Vandaloor Zoo Closed Latest News: சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்களுக்கு 2 நாட்கள் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Vandaloor Zoo Closed Latest News: இரண்டு நாட்களுக்கு பிறகு, வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1/5
வண்டலூர் உயிரியியல் பூங்கா
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 180 வகைகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பூங்காவை காண சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தருவார்கள்.
2/5
வண்டலூர் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்
இந்த நிலையில், வண்டலூர் பூங்கா இரண்டு நாட்கள் மூடப்படும் எனவும் பார்வையாளர்களுக்கு இன்றும், நாளையும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் (NIHSAD), வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் உள்ள நீர்ப்பறவைகளுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது.
3/5
அக்டோபர் 22,23ஆம் தேதி பூங்கா மூடல்
அக்டோபர் 3 முதல் 9ஆம் தேதிக்குள் நான்கு வண்ண நாரைகள், ஒரு சாம்பல் கூழைக்கடா, ஒரு சாம்பல் நாரை மற்றும் ஒரு பாம்புப் பறவை உட்பட ஏழு நீர்ப்பறவைகள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவைக்க காய்ச்சலால் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்கள் வண்டலூர் உயிரியியல் பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
4/5
நீர்பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்
பறவைகளை பாதுகாக்கவும், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே வண்டலூர் பூங்கா இரண்டு நாட்களுககு மூடப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இறப்புகள் பதிவான உடனேயே, தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஏழு நாட்களுக்கு நீர்ப்பறவைகளுக்கு மீன்கள் மூலம் நோய்த்தடுப்பு வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மூலிகை வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் மருந்துகளை வழங்கியதாக அதிகாரிகள் கூறினர்.
5/5
வண்டலூர் பூங்கா நிர்வாகம் எடுத்த நடவடிக்கை
பறவைக் காய்ச்சல் எனப் பொதுவாக அறியப்படும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா, முதன்மையாகப் பறவைகளைத் தாக்கும் ஒரு வைரஸ் தொற்றாகும். H5N1 உட்பட சில வகை வைரஸ்கள், எப்போதாவது மனிதர்களையும் பாதிக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் தொடர்பைத் தவிர்ப்பதும் முக்கியமானதாகிறது. எனவே, வண்டலூர் பூங்கா நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.