• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை இனி விடுமுறை.. தமிழக அரசின் அறிவிப்பு

100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை இனி விடுமுறை.. தமிழக அரசின் அறிவிப்பு

Sub Registrar Office Holiday: தமிழகத்தில் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இனி சனிக்கிழமை செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிக பத்திரப்பதிவு நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 03, 2026, 10:32 AM IST|Updated: Oct 03, 2026, 10:54 AM IST
joinshare
100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை இனி விடுமுறை.. தமிழக அரசின் அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அரியர் கிடைக்கும்? கணக்கீடு என்ன?

8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அரியர் கிடைக்கும்? கணக்கீடு என்ன?

2

வறண்டு கிடக்கும் அணைகளும்... தமிழகத்தை நெருங்கும் ஆபத்தும்... Explained

3

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பயிர்க்கடன் வசூலிப்பது நிறுத்தம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

4

அரியலூரில் செப்டிக் டேங்க் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி மரணம்

5

100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை இனி விடுமுறை.. தமிழக அரசின் அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Sub Registrar Office Holiday: தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. சார் பதிவாளர் அலுலவகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை விடப்பட்டு வந்தது. வாரத்திற்கு 6 நாட்கள் தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், தமிழக அரசு சார் பதிவாளர்கள் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது.

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை

தமிழகத்தல் அதிகம் பத்திரப்பதிவு செய்யப்படும் சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமை செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 01.11.2026 முதல் சனிக்கிழமைகளில் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதை கைவிடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, 07.09.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் 2026-27-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை எண்.11. முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு விவாதத்தின் போது அமைச்சர் வணிகவரி மற்றும் பதிவு அவர்கள் ஏனையவற்றுடன் கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்கள்.

வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகிட சார்பதிவாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயப்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடுதல்.

மேலும் படிக்க: மின்தடை பிரச்னையா? உடனடி தீர்வுக்கு வாட்ஸ் அப்பில் சூப்பர் வசதி.. புகார் எண் அறிமுகம்

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அராசணையில் அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்கள் தாங்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக வார விடுமுறை நாளன்று சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவும், அந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் அதன் வேலைப்பளுவிற்கு தகுந்தாற்போல் தேவையான பணியாளர்கள் பணிபுரிய சம்மந்தப்பட்ட மாவட்டப்பதிவாளர்களுக்கு உத்தரவிடவும் பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டது.

மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், பதிவுத்துறை தலைவர் அவர்கள் பதிவுத்துறை தற்போது "எங்கிருந்தும் பதிவு" என்னும் குறிக்கோளை நோக்கி முன்நகர்கிறது என்றும், சார்பதிவாளர்கள் ஆவணப் பதிவு மட்டுமின்றி பல்வேறு கூடுதல் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியிட்ட அரசாணைப்படி, சனிக்கிழமைகளில் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படுவதால் அலுவலக பணிகள் பின்னடைவை ஏற்படுகிறது.

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தற்போது 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப் பணி முறையினை கைவிடலாம் என்றும் வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்சல்வன் 07.09.2026 அன்று வெளியிட்ட அறிவிப்பைனை 01.11.2026 முதல் செயல்படுத்த ஏதுவாக மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்து உரிய ஆணை வெளியட வேண்டும் என பதிவுத்துறை தலைவரை கேட்டுக் கொண்டார்.

பதிவுத்துறை தலைவரின் கருத்துருவினை கவனமாக பரிசீலனை செய்தபின், அவரின் கருத்துருவினை ஏற்று 2026-2027 ஆம் ஆண்டு பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது மாண்புமிகு அமைச்சர் (வணிகவரி மற்றும் பதிவுத்துறை) அவர்கள் 07.09.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பான 'வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் என்பது தொடர்பான அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு ஏற்கனவே வெளியிடப்பட்ட மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அராசணையை இரத்து செய்து. தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப் பணி முறையை 01.11.2026 முதல் கைவிடலாம் என அரசு முடிவு செய்து, அவ்வாறு ஆணையிடப்படுகிறது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பல்டி பாமா... சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் பேச்சு - அமைச்சர்கள் கண்டனம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu