• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?

DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3 சதவீத புள்ளிகள் உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை (DR) அதே அளவில் அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

Written BySripriya Sambathkumar
Published: Oct 28, 2026, 03:39 PM IST|Updated: Oct 28, 2026, 04:07 PM IST
joinshare
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?
Image Credit: Representative / DA Hike

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வறட்சியால் தவிக்கும் விவசாயிகள்.. உயிரை விட்ட 13000 பேர்... இது எங்க போய் முடியப் போகுதோ!

வறட்சியால் தவிக்கும் விவசாயிகள்.. உயிரை விட்ட 13000 பேர்... இது எங்க போய் முடியப் போகுதோ!

2

November Bank Holidays : நவம்பர் மாதம் வங்கிகள் எப்போதெல்லாம் லீவ் தெரியுமா? விவரம் இதோ

3

ரயில் நேருக்கு நேர் மோதல்! 39 பேர் பலி..எண்ணிக்கை அதிகரிக்குமா..? அச்சத்தில் அரசு

4

பசும்பொன் பயணத்தை தவிர்க்கும் CM விஜய்? பின்னணியில் உளவுத்துறை.. தேவர் குரு பூஜை அரசியல்!

5

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3 சதவீதம் உயர்த்துவதற்கு அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3 சதவீத புள்ளிகள் உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை (DR) அதே அளவில் அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவின் மூலம் 1.16 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

டிஏ உயர்வு: முக்கிய அம்சங்கள்

  • இந்த உயர்வு ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும். 
  • இதன்படி, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் தலா 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயரும்.
  • அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, இந்த உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு மொத்தம் ₹10,016 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
  • இந்த திருத்தமானது, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்த சூத்திரத்தைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்கலாமா? அல்லது சிறிது காலம் காத்திருக்கலாமா? -முதலில் இதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

அகவிலைப்படி அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பணவீக்கத்தைச் சமாளிக்க உதவும் வகையில், அரசு ஆண்டுக்கு இருமுறை, பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தை மாற்றியமைக்கிறது.

அகவிலைப்படி என்றால் என்ன?

அகவிலைப்படி என்பது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தின் சதவீதமாக வழங்கப்படுகிறது; ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அதே சலுகை அகவிலை நிவாரணம் என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் விலைவாசி உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஈடுகட்ட வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கான ‘லீவ் என்கேஷ்மெண்ட்’ 300-லிருந்து 450 நாட்களாக அதிகரிக்க வாய்ப்பு

சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?

மத்திய அரசு 3% டிஏ உயர்வுக்கு (DA Hike) ஒப்புதல் அளித்ததை அடுத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கவுள்ளது. இதை சில உதாரணங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

அடிப்படை ஊதியம் ₹18,000 முதல் ₹50,000 வரை உள்ள ஊழியர்களுக்கு, 3% அகவிலைப்படி உயர்வால் மாதாந்திர ஊதியத்தில் எவ்வளவு கூடுதல் தொகை கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.

அடிப்படை ஊதியம்தற்போதைய அகவிலைப்படி (60%)63% அகவிலைப்படிமாதாந்திர ஊதிய உயர்வு
ரூ.18,000 ரூ.10,800ரூ.11,340ரூ.540
ரூ.25,000 ரூ.15,000ரூ.15,750ரூ.750
ரூ.30,000ரூ.18,000ரூ.18,900ரூ.900
ரூ.50,000ரூ.30,000ரூ.31,500ரூ.1,500
60,000 36,00037,8001,800

இதற்கு முந்தைய திருத்தம் ஏப்ரல் 2026-ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் தலா 2 சதவீத புள்ளிகள் உயர்த்தப்பட்டு, அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் 60 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 

டிஏ அரியர் தொகை

அகவிலைப்படி அதிகரிப்புக்கு அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகையும், அதாவது டிஏ அரியர் தொகையும் (DA Arrears) மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் நவம்பர் மாத ஊதியத்தில் ஊழியர்கள் மிகப்பெரிய ஏற்றத்தை காண்பார்கள்.

மேலும் படிக்க | Explainer: பிஎம் கிசான் 24வது தவணை 3 நாட்களில் வருகிறது.. யாருக்கு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? 

Add Zee News as a Preferred Source
TAGS:
Dearness Allowance