• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /IDBI வங்கியை கைப்பற்றும் ஃபேர்ஃபாக்ஸ்.. அடுத்ததாக 3 நிறுவனங்களை வாங்கவும் திட்டம்?

IDBI வங்கியை கைப்பற்றும் ஃபேர்ஃபாக்ஸ்.. அடுத்ததாக 3 நிறுவனங்களை வாங்கவும் திட்டம்?

ஐடிபிஐ வங்கியின் 60.72% பங்குகளைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ள ஃபேர்பேக்ஸ் நிறுவனம், அத்தொகையை ஈடுகட்ட வங்கியின் சொந்த உபரி நிதியையே பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Written ByR Balaji
Published: Nov 02, 2026, 12:56 PM IST|Updated: Nov 02, 2026, 01:02 PM IST
joinshare
IDBI வங்கியை கைப்பற்றும் ஃபேர்ஃபாக்ஸ்.. அடுத்ததாக 3 நிறுவனங்களை வாங்கவும் திட்டம்?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' படுகொலை... 12 மணிநேரத்தில் 5 பேர் கைது - மதுரை போலீசார் அதிரடி

பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' படுகொலை... 12 மணிநேரத்தில் 5 பேர் கைது - மதுரை போலீசார் அதிரடி

2

Zee Enterntainment நிறுவனத்தில் முக்கிய நியமனங்கள் - தலைமை AI அதிகாரியாக துஷார் வோரா நியமனம்

3

வாட்ஸ் அப்பில் PF சேவை.. பேலன்ஸ் செக் செய்வது எப்படி? முழு விவரம்

4

Explained : ‘முரசு’ புயல் பெயர் காரணம்! ஏன் இந்த பெயர் வந்தது? இதோ முழு விவரம்..

5

பிபிஓ, ஐடி வேலைகளுக்கு ஆப்பு.. தூக்கி சாப்பிடும் AI.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மத்திய அரசு மற்றும் LIC வசம் இருக்கும் IDBI வங்கியின் 60.72% பங்குகளை ரூ. 52,878 கோடிக்கு வாங்க கனடாவை சேர்ந்த ஃபேர்பேக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு பங்கின் விலை ரூ. 81 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கின் முழு கட்டுப்பாட்டையும் ஃபேர்பேக்ஸ்  ஏற்க உள்ளது. இந்நிலையில், இந்த கையகப்படுத்துதலுக்கு தேவையான நிதியில் ஒரு பகுதியை, ஐடிபிஐ வங்கியின் சொந்த உபரி நிதியை கொண்டே ஃபேர்பேக்ஸ் ஈடுகட்ட வாய்ப்புள்ளதாக பிசினஸ் வேர்ல்ட் (Businessworld) செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபேர்பேக்ஸ் நிறுவனத்திடம் கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ், கோ டிஜிட் லைஃப் மற்றும் ஐஐஎஃப்எல் கேபிடல் ஆகிய மூன்று நிதி நிறுவனங்களின் பங்குகள் உள்ளன. இந்த நிலையில், ஐடிபிஐ வங்கியை கைப்பற்றிய பிறகு, அந்த வங்கியிடம் உள்ள உபரி மூலதனத்தைக் கொண்டு, ஃபேர்பேக்ஸின் இந்த 3 நிறுவனங்களை ரொக்கப் பணம் கொடுத்து வாங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபேர்பேக்ஸ் தலைவர் பிரேம் வாட்சா முதலீட்டாளர்களிடம் பேசுகையில், "ஐடிபிஐ வங்கியில் உபரி மூலதனம் உள்ளது; ஒப்பந்தத்தின்போது சந்தை மதிப்பில் அவர்கள் ரொக்கமாக பணம் செலுத்துவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஐடிபிஐ வங்கி கையகப்படுத்துதலுக்கு சுமார் 5.6 பில்லியன் டாலர் தேவைப்படும் நிலையில், இந்த 3 நிறுவனங்களின் பங்குகளை ஐடிபிஐ-க்கு விற்பதன் மூலம் 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.28,300 கோடி) ஃபேர்பேக்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும். அதாவது, மொத்த கையகப்படுத்தும் செலவில் 54% நிதியை, ஐடிபிஐ வங்கியின் பணத்தை கொண்டே ஃபேர்பேக்ஸ் ஈடுகட்டப் பார்க்கிறது என கூறப்படுகிறது.

RBI-யின் விதிகளால் சிக்கல்  

இந்த நிலையில், ஃபேர்பேக்ஸின் இந்த நடவடிக்கை திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் 2025 விதிகளின்படி, ஒரு வங்கி தனது மூலதனத்தில் 10%-க்கு மேல் மற்றொரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியாது. மொத்த முதலீடும் 20%-ஐ தாண்டக்கூடாது. இதனால் மூன்று நிறுவனங்களையும் வாங்குவதற்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத கோ டிஜிட் லைஃப் நிறுவனத்தின் மதிப்பை யார் நிர்ணயிப்பார்கள் என்ற சந்தேகமும் உள்ளது.

அரசு மற்றும் எல்ஐசியின் நிலை

வங்கியின் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஃபேர்பேக்ஸ் எடுத்தாலும், அரசு மற்றும் எல்ஐசி வசம் 34% பங்குகள் தொடர்ந்து இருக்கும். நிர்வாகக் குழுவில் இருந்து இவர்கள் விலகவுள்ள நிலையில், இந்த நிறுவனங்களை வாங்குவதற்கு சிறுபான்மை பங்குதாரர்களான அரசு மற்றும் எல்ஐசியின் ஒப்புதல் கோரப்படுமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

RBI, SEBI, IRDAI ஒப்புதல் தேவை

ஐடிபிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரே குடையின் கீழ் விரிவான நிதி சேவைகளை வழங்கவே இந்த ஒருங்கிணைப்பு முன்னெடுக்கப்படுவதாக ஃபேர்பேக்ஸ் கூறுகிறது. எனினும், இந்த ஒப்பந்தம் இறுதியாக நடைமுறைக்கு வர ரிசர்வ் வங்கி (RBI), செபி (SEBI) மற்றும் ஐஆர்டிஏஐ (IRDAI) ஆகிய ஒழுங்குமுறை அமைப்புகளின் கடுமையான ஒப்புதல்களை பெற வேண்டியுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India