• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /திருச்சி
  • /திருச்சி விவசாயிகளுக்கு ரூ.1.20 லட்சம் வரை மானியம்! ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கலாம்

திருச்சி விவசாயிகளுக்கு ரூ.1.20 லட்சம் வரை மானியம்! ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கலாம்

ஆழ்துளை மற்றும் குழாய் கிணறு அமைக்க விவசாயிகளுக்கு ரூ.1.20 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 11, 2026, 07:52 PM IST|Updated: Nov 11, 2026, 07:57 PM IST
joinshare
திருச்சி விவசாயிகளுக்கு ரூ.1.20 லட்சம் வரை மானியம்! ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கலாம்
Image Credit: Trichy borewell subsidy

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் விவசாயப் பரப்பளவை விரிவாக்கவும், நீர்ப்பாசன வசதியற்ற விவசாய நிலங்களுக்குப் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கவும் வேளாண்மைப் பொறியியல் துறை ஒரு புதிய மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் அமைந்துள்ள, இதுவரை எவ்விதப் பாசன ஆதாரமும் இல்லாத புஞ்சை நிலங்களைக் கொண்ட விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைக்க அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை அரசு மானியம் வழங்குகிறது.  

மேலும் படிக்க | தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டத் திருத்தம்: நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - யாருக்கு என்ன பலன்?

திட்டத்தின் பின்னணி மற்றும் முக்கிய நோக்கம்

விவசாயத்தில் நிகர சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் இலக்குடன், 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் “ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பை உருவாக்கிட நீர் ஆதாரங்களை ஏற்படுத்துதல்” என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. நிலத்தடி நீர் வளமும் மட்டமும் பாதுகாப்பாக உள்ள குறுவட்டங்களில், நீர்ப்பாசனக் கட்டமைப்பு ஏதுமின்றி மானாவாரியாக உள்ள புஞ்சை நிலங்களுக்குப் புதிய பாசன வசதியை அமைத்துக் கொடுத்து உற்பத்தியைப் பெருக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  

யாருக்கு எவ்வளவு மானியம் கிடைக்கும்?

இத்திட்டம் பின்னேற்பு மானிய அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1,20,000 வரை அரசு நிதி உதவி வழங்குகிறது. அதேபோல், இதர பிரிவு விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1,00,000 வரை மானியத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

பயன்பெறத் தகுதியான பயனாளிகள் மற்றும் முக்கிய நிபந்தனைகள்

விண்ணப்பதாரரின் பெயரில் ஒரே இடத்தில் குறைந்தபட்சம் 2 ஏக்கர் புஞ்சை நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் கூட்டுப் பட்டாதாரராக இருக்கக்கூடாது. பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளைக் கிணறு, குழாய்க் கிணறு, திறந்தவெளிக் கிணறு அல்லது வாய்க்கால் பாசனம் போன்ற எந்தவொரு நிலையான நீர்ப்பாசன வசதியும் இல்லாத விவசாயிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இல்லாத அல்லது தூர்ந்துபோன கிணறுகளைக் கொண்ட விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், அத்தகைய நிலங்களில் தற்போது எந்தவொரு பாசனக் கிணறும் பயன்பாட்டில் இல்லை என்பது கள ஆய்வின் போது உறுதி செய்யப்பட்ட பிறகே நிலநீர் ஆய்வுப் பரிந்துரை வழங்கப்படும்.  

திருச்சி மாவட்டத்தில் பயன்பெறும் பாதுகாப்பான குறுவட்டங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பாதுகாப்பான குறுவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பலன் பெற முடியும். அந்த வகையில் கல்லக்குடி, கீழ் அன்பில், இலால்குடி, புள்ளம்பாடி, வாளாடி, மண்ணச்சநல்லூர், சிறுகாம்பூர், முசிறி, ஆமூர், அந்தநல்லூர், குழுமணி, சோமரசம்பேட்டை, ஸ்ரீரங்கம், திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, நவல்பட்டு, திருவெறும்பூர், வேங்கூர், ஏளூர்பட்டி மற்றும் தொட்டியம் ஆகிய குறுவட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.  

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் படிவம் 1-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு புகைப்படத்துடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் குடும்ப அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், கணினி பட்டா அல்லது சிட்டா, நடப்பு பசலி ஆண்டிற்கான அடங்கல், நில வரைபடம் மற்றும் உரிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். பெண் விவசாயிகள் தவிர்த்து 60 சதவீத மானியம் பெற விரும்பும் பிற சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் சிறு/குறு விவசாயி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.  

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலக முகவரிகள்

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருச்சி மாவட்ட விவசாயிகள் தங்களின் பகுதிக்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல் துறை) அலுவலகங்களை நேரில் அணுகலாம்.  

திருச்சி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் பொன்மலைப்பட்டி ரோடு, ஜெயில் காலனி, திருச்சி – 620 020 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை 9842476576 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  

முசிறி பகுதியினர் கண்ணனூர் தெரு, பார்வதிபுரம், முசிறி – 621 211 என்ற முகவரியில் அமைந்துள்ள அலுவலகத்தை 8056841434 என்ற எண்ணில் அணுகலாம்.  

லால்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கணபதி நகர் வடக்கு விரிவு, தாளக்குடி, இலால்குடி – 621 216 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை 9443495191 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.  

தகுதியுடைய விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் நிலங்களுக்குப் பாசன வசதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu