்தில் நிஷாந்திற்கு வேறு யாரேனும் உதவினார்களா, கூட்டுச் சதி நடைபெற்றுள்ளதா, கொள்ளையில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டியிருப்பதாகவும், அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையினர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றத்தில் நிஷாந்த் ஆஜர்

இந்த மனு மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை மத்திய சிறையில் இருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நிஷாந்த் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை ஆவணங்கள் வழங்கப்பட்டன.

அப்போது நிஷாந்திடம் பெயர் மற்றும் வழக்கு விவரங்கள் தொடர்பாக நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, நிஷாந்த் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

Madurai, Tamil Nadu: Nishant, the prime accused in the multi-crore Tanishq jewellery showroom heist, was produced before the Madurai District Court. He was arrested two days ago and remanded to judicial custody until December 1. The police have filed a petition seeking his custody for further interrogation, which is scheduled to be heard today.

— IANS (@ians_india) November 19, 2026

இன்னும் பலருக்கு தொடர்பிருக்கலாம்?

அப்போது, இவ்வளவு பெரிய கொள்ளைச் சம்பவத்தில் நிஷாந்த் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருப்பாரா என்ற சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா, கொள்ளைச் சம்பவத்தில் மற்ற நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி முதல் மாயமான நிஷாந்த், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுள்ளதாகவும், பல நாட்களாகத் திட்டமிட்டு சுயநினைவுடன் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிஷாந்த் பயன்படுத்திய பைக் சேலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தப்பிச் செல்ல சிலர் உதவியதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் அது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

பயமாக உள்ளது - நிஷாந்த்

கொள்ளைச் சம்பவத்தின்போது பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தப்படாத முகமூடிகள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்ற வேண்டியிருப்பதாகவும், விசாரணை இன்னும் தொடக்க நிலையிலேயே இருப்பதால் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே முழுமையான உண்மைகள் தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பு வாதிட்டது.

இதனிடையே, நிஷாந்திடம் 5 நாட்கள் காவலில் விசாரிக்கக் கோரிய மனு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியபோது, "ஒருநாள் விசாரிக்கட்டும். பயமாக உள்ளது" என நிஷாந்த் தெரிவித்தார். மேலும், "எல்லா நகைகளையும் கொடுத்துவிட்டேன். 5 நாட்கள் வேண்டாமே" என்றும் கூறினார்.

மேலும் படிக்க | நகைக்கடை கொள்ளை வழக்கு... தலைமறைவாக இருந்த நிஷாந்த் கைது! சிக்கியது எப்படி?

காவல்துறையினர் தாக்கினர் - நிஷாந்த் தரப்பு

நிஷாந்திடம் உடலில் உள் மற்றும் வெளிப்புற காயங்கள் உள்ளனவா என நீதிபதி கேட்டபோது, வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக நிஷாந்த் தெரிவித்தார். மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தனது தந்தைக்கும் மீனாட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நீதிபதியிடம் கூறினார்.

இதையடுத்து, காவல் விசாரணை தொடர்பான கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து நிஷாந்த் தரப்பு வழக்கறிஞர், காவல்துறையினர் நிஷாந்தை கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும், வலி தாங்க முடியாமல் காவல்துறையினர் கூறியதை அவர் தெரிவித்ததாகவும் வாதிட்டார்.

நிஷாந்த் பயன்படுத்திய வாகனங்கள்

காவல் விசாரணைக்கு அனுமதி அளித்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், ஏற்கெனவே கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிட்டார்.

மேலும், நிஷாந்த் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மூன்று ஆட்டோக்களில் ஒன்று அவரது தாயார் பெயரிலும், மற்ற ஆட்டோக்கள் அங்காளபரமேஸ்வரி மற்றும் சுரேஷ் ஆகியோர் பெயரிலும் இருப்பதாகவும், கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பாக காவல்துறை உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் நிஷாந்த் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிமன்ற உத்தரவு என்ன?

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிஷாந்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிப்பது அதிகமான நாட்களாக இருக்கும் என்றும்; ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும், விசாரணையின்போது நிஷாந்தை எந்தவிதத்திலும் துன்புறுத்தக் கூடாது என்றும், சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். விசாரணையின்போது வழக்கறிஞரைச் சந்திக்கவும் அனுமதி அளிக்கலாம் என உத்தரவிட்ட நீதிபதி, காவல் விசாரணை முடிந்ததும் நாளை (நவ. 20) மாலை நிஷாந்தை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மீனாட்சிக்கு தொடர்பில்லை - நிஷாந்த்

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவப் பரிசோதனைக்காக நிஷாந்த் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் இருந்த நிஷாந்தை நோக்கி, செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

எதுவும் சொல்ல இருக்கிறதா நிஷாந்த் என செய்தியாளர் கேட்க, அதற்கு அவர், "இதற்கும் மீனாட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை" என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற விசாரணையில் குறுக்கிட்டும் இதை அவர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | தடயமே இல்லாமல் திருடியது எப்படி? மீனாட்சி சிக்கியது எப்படி? காவல்துறை போட்ட வீடியோ

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime