• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. விடாமல் கொட்டப்போகுது மழை.. தீபாவளிக்கு எப்படி?

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. விடாமல் கொட்டப்போகுது மழை.. தீபாவளிக்கு எப்படி?

Tamil Nadu Weather: நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான அர்னாப், முரசு புயலின் பாதிப்பில் இருந்தே ஆந்திரா மீளாத நிலையில், மற்றொரு காற்றழுத்தம் உருவாக உள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 06, 2026, 10:45 AM IST|Updated: Nov 06, 2026, 10:56 AM IST
joinshare
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. விடாமல் கொட்டப்போகுது மழை.. தீபாவளிக்கு எப்படி?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
CSK-வில் இருந்து தானாக வெளியேறிய வீரர்.. நடக்கப்போகும் அடுத்த டிரேட்? 2 வீரர்களுக்கு குறி!

CSK-வில் இருந்து தானாக வெளியேறிய வீரர்.. நடக்கப்போகும் அடுத்த டிரேட்? 2 வீரர்களுக்கு குறி!

2

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! பொங்கல் இலவச வேட்டி, சேலை அப்டேட்

3

Railway Jobs: ரயில்வே துறையில் சூப்பரான வேலை, யாரெல்லாம் விண்னப்பிக்கலாம்?

4

தீபாவளி வந்தாச்சு!! இந்த ஆண்டு சிவகாசி பட்டாசில் என்ன ஸ்பெஷல்? ரேஸ் கார் முதல் சீட்டி மார் வரை... ஒரு பார்வை

5

25 நாட்களை கடந்தது.. செஞ்சி சிறுமி எங்கே? சிக்கும் வில்லுப்பாட்டு குழு? சிபிசிஐடி விசாரணை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Weather: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, அர்னாப், முரசு புயல் காரணமாக, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளை புரட்டி எடுத்தது. இந்த நிலையில், நவம்பர் 14,15ஆம் தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 14,15ஆம் தேதிகளில் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 0.9 கி மீ உயரத்தில் தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது என வானிலை  மையம் கூறியிருக்கிறது.

இன்று எங்கெல்லாம் கனமழை?

வானிலை மைய தகவலின்படி, நவம்பர் 6ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.  

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உழவர் அடையாள எண் : விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நவம்பர் 7ஆம் தேதி மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை மையம் எச்சரிக்கை

நவம்பர் 8ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு அதிரடி உயர்வு? வீடு, நிலம் வாங்குபவர்களுக்குப் பேரிடி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அநேக இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 9ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி! பணிச்சான்று வழங்க சிறப்பு முகாம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather