• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழக அரசின் வங்கி கணக்குகள் ஹேக்.. ரூ.22 கோடியை சுருட்டிய மர்ம நபர்கள் யார்? ஷாக் சம்பவம்!

தமிழக அரசின் வங்கி கணக்குகள் ஹேக்.. ரூ.22 கோடியை சுருட்டிய மர்ம நபர்கள் யார்? ஷாக் சம்பவம்!

தமிழக அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22 கோடி ஆன்லைன் முறையில் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களுக்கு நிதி விடுவிடுப்பதற்காக அரசையும் வங்கியையும் இணைக்கும் வகையில், உருவாக்கப்பட்ட போர்ட்டலை ஹேக் செய்து திருட்டு நடந்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 10, 2026, 10:32 IST|Updated: Nov 10, 2026, 11:10 IST
joinshare
தமிழக அரசின் வங்கி கணக்குகள் ஹேக்.. ரூ.22 கோடியை சுருட்டிய மர்ம நபர்கள் யார்? ஷாக் சம்பவம்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

2

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

3

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

4

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

5

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் அதே நேரத்தில், சைபர் மோசடி தொடர்பான குற்றங்களும் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் மோசடிகளால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தமிழக அரசின் வங்கிக் கணக்குளையும் மோசடி கும்பல் விட்டு வைக்கவில்லை. தமிழக அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22 கோடி ஆன்லைன் முறையில் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் வங்கி கணக்குகள் ஹேக்

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை பராமரித்து வந்த வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.22.10 கோடி நிதி ஆன்லைன் வாயிலாக ஹேக் செய்யப்ப்டடுள்ளது. ரூ.22.10 கோடி நிதி கிராமப்புற சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதி ஹேக் செய்யப்பட்டது குறித்து குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14 கோடியும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியக் கணக்கில் இருந்து ரூ.5 கோடியும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் கணக்கில் இருந்து ரூ.3.10 கோடியும் என மொத்தம் ரூ.22.10 கோடி ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு நிதியை மாற்றுவதற்காக சென்னையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வந்த வங்கிக் கணக்குகளில் இருந்து இணையவழியாக ஹேக் செய்து தொகை திருடப்பட்டுள்ளது. அதாவது, ஊராட்சி ஒன்றியங்களுக்கு நிதி விடுவிடுப்பதற்காக அரசையும் வங்கியையும் இணைக்கும் வகையில், உருவாக்கப்பட்ட போர்ட்டலை ஹேக் செய்து திருட்டு நடந்துள்ளது.

ரூ.22 கோடியை திருடிய மர்ம நபர்கள் யார்?

தமிழக அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.22 கோடியை வங்கதேசம், அமெரிக்கா, கிரீஸ், நைஜீரிய ஆகிய நாடுகளில் இருந்து மர்ம நபர்கள் திருடியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி சம்பவத்தின் தொடர்ச்சி

அரசுக்குச் சொந்தமான மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.8.84 கோடி ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் நிலுவையில் உள்ள சம்பளங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி  திருடப்பட்டது தெரியவந்துள்ளது. ஊழியர்கள் மூன்று மாதங்களாகச் சம்பளத்திற்காகக் காத்திருக்கும் நிலையில், கணக்குகள் மற்றும் கருவூலங்கள் இயக்குநரகம் (DAT), அரசு கருவூலத்திலிருந்து மானிய உதவியாக ரூ. 8 கோடியை கல்லூரியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியது. 

இதனால், கணக்கு இருப்பு ரூ. 8.84 கோடியாக உயர்ந்தது. இரவுக்குள் முழுத் தொகையும் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டது. கல்லூரி அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் நைஜீரியாவை சேர்ந்த கும்பல் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதே பாணியில் தான் தமிழக அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி ரூபாய் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. எனவே, கணக்கு விவரங்களை ஊடுருவியது யார், போலி பரிவர்த்தனைக்கு எப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது, பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குள் எவை என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் விசாரிக்கின்றனர். இனிவரும் நாட்களில் அரசு கணக்குகளில் இணையப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime