• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு வரை 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. பணம், புகழ் கொட்டும்

சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு வரை 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. பணம், புகழ் கொட்டும்

Shukra Peyarchi November: சுக்கிரன் நவம்பர் 22ஆம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசியில் பெயர்ச்சி அடைவது 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். எனவே, அவை எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 13, 2026, 08:37 AM IST|Updated: Nov 13, 2026, 08:39 AM IST
joinshare
சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு வரை 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. பணம், புகழ் கொட்டும்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Shukra Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்தும் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் அறியப்படுகிறார். சுக்கிரன் ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில்  இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சுக்கிரன் கன்னி ராசியில் இருக்கிறார். சுக்கிரன் நவம்பர் 22ஆம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். 

சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசியில் நவம்பர் 22ஆம் தேதி  அன்று மாலை 4.54 மணிக்கு  பெயர்ச்சி அடைகிறார். 2027 ஜனவரி 1 வரை இந்த ராசியில் சுக்கிரன் நிலைத்திருப்பார். சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், இந்த காலக்கட்டத்தில் மூன்று ராசிகளுக்கு சுப பலன்களை கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிம்மம் (Gemini Zodiac Sign)

சுக்கிரனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிகளை முடிப்பதற்கான தைரியத்தை உங்களுக்கு வழங்கும். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். 

உங்களுக்கு இருந்த வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும்.  பணியில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகளை பெறலாம். நண்பர்களுக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும்.

மேலும் படிக்க: சூரியன் பெயர்ச்சி: 8 ராசிகள் பட்டையை கிளப்பப்போறாங்க... உங்க ராசி என்ன?

விருச்சிகம் (Scorpio Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வாகன வகையில் ஆதாயம் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 

பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சுப காரியங்கள் பலிதமாகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமை வெளிப்படும். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டார நட்புகளால் புதிய அனுபவம் ஏற்படும். வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும்.

கடகம் (Cancer Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு செல்வம் அதிர்ஷ்டம் பெருகும். சுப காரியங்கள் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் தாயாருடனான உறவு மேலும் வலுப்பெறக்கூடும்.  பணியில் இருப்பவர்கள் தங்கள் பணிக்காகப் பாராட்டுகளைப் பெறக்கூடும். பணியிடத்தில் உங்கள் நிலை வலுப்பெறும்.  

சொத்து, வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் ஈடுபட்டுள்ள தொழில்களுக்கும் இந்தக் காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.  வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். மனதளவில் இருந்த வருத்தம் நீங்கும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும். துணைவர் வழி உடன் பிறப்புகளால் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும்

மேலும் படிக்க: சிம்ம ராசிக்கு மாறும் செவ்வாய்.. இந்த 3 ராசிகளுக்கு பணம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை!

சுக்கிரன் அருள் பெற என்ன செய்யலாம்?

சுக்கிர பகவானுக்கு உரிய உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி அல்லது துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது. அருகில் உள்ள அம்மன் அல்லது சுக்கிர ஸ்தலங்களுக்குச் சென்று வரலாம். குறிப்பாக கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் (சுக்கிரன் ஸ்தலம்), ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அல்லது திருமணஞ்சேரி சென்று வருவது நல்லது என கூறப்படுகிறது.  வெள்ளிக்கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்திகீரை அல்லது வெள்ளை நிறப் பொருட்கள் (பால், தயிர், வெள்ளைச் சர்க்கரை) தானமாக வழங்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க: கேது - செவ்வாய் சேர்க்கை.. இந்த 4 ராசிகள் இன்று முதல் உஷார்.. வேலை, தொழிலில் கவனம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi