• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /திருச்செந்தூர் முருகனுடன் முதல்வரை சேர்த்து பாடிய விவகாரம்! புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்..

திருச்செந்தூர் முருகனுடன் முதல்வரை சேர்த்து பாடிய விவகாரம்! புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்..

சமீபத்தில் பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் வேல்முருகன் ஆகியோர் முதல்வர் விஜய்யை புகழ்ந்து பாடியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 17, 2026, 13:11 IST|Updated: Nov 17, 2026, 13:23 IST
joinshare
திருச்செந்தூர் முருகனுடன் முதல்வரை சேர்த்து பாடிய விவகாரம்! புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்..
Image Credit: Social Media - Pushpavanam Kuppusamy

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

2

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

3

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

4

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

5

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சில தினங்களுக்கு முன்பாக திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு நடந்தது. அப்படி நடக்கும் போது, “முதல்வர் விஜய் போல” என்று புஷ்பவணம் குப்புசாமி பாடியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அவரே விளக்கம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய பாடல்..

திருச்செந்தூரில் சமீபத்தில் சூரசம்ஹார விழா நடந்தது. அந்த விழா நடக்கும் போது, முருகன் சூரனை வதம் செய்ய வருவார். அப்படி வருகையில் அவரை நோக்கி அரோகரா கோஷம் எழுப்பப்படும், அதற்கு முன்பும் பின்பும் முருகன் புகழ் பாடப்படும். அப்படி பாடும் போது, புஷ்பவனம் குப்புசாமி ‘தமிழக முதல்வர் போல வேல் கொண்டு’ என்று உபயாேகித்திருந்தார். தற்பாேது அவரே இதற்கு விளக்கமளித்துள்ளார்.

புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்..!

புஷ்பவனம் குப்புசாமி, தான் முருகன் குறித்து பாடிய பாடலில் அவருடன் முதல்வர் விஜய்யை ஒப்பிட்டு பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார். அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

லட்ச கணக்கில் ஜணம் 6 நாளு சோறு திங்காம சாமி கும்பிட வந்தா, கூத்தியா கூட திரியுறவன தூக்கி முருகன் கூட பில்டப் 👎🏻 ஒழிஞ்சு போன்னா இப்ப வீடியோ போட்டு விளக்க புன்னகை வேற https://t.co/MgGM4Bhbc3

— 🩷 STR's Furiosa👸🏻 💚 (@diferenTstaR) November 17, 2026

“திருச்செந்தூரில் நடந்த இசைக்கச்சேரியில், நான் பாடிய பாடலை குறை சொல்லி பலரும் என்னை திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் திட்டுகின்ற அளவிற்கு நான் எதுவும் பாடவில்லை. திட்டுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு பாராட்டுகின்ற நீங்கள் தானே திட்டுகிறீர்கள். ஆனால் எதற்காக திட்டுகிறோம் என்று தெரிந்து திட்ட வேண்டும். நான் பாடிய பாடலில் எந்தக் குறையும் இல்லை.

நான் பாடியது இதுதான், நம் தமிழக முதல்வர் போல் அங்கே கமா இருக்கிறது. நம் தமிழக முதல்வர் போல் வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டார். யார் வேண்டிக்கொண்டார்? நம் தமிழக முதல்வர் போல் வேண்டிக்கொண்டார். யாரிடம்? வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டார்.

வெற்றி நிச்சயம் உண்டு. இப்பொழுது புரிகிறதா? யாருக்கு வெற்றி நிச்சயம் உண்டு? நம்முடைய தமிழக முதல்வர் வேண்டிக்கொண்டது போல் நாமும் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு என்று சொல்லியிருக்கிறேன். வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டு வரம் கேளுங்கள் வெற்றி உண்டு பாருங்கள் இப்பொழுது புரிகிறதா?” என்று கேட்டுள்ளார்.

மேலும் படிக்க | TN Power Cut: தமிழகத்தில் நாளை மின்தடை.. 8 மணி நேர பவர் கட்! எங்கெல்லாம்?

“இதோடு விட்டுவிடுங்கள்..”

தொடர்ந்து, “அவரை நான் சாட்சியாக சொல்லியிருக்கிறேன். வெற்றி எப்படி நிச்சயம்? அதற்கு ஒரு சாட்சி வேண்டும். நீங்களும் வேண்டுபரம் கேட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு என்று சொல்லியிருக்கிறேன். இது என்ன குறை இருக்கிறது? எல்லோரும் சேர்ந்து என்னைத் திட்டுகிறீர்கள். முருகனுக்கு ஏராளமான பாடல்களை நான் பாடியிருக்கிறேன். தமிழ் அறிந்த நான் இதில் பிழை செய்வேனா? முருகனுடன் ஒப்பிட்டு பாடியிருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.

எங்கே ஒப்பீடு இருக்கிறது? சாட்சியாகத்தான் நான் அவரை வைத்திருக்கிறேன். முருகனுடன் நான் ஒப்பிடவில்லை. ஆகவே முருகப் பெருமானுடைய அருள் பேரருள் அதற்கு நிகர் எதுவும் கிடையாது அவருக்கு நிகர் யாருமில்லை. ஆகவே இதை புரிந்துகொள்ளுங்கள் நான் யாரையும் ஒப்பிடவோ யாரையும் குறை சொல்லவோ இல்லை. முருகப்பெருமானை பாடியிருக்கிறேன் அவ்வளவுதான். இதை அறிந்து கொண்டு மேற்கொண்டு மேற்கொண்டு திட்டுவதை விட்டுவிடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரோகரா போட்டது ஏன்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

சூரசம்ஹார விழாவில் பாடகர் குழு, “தமிழக முதல்வருக்கு அரோகரா..இந்துசமய அறநிலைய துறை அமைச்சருக்கு அரோகரா..” என்று முழக்கமிட்டனர். இது கடும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. இதற்கு, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், பாடகர்களிடம் தான் விளக்கம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் விளக்கம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, தனக்கோ முதல்வர் விஜய்க்கோ புகழ் பாடுவது பிடிக்காது என்றும் தெரிவித்திருந்தார். இதன் பிறகு இப்படி செய்யாதீங்க என கூறியிருப்பதாகவும், இனிவரும் காலங்களில் கவனமாக செயல்படுவோம் என கூறியிருப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் பேசியிருக்கிறார். இது போன்று இனி நடந்தால், தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | Explainer: ஆதவ் அர்ஜுனா- டெய்சி மார்டின் பிரிவு... கத்தாமல் கதறாமல் ஒரு வித்தியாசமான விலகல், பின்னணி என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu