• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சிம்மத்திற்கு செல்லும் செவ்வாய்.. நவம்பர் 12 முதல் 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!

சிம்மத்திற்கு செல்லும் செவ்வாய்.. நவம்பர் 12 முதல் 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!

நவம்பர் 12 அன்று நிகழும் செவ்வாய் சிம்மப் பெயர்ச்சியால் மிதுனம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசியினருக்கு தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் பெரும் முன்னேற்றமும் கிடைக்கவுள்ளது.

Written ByR Balaji
Published: Nov 01, 2026, 10:39 AM IST|Updated: Nov 01, 2026, 10:43 AM IST
joinshare
சிம்மத்திற்கு செல்லும் செவ்வாய்.. நவம்பர் 12 முதல் 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சனி பெயர்ச்சி: அடுத்த 100 நாட்கள் இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்.. பணம், பதவி உயர்வு தேடி வரும்!

சனி பெயர்ச்சி: அடுத்த 100 நாட்கள் இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்.. பணம், பதவி உயர்வு தேடி வரும்!

2

50 வருடம்.. தண்ணீரே குடிக்காமல் உயிர் வாழும் உலக பணக்காரர்.. எப்படி தெரியுமா?

3

லவ் சொன்னது குத்தமா? பிக்பாஸ் போட்டியாளரை அசிங்கப்படுத்திய பெற்றோர்! மேடையில் சம்பவம்..

4

CSK வரும் ரபாடா? கூடவே ஒரு தமிழக வீரர்.. குஜராத் செல்லும் ருதுராஜ் - பெரிய முடிவு!

5

சுக்கிரன் பெயர்ச்சி: தீபாவளி முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம்.. செல்வம் பெருகும்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, நவகிரகங்களில் செவ்வாய் பகவான் வீரியம் மற்றும் வலிமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். தைரியம், துணிச்சல், நிலம், வீடு, சொத்து, சகோதர உறவுகள், அதிகாரம் மற்றும் தொழில் திறன் உள்ளிட்டவற்றுக்கு செவ்வாய் முக்கிய கிரகமாக விளங்குகிறார். ஒருவருடைய தன்னம்பிக்கை விடாமுயற்சி மற்றும் தலைமை பண்புகளிலும் இவரது ஆதிக்கம் இருக்கிறது.

அந்த வகையில், வரும் நவம்பர் 12 அன்று இரவு 8.46 மணிக்கு செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கு இடம்பெயர உள்ளார். சிம்மம் சூரியனின் ஆட்சி பெற்ற ராசியாகும். அதிகாரம், கெளரவம், தலைமைத்துவம் மற்றும் புகழை குறிக்கும் இந்த ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நெருப்பு தத்துவம் கொண்ட செவ்வாய், மற்றொரு ராசியான சிம்மத்தில் பயணிக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கலாம். குறிப்பாக மிதுனம், சிம்மம், விருச்சிகல் ஆகிய மூன்று ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கக்கூடும். அந்த ராசிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பல வழிகளில் முன்னேற்றத்திற்கான கதவுகளை திறக்கலாம். குறிப்பாக பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்கொண்டு வந்த சிக்கல்கள் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. புதிய பொறுப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்கள் தேடி வரலாம்.

பொருளாதாரத்தை பொறுத்தவரை வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். சேமிப்பை மேம்படுத்தவும், நிதி நிலைமை வலுப்படுத்தவும் சாதகமான சூழல் அமையக்கூடும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதால் அன்றாட பணிகளை உற்சாகத்துடன் மேற்கொள்ள முடியும். மேலும், வெளிநாடு மற்றும் வெளியூர் பயணங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். அந்த பயணங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக அமையக்கூடும். புதிய முயற்சிகளை தொடங்கவும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும் ஏற்ற காலமாக இது இருக்கும்.

சிம்மம்

செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பல்வேறு நற்பலன்கள் கிடைக்கக்கூடும். இதுவரை மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதுடன், எதிர்பார்த்த வெற்றியையும் அடைய வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, வருமானம் அதிகரிப்பதற்கான சூழல் உருவாகலாம். வேலை நிமித்தமான பயணங்கள் சாதகமான முடிவுகளை தரக்கூடும். தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், புதிய சாதனைகளை படைப்பதற்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தை பொறுத்தவரை பிள்ளைகள் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கக்கூடும்.

உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவு மேம்பட வாய்ப்புள்ளது. கணவன், மனைவிக்கு இடையேயான புரிதலும் அதிகரிக்கலாம். ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கக்கூடிய காலகட்டமாக இது அமையலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் புதிய மாற்றங்களை கொண்டுவரலாம். பணியிடத்தில் உங்களுடைய உழைப்புக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் மற்றும் வருமான உயர்வு போன்ற சாதகமான நிகழ்வுகள் நடைபெறலாம். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் முயற்சிகள் மூலம் லாபம் அதிகரிக்கக்கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்வதற்கான சூழலும் அமையலாம்.

குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படலாம். திருமணமான தம்பதிகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, பரஸ்பர புரிதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுவரை தள்ளிப்போன முக்கியமான வேலைகளையும் வெற்றிகரமாக முடிக்க முடியும். மொத்தத்தில், வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கக்கூடிய காலமாக இந்தச் செவ்வாய் பெயர்ச்சி அமையலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan