• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /திமுகவிற்கு 1, அதிமுகவிற்கு 1.. ஸ்டாலின் - இபிஎஸ்-க்கு இருக்கும் டீல்? போட்டுடைத்த தராசு ஷ்யாம்!

திமுகவிற்கு 1, அதிமுகவிற்கு 1.. ஸ்டாலின் - இபிஎஸ்-க்கு இருக்கும் டீல்? போட்டுடைத்த தராசு ஷ்யாம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெகவுக்கு சாதகமான சூழல் இல்லை என்ற தகவல் முதலமைச்சர் விஜய்க்கு சென்றிருக்கலாம். அதனால்தான் பொதுத்தேர்தலின்போது கூட மேற்கொள்ளாத அளவுக்கு, தற்போது 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

Written ByR Balaji
Published: Oct 05, 2026, 09:04 AM IST|Updated: Oct 05, 2026, 09:08 AM IST
joinshare
திமுகவிற்கு 1, அதிமுகவிற்கு 1.. ஸ்டாலின் - இபிஎஸ்-க்கு இருக்கும் டீல்? போட்டுடைத்த தராசு ஷ்யாம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
IND vs WI 1st T20: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பா? இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்!

IND vs WI 1st T20: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பா? இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்!

2

எண்ணெய் சந்தைக்கு BIG SHOCK? சவுதியின் முக்கிய Pipeline மீண்டும் சிக்கலில்!

3

CM விஜய் வழியில் சிவகார்த்திகேயன்? அரசியல் மூவ்க்கான அறிகுறியா? தகவல் இதோ!

4

நெருங்கும் தசரா, தீபவாளி.. ஊருக்கு போறீங்களா? சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்

5

8வது ஊதியக் குழுவில் ட்விஸ்ட்! 2026 முதல் அரியர் கிடைக்குமா? காத்திருக்கும் 1 கோடி ஊழியர்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளில் நாளை (அக்டோபர் 06) இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணிகள் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. முதலமைச்சர் விஜய் டிரெக்டர், மாட்டு வண்டி ஓட்டியும் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அதேசமயம், இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் மட்டும் மேற்கொண்டது மட்டுமல்லாமல் ரோடு ஷோவும் மேற்கொண்டார். பொதுத்தேர்தலின்போது இல்லாத பிரச்சாரத்தை முதலமைச்சர் விஜய் இந்த இடைத்தேர்தலுக்காக செய்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில், இரண்டு தொகுதிகளீலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமான சூழல் இல்லை என்ற தகவல் முதலமைச்சருக்கு சென்றதாகவும், அதன் காரணமாகவே அவர் பொதுத்தேர்தலின்போது கூட மேற்கொள்ளாத அளவுக்கு, தற்போது 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தராசு ஷ்யாம், பிரச்சாரம், ரோடு ஷோ, தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார்.

கோவை - தாராபுரம் பயணம்

கோவையில் இருந்து தாராபுரத்திற்கு சுமார் 40 கி.மீ. இவ்வளவு குறுகிய தூரத்திற்கு எந்த முதலமைச்சரும் ஹெலிகாப்டரில் செல்லமாட்டார். சாலை வழியாக சென்றிருந்தால், வழியில் இருக்கும் மக்களை முதலமைச்சர் நேரடியாக சந்திக்க முடியும். அதேபோல் பொதுமக்களும் முதலமைச்சரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. அது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் வீண் செலவு செய்கிறார் என தராசு ஷ்யாம் கூறினார்.

ரோடு ஷோவில் கூட்டம் இல்லை?

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதிகள். அதனால் அங்கு நடைபெற்ற ரோடு ஷோவில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை. பல இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சில இடங்களில் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது என கூறினார்.

முதலமைச்சர் விஜய்க்கு பயமா?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெகவிற்கு சாதகமான சூழல் இல்லை. அவர்கள் அங்கு மக்கள் ஆதரவின்றி காணப்படுகிறார்கள். அதனால்தான் பொதுத்தேர்தலின்போது கூட மேற்கொள்ளாத அளவுக்கு தற்போது 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டதாக தராசு ஷ்யாம் குறிப்பிட்டார்.

பொதுவாக இடைத்தேர்தல்களில் முதலமைச்சர்கள் பெரியளவில் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால் தற்போது ரோடு ஷோ உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், முதலமைச்சர் விஜய்க்கு அச்சம் ஏற்பட்டுவிட்டதாக நான் பார்க்கிறேன் என கூறினார்.

டீ குடிப்பது, டிராக்டர் ஓட்டுவதால் ஓட்டு அதிகரிக்குமா?

பொதுமக்களுடன் நெருக்கமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் டீ குடிப்பது, டிராக்டர் ஓட்டுவது போன்ற நடவடிக்கைகளால் மட்டும் வாக்குகள் அதிகரித்துவிடாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அடிப்படை வாக்கு வங்கி இருக்கும். அதை இதுபோன்ற நடவடிக்கைகளால் மாற்றிவிட முடியாது. அதே நேரத்தில், ஒரு வேட்பாளரின் பெயரில் அனுதாபம் இருந்தால் ஓரளவு கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், தாராபுரத்தில் வேட்பாளரே அழுது அனுதாபத்தை தேடிக்கொண்டிருப்பதாகவும் தராசு ஷ்யாம் விமர்சித்தார்.

சத்ய பாமா ஏன் தவெகவில் இணைந்தார்?

சத்யபாமாவை தவெகவில் இணைந்ததற்கான சரியான காரணத்தை விஜய்யால் தெளிவாக கூற முடியவில்லை.  எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து அதிமுக - திமுக கூட்டணியை உருவாக்க முயன்றதாக கூறி சத்யபாமா தவெகவுக்கு வந்ததாக விஜய் விளக்கம் அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த காரணத்தை ஏற்றுக்கொண்டால், தவெகவுக்கு ஆதரவு அளித்த அனைத்து கூட்டணி கட்சிகளும் துரோகம் செய்தவர்கள்தானே என்ற கேள்வி எழும் என்றும் தராசு ஷ்யாம் கூறினார். மேலும், திருமாவளவன் எப்படி வெற்றி பெற்றார்? காங்கிரஸ் 5 தொகுதிகளை எப்படி பெற்றது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதேபோல், பாமக தற்போது நடுநிலை வகிப்பதற்கும் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியே காரணம் என்றும் குறிப்பிட்ட தராசு ஷ்யாம், சத்யபாமா தொடர்பாக விஜய் கூறும் காரணம் எடுபடவில்லை என தெரிவித்தார்.

திமுக - அதிமுக இடையே புரிதலா?

மதுராந்தகம் தொகுதி திமுகவுக்கும், தாராபுரம் தொகுதி அதிமுகவுக்கும் என இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு புரிதல் இருப்பதாக பேச்சு இருப்பதாகவும் தராசு ஷ்யாம் தெரிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் இதுபோன்ற முடிவை எடுக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது இரு கட்சிகளுக்குமே பாதிப்பை ஏற்படுத்தும். எனினும், கட்சிகளின் அடிமட்ட அளவில் இதுபோன்ற ஒரு புரிதல் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்று தராசு ஷ்யாம் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல் முக்கிய காரணமா?

அடிமட்ட நிர்வாகிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானதாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், தவெக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகிவிட்டால், அந்த தொகுதிக்குள் குறைந்தபட்சம் 3 ஒன்றியங்கள், பல பேரூராட்சிகள், ஒரு நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அவரது அரசியல் செல்வாக்கு உருவாகும் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த பகுதிகளில் திமுக அல்லது அதிமுகவைச் சேர்ந்த சேர்மன்கள் இருந்தால், புதிய தவெக எம்.எல்.ஏ அவர்களுக்கு பல்வேறு வழிகளில் இடையூறாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். மேலும், தவெக வரக்கூடாது என்று நினைக்கும் பெரும்பாலான வாக்கு வங்கிகள் கிராமப்புறங்களில் இருப்பதாகவும், அதுதான் உள்ளாட்சித் தேர்தலுக்கான முக்கிய களமாக இருப்பதாகவும் தராசு ஷ்யாம் தெரிவித்தார்.

இதனால், இந்த அடிமட்ட அளவில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்குள் ஒரு இணக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்றும், ஆனால் இரு கட்சிகளின் தலைவர்களுக்குள் இதுபோன்ற புரிதல் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu