• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழக கால்நடை வளர்ப்போருக்கு டபுள் ஜாக்பாட்! எருமை + பன்றி வளர்க்க மானியம் - Explained

தமிழக கால்நடை வளர்ப்போருக்கு டபுள் ஜாக்பாட்! எருமை + பன்றி வளர்க்க மானியம் - Explained

Tamil Nadu government schemes : தமிழக கால்நடை வளர்ப்போருக்கு டபுள் ஜாக்பாட் அளிக்கும் விதமாக எருமை மற்றும் பன்றி வளர்க்க மானியம் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 16, 2026, 15:34 IST|Updated: Nov 16, 2026, 15:44 IST
joinshare
தமிழக கால்நடை வளர்ப்போருக்கு டபுள் ஜாக்பாட்! எருமை + பன்றி வளர்க்க மானியம் - Explained
Image Credit: Tamil Nadu government schemes

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

2

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

3

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

4

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

5

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu government schemes : தமிழகத்தில் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு ஒரே நேரத்தில் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை அறிவித்து அதற்கான அரசாணைகளை வெளியிட்டுள்ளது. முதலாவதாக, ரூ.2.04 கோடி மதிப்பீட்டில் ‘எருமைகளின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் திட்டம்’ மற்றும் இரண்டாவதாக, ரூ.0.70 கோடி மதிப்பீட்டில் ‘பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பன்றி இனப்பெருக்கப் பண்ணை அமைக்கும் திட்டம்’ ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு திட்டங்களின் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 2,050 பயனாளிகள் நேரடியாகப் பயனடைவார்கள்.

மேலும் படிக்க | மீனவ பெண்களுக்கு 60% வரை மானியம் + வட்டியில்லா கடன் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

எருமை இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் திட்டம்: 

தமிழகத்தில் எருமை மாடுகளின் இனப்பெருக்கத்தில் உள்ள சவால்களைக் களைந்து, பால் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எருமைகளுக்கு சினை பிடிக்காமல் இருப்பது, மீண்டும் மீண்டும் சினை ஊசி போட வேண்டிய நிலை, பருவம் அறிய முடியாமை, தங்குமிடம் மற்றும் போதிய சத்து இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் கன்று பிறப்பு விகிதம் குறைவாக இருந்து வருகிறது. இத்தகைய இனப்பெருக்கக் குறைபாடுகளைச் சரிசெய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், கடந்த 06.08.2026 அன்று சட்டசபையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்தபடி இத்திட்டம் தற்போது அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய விவரங்கள்:

இலக்கு மற்றும் மாவட்டங்கள்: தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாவட்டங்களில் தலா 200 எருமைகள் வீதம், மொத்தம் 2,000 எருமைகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். இதில் 1,000 இளம் பெண் எருமைகளும் மற்றும் 1,000 சினை எருமைகளும் பயன்பெறும்.

வழங்கப்படும் உதவிகள்:

1,000 இளம் பெண் எருமைகளுக்கு நாள் ஒன்றுக்கு தலா 2 கிலோ வீதம் 180 நாட்களுக்குச் சமச்சீர் அடர் தீவனம் (ரூ.1,11,60,000) மற்றும் தலா 6 கிலோ தாது உப்பு கலவை (ரூ.3,90,000) வழங்கப்படும்.

1,000 சினை எருமைகளுக்கு நாள் ஒன்றுக்கு தலா 3 கிலோ வீதம் 90 நாட்களுக்குச் சமச்சீர் அடர் தீவனம் (ரூ.83,70,000) மற்றும் தலா 3 கிலோ தாது உப்பு கலவை (ரூ.1,95,000) வழங்கப்படும்.

தற்செயல் செலவுகளுக்காக ரூ.2,85,000 உட்பட மொத்தம் ரூ.2,04,00,000 முழுமையாக அரசே ஏற்கிறது.

இதன் மூலம் எருமைகள் விரைவாக சினைப் பிடிப்பதுடன், கன்று பிறப்பு விகிதம் அதிகரித்து, பால் உற்பத்தி மூலம் விவசாயிகளின் தினசரி வருவாய் கணிசமாக உயரும்.

பன்றி இனப்பெருக்கப் பண்ணை திட்டம்: 

ஏழை மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ரூ.70 லட்சம் செலவில் பன்றி இனப்பெருக்கப் பண்ணை அமைக்கும் புதிய திட்டத்திற்கு கால்நடை பராமரிப்புத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பன்றி வளர்ப்பு என்பது குறைந்த தீவனத்தில், வேகமாக வளர்ந்து அதிக இறைச்சித் தந்து குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் ஒரு சிறந்த சுயதொழில் வாய்ப்பாகும். அதிகரித்து வரும் இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்யவும், கிராமப்புறங்களில் சுயவேலைவாய்ப்பை உருவாக்கவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் தேர்வு மற்றும் மாவட்டங்கள்:

தமிழகத்தில் கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தென்காசி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய 12 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 50 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மானியம் மற்றும் உள்கட்டமைப்பு உதவிகள்:

தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பயனாளியும் 5 பெண் பன்றிகள் மற்றும் 1 ஆண் பன்றி கொண்ட ஒரு பண்ணை அமைக்க 50 சதவீத அரசு மானியம் வழங்கப்படும்

பன்றிகளுக்கான பாதுகாப்பான கொட்டகை அமைக்கவும், பன்றிகள் வாங்குவதற்கும், அவற்றைப் பண்ணைக்குக் கொண்டு செல்வதற்கும் நிதியுதவி அளிக்கப்படும்.

பன்றிகளுக்கான காப்பீடு, பண்ணை உபகரணங்கள் வாங்குதல் மற்றும் 90 நாட்களுக்கான தீவனச் செலவு ஆகிய அனைத்திற்கும் மானியப் பணம் வழங்கப்படும்.

மேலும், அறிவியல் பூர்வமான பன்றி வளர்ப்பு, இனப்பெருக்க மேலாண்மை மற்றும் முறையான தீவன பராமரிப்பு குறித்து பயனாளிகளுக்கு விரிவான பயிற்சியும் அளிக்கப்படும்.

இதன் மூலம் பயனாளிகள் குட்டிகளை உற்பத்தி செய்து நல்ல லாபத்திற்கு விற்பனை செய்ய முடியும். மேலும், தமிழகத்தில் தரமான பன்றிக் குட்டிகள் கிடைப்பதுடன், பன்றி வளர்ப்புத் துறை நவீனமடைந்து வலுப்பெறும்.

தமிழக அரசின் இந்த இரண்டு முக்கியத் திட்டங்களும் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நிலையானதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியுள்ள பயனாளிகள் தங்கள் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகங்களை அணுகி இத்திட்டங்களின் கீழ் பயன்பெறலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes