• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு அதிரடி உயர்வு? வீடு, நிலம் வாங்குபவர்களுக்குப் பேரிடி

பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு அதிரடி உயர்வு? வீடு, நிலம் வாங்குபவர்களுக்குப் பேரிடி

Tamil Nadu Property Guideline Value Hike from December 1 : பத்திரப்பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு டிசம்பர் 1 முதல் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில், இது பொதுமக்களுக்கு என்னென்ன சுமைகளை ஏற்படுத்தும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 06, 2026, 06:58 AM IST|Updated: Nov 06, 2026, 07:08 AM IST
joinshare
பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு அதிரடி உயர்வு? வீடு, நிலம் வாங்குபவர்களுக்குப் பேரிடி
Image Credit: Tamil Nadu Property Guideline Value Hike

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தீபாவளி வந்தாச்சு!! இந்த ஆண்டு சிவகாசி பட்டாசில் என்ன ஸ்பெஷல்? ரேஸ் கார் முதல் சீட்டி மார் வரை... ஒரு பார்வை

தீபாவளி வந்தாச்சு!! இந்த ஆண்டு சிவகாசி பட்டாசில் என்ன ஸ்பெஷல்? ரேஸ் கார் முதல் சீட்டி மார் வரை... ஒரு பார்வை

2

25 நாட்களை கடந்தது.. செஞ்சி சிறுமி எங்கே? சிக்கும் வில்லுப்பாட்டு குழு? சிபிசிஐடி விசாரணை

3

Explainer: டெல்லி நகரை வாட்டும் காற்று மாசுபாடு, திணறும் மக்கள்: 470-ஐத் தாண்டும் AQI

4

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. விடாமல் கொட்டப்போகுது மழை.. தீபாவளிக்கு எப்படி?

5

தீய சக்தி vs அம்மன் சக்தி..இறுதியில் வென்றது யார்? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Property Guideline Value Hike from December 1 : தமிழகத்தில் பதிவுத்துறை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், நடப்பு நிதியாண்டில் பத்திரப்பதிவு மூலம் திட்டமிடப்பட்ட வருவாய் இலக்கான ரூ.35,000 கோடியை உயர்த்தி, ரூ.75,000 கோடி வருவாய் ஈட்டும் வகையில் வழிகாட்டி மதிப்புகளை உடனடியாகத் திருத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வணிக வரித்துறையுடன் ஒப்பிடுகையில் பதிவுத்துறையில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், வருவாய் கசிவுகளைத் தடுத்து சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்புகளைத் திருத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி! பணிச்சான்று வழங்க சிறப்பு முகாம்  

கடந்த மாத வருவாய் நிலவரம்: கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் பத்திரப்பதிவு வாயிலாக ரூ.1,950 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வசூலான தொகையை விட ரூ.147 கோடி அதிகம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், நேரடி வருகையில்லாத பத்திரப்பதிவு திட்டம் துவங்கப்பட்டது முதல் அடுக்குமாடி வீடு, மனை தொடர்பாக இதுவரை 2.46 லட்சம் பத்திரங்கள் பதிவாகியுள்ளன.  

புதிய வழிகாட்டி மதிப்பு: எப்போது அமல்? விவரங்கள் என்ன?

பதிவுத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி, புதிய வழிகாட்டி மதிப்புத் திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் நகரப் பகுதி நிலங்களின் குறைந்தபட்ச விலைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன.  

விவசாய நிலங்கள்: ஊரகப் பகுதிகளில் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் குறைந்தபட்ச விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

நகரப் பகுதி நிலங்கள்: நகரங்களில் ஒரு சதுரடி நிலத்தின் குறைந்தபட்ச விலை ரூ.2,500 முதல் நிர்ணயிக்கப்பட உள்ளது. முதலில் இந்த மாற்றங்களை 2027 ஜனவரி 1 முதல் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது பணிகளை விரைவுபடுத்தி வரும் டிசம்பர் 1 முதலே அமலுக்குக் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  

பின்னணி மற்றும் அரசின் நிலைப்பாடு:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது வெளியிடப்பட்ட நிதி நிலைமை வெள்ளை அறிக்கையில், நிலத்தின் உண்மையான விற்பனை விலைக்கும் அரசு வழிகாட்டி மதிப்புக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் விற்பனை விலையை விட வழிகாட்டி மதிப்பு மிகக் குறைவாக இருப்பதால், அரசுக்கு வர வேண்டிய முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணங்களில் பெரும் இழப்பு மற்றும் வருவாய் கசிவு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைச் சரிசெய்து அரசு கஜானாவை நிரப்பவே வழிகாட்டி மதிப்புகளை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  

பொதுமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள்:

வருவாய் இலக்கை ரூ.35,000 கோடியிலிருந்து ரூ.75,000 கோடியாக ஒரேயடியாக இரட்டிப்பாக்கும் முயற்சி, பொதுமக்கள் மீது மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சொத்து வாங்குவது எட்டாக்கனியாகும்: குறைந்தபட்ச சதுரடி விலை ரூ.2,500 என நிர்ணயிக்கப்பட்டால், 1,000 சதுரடி நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பே ரூ.25 லட்சமாக உயரும். இதற்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணங்களைச் செலுத்தவே பல லட்சங்கள் கூடுதலாகச் செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.

விவசாயிகளுக்கு கூடுதல் சுமை: விவசாய நிலங்களின் குறைந்தபட்ச மதிப்பு லட்சக்கணக்கில் உயர்த்தப்படுவதால், விவசாயிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பாகப்பிரிவினை, தான செட்டில்மென்ட் போன்ற ஆவணங்களைப் பதிவு செய்யும்போதும் பெருந்தொகையைப் பதிவுக்கட்டணமாகச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும்.

ஆவணப் பதிவுகள் குறைய வாய்ப்பு: திடீரென வழிகாட்டி மதிப்பும் பதிவுச் செலவுகளும் கடுமையாக உயர்ந்தால், ரியல் எஸ்டேட் தொழில் முடங்குவதோடு, பொதுமக்கள் பத்திரப்பதிவைத் தவிர்க்கும் அல்லது தள்ளிப்போடும் சூழல் உருவாகலாம் எனத் துறையைச் சேர்ந்தவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | நன்செய் நிலத்தை மனையாக மாற்ற கிடுக்கிப்பிடி: தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu