• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /குரு வக்ர பெயர்ச்சி: டிசம்பர் முதல் 4 ராசிக்கு அதிர்ஷ்ட காலம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

குரு வக்ர பெயர்ச்சி: டிசம்பர் முதல் 4 ராசிக்கு அதிர்ஷ்ட காலம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Guru Peyarchi: குரு பகவான் டிசம்பர் 31ஆம் தேதி சிம்ம ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்க உள்ளார். இதனால், சில ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் அதிர்ஷ்டமாக இருக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 20, 2026, 09:51 IST|Updated: Nov 20, 2026, 10:00 IST
joinshare
குரு வக்ர பெயர்ச்சி: டிசம்பர் முதல் 4 ராசிக்கு அதிர்ஷ்ட காலம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Guru Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக குரு அறியப்படுகிறார். குரு பகவானின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்து வருகிறது. அந்த வகையில், குரு பகவான் அக்டோபர் 31ஆம் தேதி கடக ராசியில் இருநது சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 

இந்த நிலையில், டிசம்பர் 13ஆம் தேதி சிம்ம ராசியில் தன்னுடைய நகரும் வேகத்தை குறைத்து, வக்ர பெயர்ச்சியை தொடக்க உள்ளார். டிசம்பர் 13ஆம் தேதி அன்று காலை 6.26 அவர் சிம்ம ராசியில் வக்ர கதியை அடைகிறார். குருவின் வக்ர நிலையில் பின்னோக்கி நகர்ந்து ஜனவரி 25, 2027 அன்று மீண்டும் வக்ர நிலையை கடக  ராசிக்குள் நுழைகிறார். குரு கிரகத்தின் இந்த வக்ர இயக்கம் ஏப்ரல் 13ஆம் தேதி 2027 வரை நீடிக்கும். இதனால், சில ராசிகளுக்கும் நேர்மையான ஆற்றலை கொடுக்கும். எனவே அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

கடகம்

குருவின் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். நினைத்த காரியம் நடக்கும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான முயற்சிகள் மேம்படும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உணவு விஷயங்களில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். 

கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் பொறுமை வேண்டும். உறவுகள் உங்கள் குணத்தை அறிந்து செயல்படுவார்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும்.

சிம்மம்

குரு பெயர்ச்சியால் பழைய கடன்கள் அடையும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். வாகன பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய விஷயங்களில் நிதானத்தோடு செயல்படவும்.  மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பாடங்களில் இருந்த குழப்பங்கள் குறையும். முயற்சிகளுக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். அரசு பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படவும்

கன்னி 

குருவின் வக்ர பெயர்ச்சியால் நினைத்த காரியங்கள் நடக்கும். நிறைவேறாத ஆசைகள் நடக்கும். உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம்.  உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். துரிதமான செயல்பாடுகள் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் சில வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். நண்பர்களின் வருகை தெளிவை உருவாக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வரவுகள் தேவைக்கு இருக்கும். சுபகாரியங்களில் இருந்து மந்த நிலை விலகும்.

மீனம்

குருவின் வக்ர பெயர்ச்சியால் பழைய கடன்கள் அடையும். மீன ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் சில மாற்றம் ஏற்படும். மனதளவில் புதிய தெளிவுகள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும்.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


 

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi