• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /UPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட்! தமிழ்நாடு அரசின் ரூ.50,000 ஊக்கத்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?

UPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட்! தமிழ்நாடு அரசின் ரூ.50,000 ஊக்கத்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?

Tamil Nadu Government, UPSC incentive 2026 : UPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பாக ரூ.50,000 ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 21, 2026, 07:33 IST|Updated: Nov 21, 2026, 07:51 IST
joinshare
UPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட்! தமிழ்நாடு அரசின் ரூ.50,000 ஊக்கத்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit: Tamil Nadu Government UPSC incentive

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government, UPSC incentive 2026 : ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் தேர்ச்சி விகிதத்தையும் பங்களிப்பையும் அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2026-ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி ஆளுமைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.  

மேலும் படிக்க | விதிமீறல் கட்டிடங்களுக்கு இனி பூட்டு, சீல் மற்றும் இடிப்பு! தமிழ்நாடு அரசு அதிரடி சுற்றறிக்கை Explained

ரூ.50,000 நேரடி நிதியுதவி

நடப்பு 2026-ஆம் ஆண்டில் நடைபெற்ற யுபிஎஸ்சி குடிமைப் பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.50,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகையானது இடைத்தரகர்கள் இன்றி, தகுதியான மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.  

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கியத் தேதிகள்

நடப்பு ஆண்டில் (2026) யுபிஎஸ்சி குடிமைப் பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://skilldevelopment.tn.gov.in/   
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 21.11.2026   
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.11.2026  

தேர்வர்களுக்குப் பேருதவி

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய கடினமான கட்டங்களைத் தாண்டி, இறுதிக்கட்டமான ஆளுமைத் தேர்வு எனப்படும் நேர்காணலுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த நிதியுதவி பெரும் ஊக்கமாக அமையும். டெல்லி சென்று நேர்காணலில் பங்கேற்பதற்கான பயணச் செலவு, தங்குமிடச் செலவு, நேர்காணல் பயிற்சிகள் மற்றும் தேவையான புத்தகங்களை வாங்குவதற்கு இந்த ரூ.50,000 நிதியுதவி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

பொருளாதாரப் பின்னடைவு காரணமாகக் கிராமப்புற மாணவர்கள் மற்றும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு தடைபடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. எனவே, 2026-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் கடைசி நேர நெருக்கடியைத் தவிர்த்து, வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை 2-ஆம் கட்டப் பயனாளிகள் 50% நீக்கமா? தமிழக அரசு முக்கிய விளக்கம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu