• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /திருச்சி
  • /திருச்சி : 2 சிறார்கள் வெட்டிக்கொலை! பழிக்குப்பழியா? போலீஸ் விசாரணை..

திருச்சி : 2 சிறார்கள் வெட்டிக்கொலை! பழிக்குப்பழியா? போலீஸ் விசாரணை..

திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே 2 சிறுவர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இதையடுத்து, இதற்கு பின் இருக்கும் காரணம் பழிக்குப்பழியா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Written ByYuvashree M
Published: Nov 09, 2026, 12:06 PM IST|Updated: Nov 09, 2026, 12:17 PM IST
joinshare
திருச்சி : 2 சிறார்கள் வெட்டிக்கொலை! பழிக்குப்பழியா? போலீஸ் விசாரணை..
Image Credit: Trichy | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, தீபாவளி பண்டிகையன்று நள்ளிரவில் 2 சிறுவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.​

திருச்சியை சேர்ந்த சிறார்கள்..!

இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (வயது 17). பெற்றோரை இழந்த இவர், உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவரது உறவினர் வழி சகோதரரான அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகன் விஷால் (வயது 17). இருவரும் கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.

​நேற்று இரவு 11:30 மணியளவில், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரமாக இருவரும் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், ராகுல் மற்றும் விஷாலை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.​

மேலும் படிக்க | TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி! பணிச்சான்று வழங்க சிறப்பு முகாம்

சிதைந்த முகம்..!

இந்த தாக்குதலை அடுத்து, விஷாலின் முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும், ராகுல் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடனும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன் சோதனையிட்டபோது, விஷால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராகுலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ​இதனைத் தொடர்ந்து, இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் ஆய்வு..!

இச்சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டோங்கரே பிரவின் உமேஷிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த மாவட்ட எஸ்பி, கொலையுண்ட இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து தடயங்களைச் சேகரித்தனர். ​மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில்  பதிவான காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு

இந்த சம்பவம் ​பழிக்குப்பழியா?

இக்கொலை எதற்காக நடைபெற்றது? இதில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ​தீபாவளி பண்டிகை தினத்தன்று சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | திருச்சி: தவெக எம்எல்ஏ தாக்கியதாக குற்றம் சாட்டிய நபர் அடித்த பல்டி: கொதிக்கும் அதிமுக.... என்னதான் நடந்தது?

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime