Poonamallee Vadapalani Metro: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. ஏற்கனவே, இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், நேற்று இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் பூந்தமல்லி -வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று துவங்கி வைத்தார்.
மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ன் முதற்பகுதியான 14.64 கி.மீ நீளத்திலான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதலே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையில் மொத்தம் 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. பூவிருந்தவல்லி புறவழிச்சாலை, பூவிருந்தவல்லி பேருந்து நிலையம். பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை. கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம். ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம். போரூர் புறவழிச்சாலை. போரூர் சந்திப்பு. வடபழனி ஆகிய 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் உள்ளன.
இவ்வழித்தடம் வடபழனி சந்திப்பு மெட்ரோ இரயில் நிலையத்துடன் இணைக்கப்படுவதால், பயணிகள் இந்நிலையத்தில் இறங்கி, ஏற்கெனவே இயக்கத்தில் உள்ள வழித்தடம் 2-க்கு மாறி சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல், ஆலந்தூர் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களை எளிதாகச் சென்றடைய முடியும். அத்துடன் சென்னை திருப்பெரும்புதூர் தொழில்துறை வளாகத்தை எளிதில் சென்றடைய இவ்வழித்தடம் பெரிதும் உதவுகிறது.
உங்கள் பயண அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம்! 💛 மஞ்சள் வழித்தடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களுடன், உங்கள் அன்றாடப் பயணம் இனி மேலும் பாதுகாப்பானதாகவும், நவீனமானதாகவும், விரைவானதாகவும் அமையும்! 🚇 உங்களுக்காகக் காத்திருக்கும் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் காண ஸ்வைப் செய்யுங்கள் ➡️ #ChennaiMetro #YellowLine #CMRL #SeamlessJourney #ChennaiIIT
— Chennai Metro Rail (@cmrlofficial) October 11, 2026