Chennai Central Government Job: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு இருக்கும் காலிப் பணியிடங்களை மத்திய அரசு அவ்வப்போது நிரப்பி வருகிறது. அந்த வகையில், அரக்கோணத்தில் உள்ள கடற்படை பள்ளியில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அரக்கோணத்தில் உள்ள கடற்படை பள்ளியில் துணை முதல்வர், ஆங்கிலம், இயற்பியல், கணித ஆசிரியர்கள், சமூக அறிவியல் ஆசிரியர்கள், PRT பொது, நர்சரி ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், பியூன் ஆகிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை மத்திய அரசு நிரப்புகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
அரக்கோணம் கடற்படை பள்ளியில் உள்ள துணை முதல்வர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடற்படைப் பள்ளியில் கற்பிக்கப்படும் முதன்மைப் பாடங்களில் ஏதேனும் ஒன்றில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படடுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பி.எட் (B.Ed) பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு வயது வரம்பானது 35 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் 10-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளுக்குத் துணை முதல்வராக 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளிகளில் முதுகலை ஆசிரியராக (PGT) 5 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறனுடன், ஹிந்தியிலும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், பள்ளி நிர்வாகப் பணிகளுக்காகக் கணினி பயன்பாடுகள், MS Office, ERP மென்பொருள், AI கருவிகள் மற்றும் தரவு அறிவியல் (Data Sciences) பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆங்கிலம், கணிதம், இயற்பியல் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC, AICTE அல்லது NCTE அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பி.எட் (B.Ed) அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் சம்பந்தப்பட்ட பாடத்தைக் கற்பித்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு ரூ.32,000 சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.32000 வழங்கப்படும். இந்த பணிக்கு 21 வயது முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.
சமூக அறிவியல் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடத்தில் வழக்கமான முறையில் இளங்கலைப் பட்டம் பெற்று, அதில் குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில், சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பி.எட் (B.Ed) அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும்/அல்லது அங்கீகரிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் கற்பித்தல் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.27,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நர்சரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பு (12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையானது) குறைந்தபட்சம் 55% மொத்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில், நர்சரி ஆசிரியர் கல்வி, தொடக்கப்பள்ளி கல்வி, மழலையர் கல்வி ஆகியவற்றில் 2 வருட டிப்ளமோ அல்லது அதற்கு இணையான படிப்பு, அல்லது பி.எட் (நர்சரி) படிப்பை வழக்கமான முறையில் (regular course) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.17000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கு இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) அல்லது ராணுவப் படைகளில் அதற்கு இணையான தகுதியுடன், அலுவலகப் பணிகளைச் செய்வதற்கான போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும். : நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலத்தில் சொந்தமாக கடிதப் போக்குவரத்து செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். MS Office, Office Automation, AI கருவிகள் மற்றும் ERP மென்பொருள் ஆகியவற்றில் கணினித் திறன் பெற்றிருக்க வேண்டும். அலுவலக பணிகளை கையாள்வதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். இந்த பணிக்கு 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆயா, பியூன், தோட்டக்காரர் மற்றும் இரவு காவலாளி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் (10-ஆம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், ஆயா, பியூன், தோட்டக்காரர் மற்றும் இரவு காவலாளி போன்ற ஆதரவுப் பணிகளில் சேருபவர்களுக்கு கல்வித் தகுதி கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.9,000 வழங்கப்படும்.
மேற்கண்ட பணிகளுக்கு ncsarakkonam.nesnavy.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும். கல்வித் தகுதி, வயதுச் சான்று மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்கவும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே உள்ள மின்னஞ்சல் அல்லது அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். The Director, Navy Children School, INS Rajali, Arakkonam – 631 006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.