• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /மதுரை ரயில் நிலையத்தில் தீபம் ஏற்றுவோம்... போட்டோவை காட்டி மத்திய அமைச்சர் பேச்சு

மதுரை ரயில் நிலையத்தில் தீபம் ஏற்றுவோம்... போட்டோவை காட்டி மத்திய அமைச்சர் பேச்சு

கோயில் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு வரும் மதுரையின் புதிய ரயில் நிலைய கட்டுமானத்தை குறிப்பிட்டு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு வேண்டுமானால் தீபம் ஏற்றுவோம் என்று கூறினார். ஆனால் அதை அணைக்க தமிழக அரசு தீயணைப்பு வண்டியை கொண்டுவரும் என்றும் நகைத்தார்.

Written BySudharsan G
Published: Nov 27, 2026, 06:52 IST|Updated: Nov 27, 2026, 07:01 IST
joinshare
மதுரை ரயில் நிலையத்தில் தீபம் ஏற்றுவோம்... போட்டோவை காட்டி மத்திய அமைச்சர் பேச்சு
Image Credit: Railway Minister Ashwini Vaishnav | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
கண்ணீர்விட்ட சிராஜ்? ஓரங்கட்டிய கில் - கம்பீர்... 2வது போட்டியிலும் சேர்க்கவில்லை!

கண்ணீர்விட்ட சிராஜ்? ஓரங்கட்டிய கில் - கம்பீர்... 2வது போட்டியிலும் சேர்க்கவில்லை!

2

முகத்தில் ரத்த காயம்.. ஏற்காடு மலையில் கிடந்த சிறுமியின் சடலம்.. நடுக்க வைக்கும் பின்னணி!

3

சூரியன் பெயர்ச்சி: டிசம்பர் முதல் 5 ராசிக்கு ராஜவாழ்க்கை.. டபுள் அதிர்ஷ்டம், டபுள் வெற்றி!

4

பாஜக பக்கம் சாயும் திமுக? மீண்டும் வரும் Delimitation மசோதா... திடீர் மாற்றம் ஏன்? Explained

5

மதுரை ரயில் நிலையத்தில் தீபம் ஏற்றுவோம்... போட்டோவை காட்டி மத்திய அமைச்சர் பேச்சு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Railway Minister Ashwini Vaishnav: சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் பாஜக சார்பில் 'இந்தியா அரசியலமைப்பு சட்ட நாள் விழா' நேற்று (நவ. 26) நடைபெற்றது.

இந்த விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | அன்பில் மகேஷ் உள்ளிட்ட 3 பேரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு!

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம்...

இந்நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "நாம் எப்போதும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நமது அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

சிலர் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை அவர்களின் பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பாக்கெட்டில் வைத்திருப்பதின் காரணம் அவர்கள் குடும்பத்திற்கு கீழே அது இருக்க வேண்டும், அவர்கள் குடும்பம் அரசியல் அமைப்பை விட முக்கியம் என்பதுதான்.

SIR விவகாரத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் பெரிய குளறுபடிகளை செய்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் SIR-ஐ எதிர்க்கவில்லை, பாஜக SIR காரணமாகதான் வென்றதாக கூறும் நிலையில், கேரளாவில் காங்கிரஸ் வென்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அவர்களின் கட்சியும், கட்சி நிர்வாகிகளும்தான் காரணம்.

நேரு அம்பேத்கரை நம்பவில்லை

காங்கிரஸ் அவர்கள் தோல்விக்கு வெறும் குற்றச்சாட்டுகளை SIR மீது வைக்கிறது . தொடர்ந்து அவர்கள் தோல்வியடைந்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அரசியலமைப்பு சட்டத்தை குறித்து கவலையில்லை, குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை.

காங்கிரஸ் அம்பேத்கரை நம்பவில்லை. நேரு அம்பேத்காரை நம்பவில்லை, அவரது அறிவை காங்கிரஸ் கட்சி நம்பவில்லை" என அடுக்கடுக்காக காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டினார்.

EVM சர்ச்சை

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் EVM மீதான குற்றச்சாட்டு ஆகியவை குறித்து அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், "காங்கிரஸ் கூறும் மற்றொரு குற்றச்சாட்டு மின்னணு வாக்கு இயந்திரத்தால் (EVM) தான் தோற்றதாக கூறுகிறார்கள், ஆனால் மக்களை நேரடியாக சந்திக்காமல்தான் அவர்கள் தோற்றார்கள்.

EVM வாக்குப்பதிவு தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் நடைபெற்றது. மேற்கு வங்கத்திலும் EVM வாக்குப்பதிவு நடைபெற்றது, அங்கு காங்கிரஸ் எவ்வளவு தொகுதியில் வென்றது. காங்கிரஸ் வென்றது பூஜ்யம்தான்.

அவர்கள் எந்த ஒரு கடின உழைப்பையும் செய்ய விரும்பாமல் அவர்கள் குடும்பத்தின் பெயரிலேயே எல்லாம் நடக்கும் என நினைக்கிறார்கள். அரசியலமைப்பில் அவ்வாறு கூறவில்லை, அனைத்து நபர்களும் சமம் என்பதை கொண்டு வந்தது. சாதி, மதம், மொழி அனைத்தையும் தாண்டி எல்லோரும் சமம் எனக் கொண்டு வந்தது.

இந்திய அரசிலமைப்பு சட்டத்தால் தான் ஒரு ஏழை வீட்டில் இருந்து வந்த ஒருவரால் பிரதமராக முடிகிறது. இந்த அரசியலமைப்புதான் ஆரம்ப காலகட்டத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்தவரை பிரதமராக்க முடிகிறது" என்றார்.

மேலும் படிக்க | நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

மாணிக்கம் தாகூர் மீது தாக்கு

மேலும், "காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மேடையில் ஏறி சொல்லட்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது என கூறட்டும். அவர் சொல்ல மாட்டார். ஏனென்றால் அவரது மனது சுத்தமில்லை. அவரது மனது அழுக்கு பிடித்துள்ளது. அவரது தலைவரைப் போல், அரசியலமைப்புச் சட்டத்தை பாக்கெட்டில் வைத்திருக்கவே நினைக்கிறார்கள்.

நீங்கள் என்றாவது அரசியலமைப்பு புத்தகத்தை திறந்து உள்ளீர்களா...? 100 சதவீதம் சொல்கிறேன் அவர்கள் திறந்திருக்கவே மாட்டார்கள். பல வருடமாக அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்" என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீதும் மத்திய அமைச்சர் சாடினார்.

கோயிலுக்கு செல்லக்கூடாது என சொல்வீர்களா?

திருப்பரங்குன்ற தீப விவகாரம் குறித்தும் பேசிய அவர், "நீங்கள் ஒரு தீபத்தை ஏற்றுவதை தடுத்து நிறுத்தலாம். ஆனால் தமிழ் மக்களின் வளர்ச்சியை, மேம்பாட்டை தடுக்க முடியாது. ஒரு தீபத்தை தடுத்தது மூலம் லட்சக்கணக்கானவர்களின் மனதை புண்படுத்தி இருக்கிறீர்கள்.

இன்று  தீபத்தை ஏற்ற மறுத்து நீங்கள், நாளை கோயிலுக்குள் யாரும் செல்லக்கூடாது என சொல்வீர்களா...? இதுதான் மக்களின் விருப்பமா...? இதுதான் அரசியலமைப்பு சொன்னதா?

எழும்பூர் என சொல்லுங்கள்...

மோடி பிரதமராக பொறுப்பெடுத்த பின்னர் தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்துள்ளார். சென்னை எழும்பூர் எப்படி அழகாய் மாறியிருக்கிறது என்று பாருங்கள். எதிர்க்கட்சிகள் சென்னை Egmore என கூறுகிறார்கள்.

தமிழ் மொழியில் சென்னை எழும்பூர் எனக் கூறுங்கள். Egmore என்பது ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட பெயர், எழும்பூர் என அழையுங்கள். கட்டுமானம் நன்றாக நடைபெற்று வருகிறது. உத்தரவாதங்கள் தற்போது களத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மதுரை ரயில் நிலையத்தில் தீபம்

மதுரை ரயில் நிலையத்தின் புதிய கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ள நமது நம்பிக்கையை முதலமைச்சராலும், காங்கிரஸ் கட்சியாலும் தடுக்க முடியுமா...? இந்த ரயில் நிலையத்தின் வடிவமைப்பை பாருங்கள்... இந்த ரயில் நிலையத்திலேயே நாம் தீபம் ஏற்றலாம் என நான் நினைக்கிறேன்.

அவர்கள் தீயணைப்பு படையை கொண்டு வருவார்கள். இன்று தீபத்தை தடுத்து நிறுத்துவார்கள், நாளை கோயிலுக்கு போக வேண்டாம் என்று சொல்வார்கள், நாளை கோயிலை பூட்டவும் செய்வார்கள்.

ஒரு தீபம் ஏற்றுவது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது தீபம் ஏற்றுவது எங்கள் நாகரிகத்தில் ஒரு பகுதி. நாங்கள் கடவுள் முருகப் பெருமானை வழிபடுகிறோம். நீங்கள் ஒரு தீபத்தை தடுத்துவிட்டதாக எண்ண வேண்டாம்" என தவெக அரசை சாடினார்.

மதுரை ரயில் நிலையத்தின் புதிய கட்டுமானம் கோயில் வடிவத்தில் வடிவமைக்கப்படுகிறது. அதை குறிப்பிட்டே அங்கு தீபம் ஏற்றுவோம் என அஸ்வினி வைஷ்ணவ் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புல்லட் ரயில் குறித்து பேச்சு

ரயில்வே திட்டங்கள் குறித்து பேசிய அவர், "பாஜக மத்திய அரசில் இருந்தால் தமிழ்நாடு வந்தே பாரத் ரயிலுக்கு கிடைக்காது. மத்திய அரசின் அடுத்த இலக்கு புல்லட் ரயில் திட்டம். அந்த திட்டம் மக்களின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிவிடும்.

சென்னை டூ பெங்களூரு 73 நிமிடங்களில் சென்றடையலாம். சென்னை -அமராவதி- ஹைதராபாத் பயண நேரம் 3 மணி நேரம் மட்டுமே. விமானத்தை விட வேகமாக புல்லட் ரயிலில் செல்லலாம். விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், விமானத்தில் ஏறுவதற்கு செல்ல வேண்டும் இதுபோன்று பல விஷயங்கள் உள்ளன.

இனி சென்னையில் காலையில் இட்லி, சாம்பார், வடை சாப்பிட்டால் பெங்களூர் சென்று மைசூர் பாக் சாப்பிடலாம். மீண்டும் வந்து ஆப்பம் சாப்பிடலாம். நமது புல்லட் ரயில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது தனி சிறப்பு. உலக நாடுகள் வியந்து பார்க்கின்றன.

தயாரிப்பில் முன்னணியில் தமிழகம்

நான் இன்று பயன்படுத்தும் ஐபோன் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. குறிப்பாக இதன் பெரும்பான்மையான உதிரி பாகங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. நானும் இன்ஜினியராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். முதலில் இன்ஜினியர், பின்னர்தான் அமைச்சர். அதில் எனக்கு பெருமை இருக்கிறது.

மேலும் ரயிலின் உயர் ரக, தரமான சக்கரங்கள் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுகிறது. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்கிறோம். இந்த ஆண்டு முதல் ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளோம்" என விரிவாக பேசினார்.

மேலும் படிக்க | TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:
BJP