TN Retail Inflation Explained: தமிழகத்தில் பணவீக்கம் அதிகரிப்பால் தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால், சாமானியர்களின் மாதாந்திர செலவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரிசி, எண்ணெய், வெங்காயம், மசாலாப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் பணவீக்கத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தரவுகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் 50 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களில் சில்லறை பணவீக்கத்திலும் உணவு பொருட்களின் பணவீக்கத்திலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபர் மாதத்திற்கான தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக தமிழகத்தில் பணவீக்கம் தொடரந்து உயர்ந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம 5.54 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து, அக்டோபர் மாதத்தில் 6.09 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் காட்டுப்பாட்டு வரம்பான 6 சதவீதத்தை தாண்டி பணவீக்கம் செல்வது, இரண்டு ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2024ம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு 6 சதவீதத்தை பணவீக்கம் தாண்டுவது இதுவே முதல்முறையாகும். ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 4% (அதிகபட்சம் அல்லது குறைந்தபட்சம் 2% மாறுதலுடன்) வைத்திருக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 2024 அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 6.2 சதவீதமாக இருந்தது. 2026 ஆம் ஆண்டு முழுவதும் மொத்தப் பணவீக்கம், ஜனவரியில் 2.74 சதவீதத்திலிருந்து செப்டம்பரில் 5.54 சதவீதமாகவும், அக்டோபரில் 6.09 சதவீதமாகவும் சீராக உயர்ந்துள்ளது.
நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் விலைவாசி உயர்வு மிக அதிகமாக உள்ளது. 2026 அக்டோபர் மாதத்தில் நாட்டின் நகர்ப்புறங்களில் விலைவாசி உயர்வு 5.41 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் விலைவாசி உயர்வு 6.63 சதவீதமும் உயர்ந்துள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பணவீக்கத்திற்கு இடையிலான இடைவெளி, செப்டம்பரில் 1.20 சதவீதப் புள்ளிகளிலிருந்து, அக்டோபரில் 1.22 சதவீதப் புள்ளிகளாகச் சிறிதளவு அதிகரித்தது.
பணவீக்கம் உயர்வதற்கு முக்கிய காரணமே, உணவு பொருட்களின் விலை உயர்வு தான். நாட்டில் செப்டம்பரில் 7.74 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 8.94 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதில் கிராமப்புறங்களில் 9.09 சதவீதமாகவும், நகர்ப்புறத்தில் 8.68 சதவீதமாக உணவுப் பணவீக்கம் இருப்பதாக மத்திய அரசு தரவுகளில் சொல்லப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் 109.49 ஆக இருந்த ஒட்டுமொத்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் (CPI), அக்டோபர் மாதத்தில் 110.05 ஆக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி,
விலை குறைந்த பொருட்கள்: மறுபுறம், உருளைக்கிழங்கு விலை 14.24 சதவீதம் குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து காலிஃபிளவர் 10.57 சதவீதமும், தேங்காய் 5.60 சதவீதமும், கத்திரிக்காய் 3.34 சதவீதமும், முட்டைக்கோஸ் 1.92 சதவீதமும் குறைந்துள்ளது மக்கள் மத்தியில் ஆறுதல் அளிக்கிறது.
மேலும், ஹோட்டல் உணவு மற்றும் தங்கும் விடுதிகளின் கட்டணம், தனிநபர் பராமரிப்பு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, உணவகங்கள், தங்குமிட செலவுகள் அக்டோபர் மாதத்தில் 10.6 சதவீதம் உயர்ந்துள்ளது. தனிநபர் பராமரிப்பு செலவுகள் 10.14 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், போக்குவரத்து செலவு 5.84 சதவீதமும், ஆடை, காலணிகள் செலவு 4.96 சதவீதமும், உணவு, பானங்களின் பணவீக்கம் 8.51 சதவீதமாகவும், வீட்டுவசதி, நீர், மின்சாரம், எரிவாயு, பிற எரிபொருட்களின் பணவீக்கம் 2.90 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 6.09 சதவீதமாக இருக்கும் நிலையில், இதில் தென் மாநிலங்களில் விலைவாசி மிக அதிகமாக இருக்கின்றன. பெரிய மாநிலங்களில் பணவீக்கத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளன. அதிக பணவீக்கம் கொண்ட முதல் 10 மாநிலங்களில் பட்டியலை இங்கு பார்ப்போம்.
யூனியன் பிரதேசங்களை சேர்த்தால், புதுச்சேரியில் அதிகபட்சமாக 7.96 சதவீதம் பணவீக்கம் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக மிசோரமில் 2.85 சதவீதம், டெல்லியில் 3.80 சதவீதம் உள்ளது.
விலைவாசி உயர்வு ரிசர்வ் வங்கியின் 6 சதவீத எல்லையை தாண்டியிருப்பதால், வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக பொருளார நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால், வீட்டு, வாகன கடன்களுக்கான மாத தவணைக் உயரக் கூடும். கடந்த அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது. வரும் மாதங்களில் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என ஆர்பிஐ கவர்னர் கூறியிருந்தார். இதற்கு ஏற்ப நாட்டின் பணவீக்கம் உயர்ந்துள்ளது, வட்டி விகிதத்தை ஆர்பிஐ உயர்த்தலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே விலைவாசி உயர்வு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்தச் சூழலை எதிர்கொள்ள என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது கேள்வியாக இருக்கிறது. பணவீக்கத்திற்கு தேசிய மற்றும் சர்வதேசக் காரணிகள் இருந்தாலும், அதன் பாதிப்புகளைக் குறைப்பதில் மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இதனால், விலைவாசி உயர்வை முதல்வர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.