TNPSC Group 4 Exam: தமிழக அரசின் பெரும்பாலான துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. குரூப் வாரியாக ஆண்டுதோறும் தேர்வர்களை நடத்தி, மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றனது. அந்த வகையில், குரூப் 4 தேர்வு 2027ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி மாதம் நடக்கிறது. இதற்கான லட்சக்கணக்கானோர் தேர்வு எழுத உள்ளனர். குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 5ஆம் தேதியான இன்றே கடைசி நாளாகும். இந்த நிலையில், தேவர்களின் நலனுக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை டிஎன்பிஎஸ்சி நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 (தொகுதி 4 பணிகள்) 2026-இற்கான அறிவிக்கை எண் 11/2026, நாள் 06.10.2026 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசாணை (நிலை) எண் 68, மனித வள மேலாண்மை (எஸ்) துறை, நாள் 30.10.2026-இல் அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு ஐந்து ஆண்டு காலம் அதனைத் தொடர்ந்து, இத்தெரிவிற்கு உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 08.11.2026 11.59 இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://t.co/vup6pk8mt9
— TNPSC (@TNPSC_Office) November 4, 2026
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று இளைஞர்களுக்கு மிகப்பெரிய நுழைவாயிலாக இருப்பது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தான். 2026ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மூலம் 46 பதவிகளில் மொத்தம் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
விண்ணப்பம் தொடங்கிய தேதி - அக்டோபர் 6
இணையவழியில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் - நவம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை
விண்ணப்பத் திருத்த சாளர காலம் - நவம்பர் 9ஆம் தேதி மதியம் 12.01 மணி முதல் நவம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை
தேர்வு நடைபெறும் நாள், நேரம் - 2027 ஜனவரி 10 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்.
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இணையவழி விண்ணப்பத்தில் உரிய விவரங்களைப் பதிவு செய்த பின்னர், விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் தேர்வர் தேர்வுக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும். யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேக்கிங் வாயிலாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.