Chennai Metro Recruitment: மத்திய மாநில அரசின் கீழ் மெட்ரோ நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ நிர்வாகம் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயிலை இயக்கி வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளும் நடந்து வருகிறது. அவ்வப்போது மெட்ரோ நிர்வாகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மெட்ரோ நிர்வாகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மெட்ரோ நிர்வாகம் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் என்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 3 ஆண்டுகள் முறையான என்ஜினியரிங் டிப்ளமோ (Diploma) படித்திருக்க வேண்டும்.
எலக்ரானிக்ஸ், ஐடி சார்ந்த பிரிவுகளில் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IT), எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் பிரிவில் மெக்கானிக்கல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் 60% மொத்த மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அரசு பாலிடெக்னிக் அல்லது அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்ற தேர்வர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1, 2026-ன் படி, விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி குறிப்பிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது தளர்வு பொருந்தும். பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நிறுவனத்தில் சூப்பர்வைசர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் (Contractual basis) நியமிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இப்பணியைப் நிரந்தரமாக்கக் கோர முடியாது. சூப்பர்வைசர் பணிக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.31,193 வழங்கப்படும். இந்தத் தொகுப்பூதியத்திலேயே தங்குமிடம், போக்குவரத்து, மருத்துவம், உணவு மற்றும் காப்பீடு போன்ற அனைத்துச் சலுகைகளும் அடங்கும். மேலும், அரசு விதிமுறைகளின்படி வரிகள் பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ நிறுவனத்தில் சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறறும். நேர்முகத் தேர்வின் ஒரு பகுதியாக தமிழ் மொழியில் படிக்க, எழுத, பேசும் திறன் சரிபார்க்கப்படும்.
10ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த தமிழ் மொழித் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நேர்முகத் தேர்வு மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்முகத் தேர்வு நவம்பர் 10,11,12,16,20,21 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Govt.industrial training institute, Labour Colony, SIDCO Industrial Estate, Guidy, Chennai - 600032 என்ற இடத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. எனவே, விண்ணப்பதாரர்களுக்கு தவறால் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.