• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /10 சவரன் நகைக்காக தாயை கொன்ற பெண்.. காதலனுடன் போட்ட பகீர் திட்டம்.. சிக்கியது எப்படி?

10 சவரன் நகைக்காக தாயை கொன்ற பெண்.. காதலனுடன் போட்ட பகீர் திட்டம்.. சிக்கியது எப்படி?

Ranipet Murder: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகைக்காக பெற்ற தாயே மகள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகைக்காக மகளே தாயை கழுத்தை நெறித்து கொலை செய்தது போலீசார் கிடுக்குபிடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 21, 2026, 15:49 IST|Updated: Nov 21, 2026, 16:06 IST
joinshare
10 சவரன் நகைக்காக தாயை கொன்ற பெண்.. காதலனுடன் போட்ட பகீர் திட்டம்.. சிக்கியது எப்படி?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Ranipet Murder: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் அருகே உள்ள தென்கடப்பந்தாங்கல் விஐபி நகர் பகுதியில், நகைக்காக தாயை பெற்ற மகளே கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வாலாஜாப்பேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரவி இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா (55). ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

நகைக்காக தாயை கொன்ற மகள்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த கீதா கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டதோடு, அவர் அணிந்திருந்த பத்து சவரன் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. அன்று மாலை நேரத்தில் வீடு திரும்பிய கீதாவின் பேரன், பாட்டி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வாலாஜாபேட்டை காவல்துறையினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாப்பேட்டை போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  கொள்ளை நடந்த வீட்டை ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபின் ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து அதன் மூலம் தடயங்களை சேகரிக்கவும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்தும் உத்தரவிட்டார்.

மகள் கைதானது எப்படி?

தீரன் பட பாணியில் அரங்கேறிய இந்த சம்பவம் வடமாநில கொள்ளையர்களின் கைவலிசையா என்ற கோணத்தில் சந்தேகத்தை கிளப்பி இருந்த நிலையில்,  போலீசார் நடத்திய கிடக்குப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த கீதாவிற்கும் அவரது மகளான தனியார் பள்ளி ஆசிரியர் சரண்யாவுக்கும் இடையே ஏற்கனவே நகை தொடர்பாக முன்விரோதம் காரணமாக பலமுறை வாக்குவாதம் மற்றும் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் வழக்கம் போல சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த சண்டையின் போது பெற்ற தாய் என்று கூட பாராமல் கீதாவை கீழே தள்ளி சங்கிலியால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் கலைத்து படுக்கை மீது போட்டுவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். தனது மகன் பாட்டியின் உடலை பார்த்து தகவல் தெரிந்தது போல சகஜமாக நாடகமாடியுள்ளார். சிசிடிவி காட்சியில் பெரிதளவு ஆதாரம் எதுவும் இல்லாததால், மகளிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், நகைக்காக தாயே கொன்றதாக மகள் அளித்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் சரண்யாவை கைது செய்ததோடு, 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் மேலும் இந்த கொலையில் யாரேனும் தொடர்பு உள்ளாரா என தொடர் விசாரணை மேற்கொண்டதில்  சரண்யாவின் கள்ளக்காதலன் என கூறப்படும் சரண்ராஜ் என்பவரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைக்காக பெற்ற தாய் என்று கூட பாராமல் தாயை மகளே கழுத்தை நெரித்து அடித்து கொலை செய்துவிட்டு, கொள்ளைச் சம்பவம் போன்று நாடகமாடிய சம்பவம் வாலாஜாபேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தீரண் பட பாணியில் வீடு புகுந்து மூதாட்டியை  கொன்றுவிட்டு 10 சவரன் தங்க நகையை பறித்து சென்ற கொடூர சம்பவத்தில் நகைக்காக மகளே தாயை கழுத்தை நெறித்து கொலை செய்தது போலீசார் கிடுக்குபிடி விசாரணையில் அம்பலமானதால் பரபரப்பு ஏற்பட்டது. வடமாநில கொள்ளையர்கள் கைவரிசையா என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய நிலையில் இறுதியில் போலீசார் கொலை செய்யப்பட்டவரின் மகள் என தெரியவந்துள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime