• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? முக்கிய தகவல்

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? முக்கிய தகவல்

Written ByUmabarkavi K
Published: Aug 17, 2026, 04:05 PM IST|Updated: Aug 17, 2026, 04:43 PM IST
joinshare
Kilambakkam Railway Station: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Kilambakkam Railway Station: கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடை பணிகள் முடிந்தது. 2,3ம் நடைமேடைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என கூறுகின்றனர்.

Kilambakkam1/5

கிளாம்பாக்கம்

சென்னையின் புறநகர் பகுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பேருந்திற்கு பயணிகள் வருவதற்கம், நகரத்திற்குள் செல்வதற்கும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பயணிகள் நகரத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்திற்கு வர, வண்டலூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டிய சூழல் உள்ளது.
Kilambakkam2/5

கிளாம்பாக்கம்

இதனால், பயணிகள் சிரமப்படுகின்றனர். இதனால், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்து, அதற்கான இறுதிகட்ட பணிகளும் நடந்து வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 2024ஆம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில், ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே 450 மீட்டர் நீளமுள்ள நடைபாதை மேம்பாலமும் அமைக்கப்படடு வருகிறது.
Kilambakkam3/5

கிளாம்பாக்கம்

எனவே, பயணிகள் எப்போது கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தீபாவளி முன்பு அல்லது தீபாவளிக்கு பின்ப பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Kilambakkam4/5

கிளாம்பாக்கம்

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டத்தின் பொதுமேலாளர் சைலேந்திர சிங் கூறுகையில், "ரயில்வே தரப்பில் இருந்து அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. தண்டவாளம் மற்றும் நடைமேடைப் பகுதிதான் முக்கியம். அந்த பணிகளும் முடிவடைந்துவிட்டது. ரயில் நிலையத்தின் முதல் நடைமேடை பணிகள் முடிந்தது. 2,3ம் நடைமேடைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. முதல் நடைமேடையில் கழிவறை, டிக்கெட் கவுண்ட்ர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
Kilambakkam5/5

கிளாம்பாக்கம்

மேலும், "ஆகாய நடைமேடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் 30 சதவீதம் முடிவடைந்துள்ளன" என்று கூறினார். எனவே, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தீபாவளி பண்டிகையையொட்டி, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

2

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

3

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

4

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

5

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.