• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /அக்டோபர் 7 ராசிபலன் : மேஷத்திற்கு வளர்ச்சி..மீனத்திற்கு ஆதாயம்! உங்கள் ராசிக்கு என்ன?

அக்டோபர் 7 ராசிபலன் : மேஷத்திற்கு வளர்ச்சி..மீனத்திற்கு ஆதாயம்! உங்கள் ராசிக்கு என்ன?

அக்டோபர் 7ஆம் தேதியான இன்று, மேஷம் முதல் மீனம் வரை, யார் யாருக்கு என்னென்ன பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 07, 2026, 05:30 AM IST|Updated: Oct 07, 2026, 05:41 AM IST
joinshare
அக்டோபர் 7 ராசிபலன் : மேஷத்திற்கு வளர்ச்சி..மீனத்திற்கு ஆதாயம்! உங்கள் ராசிக்கு என்ன?
Image Credit: indraiya rasipalan | X page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI: லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! வீடு, வாகன வட்டி விகிதம் உயர வாய்ப்பு!

ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI: லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! வீடு, வாகன வட்டி விகிதம் உயர வாய்ப்பு!

2

அரசியலில் களமிறங்கும் தனுஷ்..உள்ளாட்சி தேர்தலில் போட்டியா? புதுக்கதையா இருக்கே..

3

டிசம்பரில் திருப்பதி போறீங்களா? ரயில் சேவை 27 நாட்களுக்கு ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

4

50,000 ஓய்வூதியதாரர்கள், ஆஷா பணியாளர்களுக்கு குட் நியூஸ் தந்த டெல்லி அரசு: மாஸ் அறிவிப்புகள்!!

5

திருவண்ணாமலையில் சனி, ஞாயிறு அனுமதி கிடையாது? புதிய கட்டுப்பாடுகள்.. அறநிலையத்துறை விளக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கும் அவர்களின் கிரக பலன்களின் படி, அன்றைய நாள் அமையும். அந்த வகையில், அக்டோபர் 7, புதன்கிழமையான இன்று யாருக்கு என்ன ராசிபலன் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

மேஷம்

விடாப்பிடியாக இருந்து நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வாரிசுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனை அளிக்கும். உடன்பிறப்புகள் வழியில் ஆதரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகளுடன் செயல்படுவீர்கள்.

ரிஷபம்

பயணம் விஷயங்களில் மாற்றங்கள் உருவாகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

மிதுனம்

பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

கடகம்

பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும்.  நகைகள், வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.  செயல்களில் தனித்திறமை வெளிப்படும். கொடுக்கல் வாங்கலில் உண்டான சங்கடம் தீரும்.

சிம்மம்

அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயணம் செயல்களில் புதுமையான அனுபவம் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி

உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் நிமித்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும்.

துலாம்

அரசுப் பணிகளில் இருந்து வந்த கால தாமதங்கள் குறையும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல்கள் ஏற்படும். கல்விப் பணிகளில் மாற்றங்கள் உருவாகும். விளையாட்டு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

உத்தியோகப் பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மருத்துவப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல்  உருவாகும். உடனிருப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்து மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

தனுசு

நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வீட்டை மனதிற்குப் பிடித்தவாறு சில மாற்றங்களைச் செய்வீர்கள். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட சில செயல்களில் உள்ள இழுபறியான சூழல் மறையும்.

மேலும் படிக்க | அக்டோபர் 6 ராசிபலன்: இன்று எந்தெந்த ராசிகளுக்கு பொன்னான நாள்?

மகரம்

தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். சிந்தனையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைவருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த சில நிகழ்வுகள் காலதாமதமாக நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.

கும்பம்

வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளைப் பெறுவீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். திடீர் செலவுகள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

மீனம்

காப்பீட்டுத் துறைகளில் ஆதாயம் மேம்படும். தடைப்பட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பணி தொடர்பாக வெளியூர் பயணங்கள் கைகூடும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: 3 நாட்களில் 5 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan