• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தாராபுரம் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. பகீர் கிளப்பிய திமுக.. தவெக விளக்கம்

தாராபுரம் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. பகீர் கிளப்பிய திமுக.. தவெக விளக்கம்

Madurantakam Dharapuram Bypolls: தாராபுரத்தில் இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகிக்கப்படுவதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கு தவெக தரப்பில் இருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 06, 2026, 07:24 AM IST|Updated: Oct 06, 2026, 07:38 AM IST
joinshare
தாராபுரம் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. பகீர் கிளப்பிய திமுக.. தவெக விளக்கம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தாராபுரம் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. பகீர் கிளப்பிய திமுக.. தவெக விளக்கம்

தாராபுரம் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. பகீர் கிளப்பிய திமுக.. தவெக விளக்கம்

2

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி வாக்களிக்கலாம்?

3

அக்டோபர் 6 ராசிபலன்: இன்று எந்தெந்த ராசிகளுக்கு பொன்னான நாள்?

4

பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: அண்ணன் சீர் திட்டத்தில் 1 பவுன் தங்கம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

5

இப்போதைய காலகட்டத்தில் எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்? முக்கிய தகவல்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurantakam Dharapuram Bypolls: தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், தாராபுரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நேற்று (அக்டோபர் 5) சேலை, காமாட்சி விளக்கு வழங்கப்பட்டதாக திமுக முன்னாள அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "தாராபுரம் தொகுதி குண்டடம் மேற்கு ஒன்றியம் மானூர்பாளையம் பூத் எண் 30ல், வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகம். மற்றும் இன்று இரவு வாக்காளர்களுக்கு பிரியாணி போடப்படுவதாகவும் தகவல். சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகைப்படத்துடன் அவர் பதிவிட்டு இருக்கிறார்.

 

தூய சக்தியின் தூய அரசியல்.. தாராபுரம் தொகுதி குண்டடம் மேற்கு ஒன்றியம் மானூர்பாளையம் பூத் எண் 30ல், வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகம்.. மற்றும் இன்று இரவு வாக்காளர்களுக்கு பிரியாணி போடப்படுவதாகவும் தகவல்.. சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..

— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 5, 2026

மேலும் படிக்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி வாக்களிக்கலாம்?

தவெக விளக்கம்

இந்த குற்றச்சாட்டுக்கு  அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார். அவர் கூறுகையில், "ஊழல் இருளில் உழல்வோர், ஒளியைப் பழிப்பதா? தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில், தோல்வி பயத்தால் தத்தளிக்கும் திமுக நிர்வாகி  செந்தில் பாலாஜி தமிழக வெற்றிக் கழகத்தின் மீது வீசியுள்ள அபாண்டமான அவதூறுகளை வன்மையாக கண்டிக்கிறோம். நிராகரிக்கிறோம். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. புனையப்பட்டது.

இடைத்தேர்தல் வரலாற்றிலேயே ஜனநாயகத்தைப் பணச்சலங்கையிட்டு ஆடவிட்ட பெருமை திமுகவையே சாரும். வாக்காளர்களை ஆட்டு மந்தைகளாக மண்டபப் 'பட்டிக்குள் அடைத்து' வாக்கு வேட்டையாடிய பிதாமகர்கள், இன்று எங்களைப் பார்த்துத் 'தூய அரசியல்' என கூறியதை விமர்சித்து பேசுவது விந்தையிலும் விந்தை!

சேலை, விளக்கு, பிரியாணி எனத் தாங்கள் காலங்காலமாகச் செய்யும் தகிடுதத்தங்களை எங்கள் மீது திணிப்பது, இருள் ஒளியைப் பார்த்துப் பழிப்பதற்குச் சமம். அதிகார பலத்தாலும் பண மமதையாலும் வாக்குகளை விலைக்கு வாங்கிப் பழகியவர்களுக்கு, எங்கள் மீது மக்கள் காட்டும் தன்னெழுச்சியான அன்பு கண்களை உறுத்துகிறது.

அவர்கள் காட்டும் புகைப்படம், வஞ்சகத்தால் புனையப்பட்ட அப்பட்டமான பொய்! காசை வீசி வாக்குகளைப் பறிக்கும் கறைபடிந்த அரசியல் எங்கள் மரபல்ல; அறமே வடிவான எங்கள் தலைவரின் அகராதியிலேயே அதற்கு இடமில்லை. எளிய மக்களின் தூய அன்பை மட்டுமே நம்பி நிற்கும் எங்களுக்கு, ஊழல் குறுக்கு வழிகளில் பயணிக்கும் இயல்பே எக்காலத்திலும் கிடையாது!

அவதூறு சேற்றை வாரி இறைத்துவிட்டு தப்பிவிடலாம் என நினைக்கும் திரு. செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினர் மீது, த.வெ.க உறுதியான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பணத்தால் ஜனநாயகத்தை ஏலம் கேட்கும் எத்தர்களுக்கு, தாராபுரம் மக்கள் தங்கள் விரல் மையால் தகுந்த தீர்ப்பெழுதுவார்கள்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத்தொகை : வெளிமாநிலத்தவர்கள் மாதம் ரூ.1000 பெற முடியுமா?

தேர்தல் ஆணையத்தில் புகார்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தவெக விதிகளை மீறி கோடிக்கணக்கில் செலவு  செய்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அயல்மன் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக ரூ.10 லட்சம் மட்டுமே செலவழிக்கலாம் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள நிலையில், விதிகளை மீறி பல கோடி ரூபாய் செலவு செய்ததாக அவர்  புகாரில் தெரிவித்துள்ளார்.

தாராபுரம், மதுராந்தகத்தில் வெல்லப்போவது யார்?

மதுராந்தகததில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில்  கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய  கம்யூன்ஸ்ட் சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தல் தவெக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள், அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
TVK