• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வெற்றி பயணத் திட்டம்: தமிழக அரசின் புதிய அறிவிப்பு.. குஷியில் பெண்கள்!

வெற்றி பயணத் திட்டம்: தமிழக அரசின் புதிய அறிவிப்பு.. குஷியில் பெண்கள்!

Vettri Payanam Thittam: வெற்றி பயணத் திட்டம் தொடர்பாக அக்டோபர் 2ஆம் தேதி முதல்வர் விஜய் துவங்கி வைதத நிலையில், அது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நடத்துனர்கள், ஓட்டுநர்கள், டிக்கெட் பரிசோதகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 05, 2026, 11:26 AM IST|Updated: Oct 05, 2026, 11:37 AM IST
joinshare
வெற்றி பயணத் திட்டம்: தமிழக அரசின் புதிய அறிவிப்பு.. குஷியில் பெண்கள்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சி... ‘அன்பில் அவன்’ வெற்றி குறித்து அசோக் செல்வன் உருக்கம்!

ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சி... ‘அன்பில் அவன்’ வெற்றி குறித்து அசோக் செல்வன் உருக்கம்!

2

பருப்பு கொள்முதல் விலையை குறைத்ததா தவெக அரசு? திமுக சுடச்சுட பதிலடி

3

தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

4

பெண்களுக்கு இலவச டிரோன் பயிற்சி! ரூ.5 லட்சம் மானியம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

5

8ம் வகுப்பு படித்தவரா? மாதம் 25,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Vettri Payanam Thittam: தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக மாநகரத்திற்குள் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் இருந்த நிலையில், தற்போது அதனை முதல்வர் விஜய் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.  அக்டோபர் 2ஆம் தேதி முதல்வர் விஜய் வெற்றி பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் முலம் பெண்கள் மாநகர, நகர்ப்புற, சாதாரண, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ், புறநகர் சாதாரண, மலைப்பகுதி பேருந்துகளில் மகளிர், சிறுமியர், திருநர் பயணிகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இந்த நிலையில், வெற்றி பயணத் திட்டம் குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு புதிய அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, வெற்றிப் பயணம் திட்டத்தில் இடம்பெறும் வழித்தடங்களின் Route Master / Service Master விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தகுதியான சேவையும் ETM / மென்பொருள் அமைப்பில் சரியாக இணைக்கப்பட வேண்டும். ZERO Ticket உருவாக்கம் முன்கூட்டியே சோதித்து உறுதி செய்யப்பட வேண்டும்.

தேவையான அளவு செயல்படும் ETM கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றின் சார்ஜிங் /இணைப்பு வசதிகள் செயல்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். ETM பழுது ஏற்பட்டால் உடனடியாக Service Call பதிவு செய்து, மாற்று நடைமுறை மூலம் ZERO Ticket வழங்கல் தடையின்றி தொடரப்பட வேண்டும்.

டிஜிட்டல் வழித்தட பலகை உள்ள பேருந்துகளில் "வெற்றிப் பயணம்" தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும். டிஜிட்டல் வழித்தட பலகை இல்லாத பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட "வெற்றிப் பயணம்" ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்பட வேண்டும்

ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பரிசோதகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு திட்டத்தின் தகுதி. ZERO Ticket வழங்கும் முறை, பயணிகள் சேவை மற்றும் புகார் கையாளும் நடைமுறை குறித்து பணிமனை அளவில் முன்கூட்டியே விளக்கக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

மகளிர் மற்றும் திருநர் பயணிகளிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஒவ்வொரு தகுதியான பயணத்திற்கும் ZERO Ticket கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். ZERO Ticket வழங்காமல் விடுதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் விதிகளின்படி நடவடிக்கைக்குரியதாகும்.

மேலும் படிக்க: நெருங்கும் தசரா, தீபவாளி.. ஊருக்கு போறீங்களா? சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்

ZERO Ticket வழங்கும் நடைமுறை:

Town Ordinary சேவைகளில் தற்போது நடைமுறையில் உள்ள Ticketing நடைமுறை மாற்றமின்றி தொடர வேண்டும்.
Town Express / L.S.S. / Deluxe, Mofussil Ordinary w Ghat Ordinary & ZERO Ticket-ல் பயணியின் From / Origin மற்றும் To / Destination விவரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

ETM செயலிழந்தால், முன் அச்சிடப்பட்ட / Manual ZERO Ticket வழங்கப்பட வேண்டும். தேவையான From-To / கட்டண விவரம், பயணிகளின் எண்ணிக்கை, தடம் எண் மற்றும் தேதி ஆகியவை Waybill / Ticket Register-ல் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

டிக்கெட் பரிசோதகர்கள் / சோதனை அலுவலர்கள், பேருந்தில் பயணம் செய்யும் தகுதியான மகளிர் / திருநர் பயணிகளுக்கு ZERO Ticket வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், சேவை வகை. வழித்தடம் மற்றும் அட்டவணை முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். ZERO Ticket இல்லாத தகுதியான பயணியிடமிருந்து அபராதம் வசூலிக்கக் கூடாது

Inter-State Passing-through Ordinary சேவைகளில் பயணியின் ஏறும் இடமும் இறங்கும் இடமும் தமிழ்நாட்டிற்குள் இருந்தால் மட்டுமே ZERO Ticket வழங்கப்பட வேண்டும். வழித்தடம் இடையில் அண்டை மாநிலம் / யூனியன் பிரதேசம் வழியாகச் சென்றாலும் இச்சலுகை தொடரும். பயணியின் ஏறும் இடம் அல்லது இறங்கும் இடம் அண்டை மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் இருந்தால் நடைமுறையிலுள்ள Fare Ticket வழங்கப்பட வேண்டும். இதற்கேற்ப ETM /மென்பொருள் அமைப்பில் தேவையான வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

ETM மென்பொருளில் வெற்றிப் பயணம் திட்டத்திற்கான ZERO Ticket மற்றும் தேவையான அறிக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். Town Ordinary சேவைகளைத் தவிர பிற சேவைகளில் From / Origin மற்றும் To / Destination விவரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்படும் வகையில் மென்பொருள் அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். சேவை வகை வாரியாக தினசரி /மாதாந்திர அறிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.

ETM செயலிழப்பின்போது வழங்கப்பட்ட Manual ZERO Ticket விவரங்களும் இழப்பீட்டுத் தொகை கணக்கீட்டில் சேர்க்கப்பட வேண்டும். ஏதேனும் வேறுபாடுகள் இருந்தால் உடனடியாகச் சரிபார்த்து திருத்தப்பட வேண்டும். அனைத்து தொடர்புடைய பதிவுகளும் தணிக்கைக்கு ஏற்றவாறு முழுமையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்ட ZERO Ticket-களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு சேவை வகை வாரியாகத் தொகுக்கப்பட வேண்டும். ETM பதிவுகள், Manual ZERO Ticket, Waybill / Ticket Register, தினசரி டிக்கெட் விவரங்கள் மற்றும் கணக்குப் பதிவுகள் ஒன்றோடொன்று ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.

முக்கிய பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் கள கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். நெரிசல், நீண்ட காத்திருப்பு, தாமதம் மற்றும் சேவை குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாகத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடம் மற்றும் நேர அட்டவணைப்படி பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தங்களிலேயே நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக ஏறவும் இறங்கவும் போதுமான நேரம் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து வெற்றிப் பயணம் பேருந்துகளும் நல்ல பராமரிப்பு மற்றும் இயக்கத் தகுதி நிலையில் இருக்க வேண்டும். தேவையான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் மாற்றுப் பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட வேண்டும்.Not Run, Late Run, Curtailment, Route Diversion முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக காலை / மாலை நெரிசல் நேரங்கள், பள்ளி /கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் சேவைகள் அட்டவணைப்படி இயக்கப்பட வேண்டும்.

வெற்றிப் பயணம் தொடர்பான புகார்கள் பொதுவான Toll-Free Customer Care எண் 149 மூலம் தனியாகப் பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்துக் கழகம் / மண்டலம் / கிளை வாரியாகக் கண்காணிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும் Deputy Manager (Commercial) Nodal Officer ஆக செயல்பட்டு, புகாரின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே Closure செய்யப்பட வேண்டும்.

மேலும் படிக்க: விலகும் தென்மேற்கு பருவமழை.. அடுத்த 5 நாட்கள் வெளுக்கும் மழை.. டெல்டா வெதர்மேன் அலர்ட்

நடத்துனர்கள், ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்

இவ்வழிகாட்டுதல்கள் அனைத்து மண்டலங்கள், கிளைகள் மற்றும் பணிமனைகளின் அறிவிப்புப் பலகைகளில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்கள் இவ்வழிகாட்டுதல்களை தெளிவாக அறிந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வழிகாட்டுதல்கள் பெறப்பட்டவுடன், திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த Action Taken Report தலைமையகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை, வழித்தடங்கள் (Routes), நடைகள் (Singles) மற்றும் மேற்கொள்ளப்பட்ட செயலாக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களைக் கொண்ட முழுமையான Implementation Report தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகள் அனைத்தும் வெற்றிப் பயணம் திட்டம் தடையின்றி பயணிகளுக்கு எளிதாகவும், ஒரே மாதிரியான நடைமுறையில் செயல்படுவதையும், ZERO Ticket பதிவுகள், கணக்கீடு, இழப்பீட்டுத் தொகை மற்றும் தணிக்கை நடவடிக்கைகள் தெளிவாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்யும் வகையில் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுகவிற்கு 1, அதிமுகவிற்கு 1.. ஸ்டாலின் - இபிஎஸ்-க்கு இருக்கும் டீல்? போட்டுடைத்த தராசு ஷ்யாம்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu