• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /பக்தர்களே அலர்ட்! நாளை முதல் கோயில்களில் கட்டுப்பாடுகள் அமல்.. செல்போனுக்கு தடை

பக்தர்களே அலர்ட்! நாளை முதல் கோயில்களில் கட்டுப்பாடுகள் அமல்.. செல்போனுக்கு தடை

TNHRCE Temple Mobile Phone Ban: அனைத்து கோயில்களிலும் நாளை (செப்டம்பர் 1) முதல் செல்போன் தடை விதிப்பு அமலாக உள்ளது. இதனால், பக்தர்கள் நாளை முதல் கோயிலுக்கு செல்லும் போது செல்போன் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், விஐபி தரிசனத்திலும் சில மாற்றங்கள் நடக்க உள்ளது.

Written ByUmabarkavi K
Published: Aug 31, 2026, 13:11 IST|Updated: Aug 31, 2026, 13:36 IST
joinshare
பக்தர்களே அலர்ட்! நாளை முதல் கோயில்களில் கட்டுப்பாடுகள் அமல்.. செல்போனுக்கு தடை

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TNHRCE Temple Mobile Phone Ban: தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பெரும்பாலான கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பல்வேறு விதிமுறைகளை அறநிலையத்தறை விதித்து வருகிறது. பக்தர்களுக்கு சீரான தரிசனத்தை வழங்கும் வகையிலும், அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த நிலையில், நாளை முதல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலாக உள்ளது. அதாவது, நாளை முதல் அனைத்து கோயில்களில் செல்போன் தடை விதிக்கப்படுகிறது.

நாளை முதல் செல்போன் பயன்பாட்டுக்கு தடை

அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பில், திருக்கோயில் வளாகத்திற்குள் கைப்பேசி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அடங்கிய அறிவிப்பு பலகையினை திருக்கோயில் நுழைவு வாயில் மற்றும் திருக்கோயிலுக்கு வெளியே பக்தர்கள் நன்கு அறியும் வகையில் வைக்கப்பட வேண்டும். ஒலிபெருக்கி மூலமும் இவ்விவரத்தினை அறிவித்திட வேண்டும்.

பக்தர்கள் திருக்கோயிலுக்குள் நுழையும் முன், தங்களின் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்திடும் பொருட்டு கைப்பேசி பாதுகாப்பு பெட்டக வசதியினை திருக்கோயில் நிருவாகம் உடன் ஏற்படுத்துதல் வேண்டும் யங்கள் இயன்றவரையில் திருக்கோயில் நுழைவு வாயில் அல்லது காலணி பாதுகாப்பு மையத்திற்கு அருகிலேயே அமைக்கப்படுதல் வேண்டும்.

கைப்பேசிகளை பெற்று பாதுகாப்பதற்கான கட்டணமாக ஒரு கைப்பேசிக்கு ரூ.5 என்ற சீரான தொகை  வசூலிக்கப்பட வேண்டும். இதற்கான ரசீது ITMS மூலம் வழங்கப்பட வேண்டும். 01.09.2026 முதல் அனைத்து முதுநிலைத் திருக்கோயில்களிலும் பக்தர்கள் கைப்பேசியினை (Mobile Phone) கோயிலுக்குள் கொண்டு செல்லும் நடைமுறை முழுமையான தடைசெய்யப்பட வேண்டும். 

பணியளர்கள் நியமனம் பக்தர்களிடமிருந்து கைப்பேசியினை பெற்று பாதுகாப்பாக வைத்து, பக்தர்களிடம் மீள ஒப்படைக்கும் பொருட்டு தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்

திருக்கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் கைப்பேசியினை பயன்படுத்துவது, புகைப்படம், வீடியோ ஈடுப்பது குறித்து கண்காணித்திட போதிய எண்ணிக்கையிலான பணியாளர்கள் நியமிக்கப்படுதல் வேண்டும். அனுமதியின்றி புகைப்படம், விடியோ எடுக்கும் பக்தர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். 

இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் ஏதேனும் நடைபெற்றதாக செய்திகள் வெளியானால் அதற்கு பொறுப்பாண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

திருக்கோயில்களுக்குள் இறைவனின் திருவுருவங்களை புகைப்படம் எடுப்பது, கோயில் வளாகத்தில் புகைப்படம் எடுப்பது, வீடியோ போன்றவற்றை பதிவு செய்வது மற்றும் ஊடகங்களுக்கு வி.ஐ.பி-க்கள் முக்கியஸ்தர்கள் திரைத்துறை பிரபலங்களுடன் கோயிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu