• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: தலைமைச் செயலாளர் மூடி மறைத்தது ஏன்? - உதயநிதி கேள்வி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: தலைமைச் செயலாளர் மூடி மறைத்தது ஏன்? - உதயநிதி கேள்வி

Udhayanidhi Stalin: கள்ளக்குறிச்சி விவகாரம், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பாலியல் குற்றச்சம்பவங்கள் உள்ளிட்டவைகள் குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபியை நேரில் அழைத்து ஆளுநர் விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.

Written BySudharsan G
Published: Nov 26, 2026, 12:08 IST|Updated: Nov 26, 2026, 12:17 IST
joinshare
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: தலைமைச் செயலாளர் மூடி மறைத்தது ஏன்? - உதயநிதி கேள்வி
Image Credit: Udhayanidhi Stalin Press Meet after Governor Meet | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

2

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

3

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

4

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

5

TN Weather: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Udhayanidhi Stalin Meets TN Governor: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (Lok Bhavan - மக்கள்) தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 26 - வியாழன்)சந்தித்தார்.

அப்போது, பெண் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளவும்; புகார் தெரிவிக்க வந்த நபரை தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரம் தொடர்பாகவும் உதயநிதி ஸ்டாலின் ஆளுநரிடம் புகார் கடிதத்தை வழங்கினார்.

ஆளுநர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோர் இருந்தனர்.

மேலும் படிக்க | பாலியல் தொல்லை புகார்: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா செய்கிறாரா? பரபரப்பு தகவல்

குற்றவாளிகளின் பக்கம் முதலமைச்சர்

ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் நேற்று (நவ. 25) புகார் மனு கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் 80 சதவீதம் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தான், ஆனால் டம்மி முதல்வர் இன்னும் திருந்தவில்லை" என முதல்வர் விஜய்யை கடுமையாக சாடினார்.

கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர அர்லேகர் அவர்களை இன்று சந்தித்து, இந்த சோப்ளாங்கி ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் – சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆளுங்கட்சி நிர்வாகிகளே காரணமாக இருந்து வருவதையும் சுட்டிக்காட்டி புகார் மனு அளித்தோம். பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை இதுவரை கைது செய்யாத நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க இந்த அரசிற்கு ஆளுநர் அவர்கள் வழிகாட்டுதல் வழங்க வேண்டும். 116 நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், நீதிமன்றம் சொல்லும் வரை அதன் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. தலைமைச் செயலாளர், தான் பெற்ற புகாரை முதலமைச்சரிடம் சொன்னாரா? அப்படி சொல்லி இருந்தால் முதலமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அது தொடர்பாகவும், இந்த சம்பவத்தில் உண்மையில்லை - புகார் வரவில்லை என்று சொன்ன சட்ட அமைச்சர் போன்றவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை தேவை. மனு கொடுக்க சென்றவரை அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் ரவிசங்கர் மீது நடவடிக்கை வேண்டும். ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் – காணாமல் போகும் குழந்தைகள் – தொடரும் காவல் நிலைய மரணங்கள் - போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் இப்படி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு மிகப்பெரிய சவாலாக இந்த ஆளுங்கட்சியினர் இருந்து வருகின்றனர். எனவே, இந்த சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் அவர்களிடம் வலியுறுத்தினோம். @Dayanidhi_Maran @DrKalanidhiV @nrelango_dmk

— Udhay (@Udhaystalin) November 26, 2026

பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்காமல் குற்றவாளி பக்கம் படுத்து சொகுசாக முதல்வர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என கூறிய உதயநிதி ஸ்டாலின்,  குற்றவாளி பக்கம் முதலமைச்சர் நிற்பதால்தான் தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து கொண்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

116 நாட்களாக மறைக்க முயற்சி

மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளேன். மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தும் இந்த விவகாரத்தை தலைமை செயலாளர் 116 நாட்களாக இதனை மறைக்க முயற்சி செய்துள்ளார்.

ஜூலை மாதமே மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்திருக்கிறார், தலைமைச் செயலாளருக்கு அனைத்தும் தெரியும். தலைமைச் செயலாளர் ஏன் இந்த சம்பவத்தை மூடி மறைத்தார்?" என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்..தலைமை செயலாளர் மீது உதயநிதி ஸ்டாலின் புகார்!

3 அமைச்சர்கள், முதல்வர் மீது நடவடிக்கை தேவை

முதலமைச்சர் பார்வைக்கு இதனை தலைமைச் செயலாளர் எடுத்துச் செல்லவில்லை என்றால் அது தலைமை செயலாளரின் தவறு என்றும் முதலமைச்சர் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது முதலமைச்சரின் தவறு என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

மேலும் பேசிய உதயநிதி, "சட்டமன்ற உறுப்பினரை காப்பாற்ற வேண்டும் என்றுதான் தலைமை செயலாளரும் இவ்வாறு செயல்பட்டுள்ளார். மூன்று அமைச்சர்கள் கடந்த ஒரு மாதமாக இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி அமைந்து 700 படுகொலைகள் நடந்துள்ளது, எனவே முதலமைச்சர் மீதும் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளி பரிசு கொடுப்பதா...?

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ, தவெகவின் பெண் நிர்வாகிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்பு உள்ளதாகவும்; ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விஜய் மோகன் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறார்; சட்டமன்றத்தில் இது குறித்து பேசியபோது, முதலமைச்சர் எதற்கும் பதில் சொல்லவில்லை.

மாவட்ட ஆட்சியர் என்பதை விட நம்முடைய சகோதரிக்கு இப்படி யாரேனும் குறுஞ்செய்தி அனுப்பினால் நாம் சும்மா இருப்போமா...? உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியருக்கு இந்த நிலைமையை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளியை அழைத்து தண்டிப்பார் என்று பார்த்தால் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து தீபாவளி கொண்டாடி தீபாவளி பரிசு கொடுக்கிறார்.

மோசமாகும் சட்டம் ஒழுங்கு

ஆட்சி அமைந்து பெண் குழந்தைகள் காணாமல் போவதும், கடந்த ஒரு மாதத்தில் 10 குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர். ஆட்சி அமைந்து  இதுவரை 9 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளது.

மதுரை காவல் நிலையத்தில் ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் தற்கொலை என காவல்துறை தெரிவிக்கிறது, போதை பொருள் வழக்குகளில் இந்த அரசு மோசமான நடைமுறையை கடைபிடித்து வருகிறார்கள்.

ஆளுநரிடம் வைத்த கோரிக்கைகள்

ஆளும் கட்சியினர் அதிகளவில் போதை பொருள் வழக்குகளில் சிக்குகின்றனர். அமைச்சர் சரத் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆளும் கட்சியினர் போதைப் பொருள் விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் வைத்துள்ளோம். ஆளுநர் அழைத்து விசாரிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளதால் புகார் மனு கொடுத்துள்ளோம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத மோதல் வரக்கூடாது மத நல்லிணக்கத்தை காப்பாற்றி துணிந்து நின்ற அரசு கடந்த திமுக அரசு. திருப்பரங்குன்ற விவகாரத்தில் நாங்கள் செய்ததை இந்த அரசு டபுள் ஆக்டிங் செய்துள்ளது.

மேலும் படிக்க | 'கள்ளக்குறிச்சி ஆட்சியரின் துணிச்சலான முடிவு...' கவிதா ராமு IAS பதிவு... 3 மாதங்களாக நடந்தது என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
Udhayanidhi Stalin