• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /குரு பெயர்ச்சி: 10 ராசிகள் மீது வெற்றி மழை, கொட்டிக்கொடுப்பார் குரு... சிக்கலில் 2 ராசிகள்

குரு பெயர்ச்சி: 10 ராசிகள் மீது வெற்றி மழை, கொட்டிக்கொடுப்பார் குரு... சிக்கலில் 2 ராசிகள்

Written BySripriya Sambathkumar
Published: Oct 28, 2026, 12:49 PM IST|Updated: Oct 28, 2026, 12:57 PM IST
joinshare
Guru Peyarchi Palangal: சிம்மத்தில் குரு பெயர்ச்சி 10 ராசிகளுக்கு அதிக நன்மைகளை அளிக்கும். 2 ராசிகள் சவால்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் ராசி எந்த லிஸ்டில் உள்ளது?

Jupiter Transit: அக்டோபர் 31-அன்று, குரு பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த குரு பெயர்ச்சி 2027-ஆம் ஆண்டு ஜனவரி 24 வரை, அதாவது சுமார் 86 நாட்கள் நீடிக்கும். சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக உள்ளார். சூரியனுக்கும் குருவுக்கும் இடையே நட்பு ரீதியான உறவு உண்டு. குருவின் இந்த சிம்ம ராசிப் பெயர்ச்சி பெரும்பாலான ராசிக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்தாலும், இரண்டு ராசிக்காரர்களுக்குச் சவால்கள் ஏற்படக்கூடும். இந்த குரு பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்.

Aries1/13

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு, குரு பெயர்ச்சி சாதகமான நன்மைகளை அளிக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். இந்த காலத்தில் குரு அருளால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தைரியமும் வீரமும் மேம்படும்.
Taurus2/13

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு அருளால் நிதி ரீதியான ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத பண வரவு ஏற்படலாம். முடங்கியிருந்த பணம் மீண்டும் கைக்கு வரலாம். முன்னர் செய்த முதலீடுகளால் இப்போது நன்மை கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். கடன் தொல்லை நீங்கும்.
Gemini3/13

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு, குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இந்த காலகட்டத்தில் சொந்த முயற்சியாலும் முனைப்பாலும் வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் வேகமெடுக்கும். உங்கள் சுறுசுறுப்பான செயல்பாடுகள் வெற்றியைத் தேடித்தரும்.
Cancer4/13

கடகம்

சிம்மத்தில் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். அவர்களது சமூக அந்தஸ்து உயரும். சமூகத்தில் உங்கள் மதிப்பு கூடும். தொழில் துறையில் நீங்கள் ஒரு சிறப்பான பிம்பத்தைப் பெறுவீர்கள். குரு பெயர்சியின் தாக்கத்தால் இந்த காலத்தில் குடும்பத்தில் அதிக மகிழ்ச்சி நிலவும்.
Leo5/13

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிகமான நன்மைகளை அளிக்கும். சிம்ம ராசியில்தான் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. ஆகையால், இந்த பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்த காலத்தில் உங்கள் ஆளுமை பிரகாசிக்கும்; தொழில் அல்லது பணி வாழ்க்கையில் அதிக முன்னேற்றம் ஏற்படும்.
Virgo6/13

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு, இந்த காலகட்டம் நிதி ரீதியாக லாபகரமானதாக அமையக்கூடும். குரு பெயார்ச்சியின் தாக்கத்தால் வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகலாம். மேலும் ஏற்கனவே உள்ள ஆதாரங்களிலிருந்தும் உங்களுக்கு கன்னி ராசிக்காரர்களுகு பண வரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன.
Libra7/13

சிம்மம்

சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு ஆதாயமான நன்மைகளை அளிக்கும். இந்த காலத்தில் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். அவற்றை நீங்கள் திறம்படப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தொழில் ரீதியாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
Scorpio8/13

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு, குரு பெயர்ச்சி அற்புதமான நன்மைகளை அளிக்கும். மன ரீதியான குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மன அமைதியை உணரக்கூடும். உங்கள் நிதி நிலையும் மேம்பட வாய்ப்புள்ளது. வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
Sagittarius9/13

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நல்ல அதிர்ஷ்டத்தின் விளைவாக, நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் நற்பெயரும் உயரும். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான சூழல் நிலவும், மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும்.
Capricorn10/13

மகரம்

மகர ராசிக்கார்ரகளூக்கு குரு பெயர்ச்சி அனுகூலமான நன்மைகளை அளிக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். மேலும் உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். விரும்பிய முடிவுகளை அடைவது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.
Aquarius11/13

கும்பம்

கும்ப ராசியினருக்கு, குரு பகவான் சிம்ம ராசிக்குச் செல்வது பிள்ளைகள் தொடர்பான கவலைகளைக் குறைக்கலாம். எனினும், இந்தக் காலம் சற்றே சவாலானதாக இருக்கலாம். வெற்றியை அடைய நீங்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும். வருமானத்தை விடச் செலவுகள் அதிகமாக இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தலாம். நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
Pisces12/13

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி ஒரு வகையான புரிதலை அளிக்கும். ஆனால், இவர்கள் சில நிதி சவால்களையும் சந்திக்க நேரிடலாம். இந்தக் காலகட்டத்தில் அதிகச் செலவுகள் ஏற்படுவதால் கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற அதிக முயற்சி தேவைப்படலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இந்த காலகட்டத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.
Disclaimer13/13

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
November Bank Holidays : நவம்பர் மாதம் வங்கிகள் எப்போதெல்லாம் லீவ் தெரியுமா? விவரம் இதோ

November Bank Holidays : நவம்பர் மாதம் வங்கிகள் எப்போதெல்லாம் லீவ் தெரியுமா? விவரம் இதோ

2

ரயில் நேருக்கு நேர் மோதல்! 39 பேர் பலி..எண்ணிக்கை அதிகரிக்குமா..? அச்சத்தில் அரசு

3

பசும்பொன் பயணத்தை தவிர்க்கும் CM விஜய்? பின்னணியில் உளவுத்துறை.. தேவர் குரு பூஜை அரசியல்!

4

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?

5

Explained : ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு! இதனால் வரும் பக்க விளைவுகள் என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.