TN Govt Paperless Registration: தமிழகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான சொத்து பத்திர பதிவுகள் இனி காகிதமற்ற முறையில் (Paperless Registration) நடைபெறும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 2ஆம் தேதி முதல் 4 வகை பத்திரங்களுக்கு காகிதமற்ற பதிவு கட்டாயம் அறிவித்துள்ளது.
TN Govt Paperless Registration: எனவே, இனி பத்திரப்பதிவு அலுவலங்களுக்கு நேரில் காகிதப் பத்திரங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1/5
பத்திரப்பதிவு துறையில் அதிரடி நடவடிக்கைகள்
தமிழக அரசு பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக, ஆன்லைனில் பத்திரப்பதிவை செய்யும் வகையில், பல்வேறு அறிவிப்புகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான சொத்து பத்திர பதிவுகள் இனி காகிதமற்ற முறையில் நடைபெற வேண்டும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.
2/5
நவம்பர் 2 முதல் காகிதமற்ற பதிவு முறை கட்டாயம்
STAR 3.0 திட்டத்தின் இரண்டாம் கட்ட சீர்திருத்தமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், வரும் நவம்பர் 2ஆம் தேதி முதல் குடும்ப செட்டில்மெண்ட் பத்திரம், விடுதலைப் பத்திரம், குடும்ப பாகப்பிரிவினை பத்திரம் மற்றும் செட்டில்மெண்ட் ரத்து பத்திரம் ஆகிய 4 வகை ஆவணங்களுக்கும் காகிதமற்ற ஆன்லைன் பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3/5
காகிதமற்ற பதிவு முறை கட்டாயத்திற்கு என்ன காரணம்?
பொதுமக்கள் இனி பத்திரங்களை இணையதளம் வழியாகவே தயார் செய்து ஆவணங்களைப் பதிவேற்றலாம். எனவே, இனி நேரில் காகிதப் பத்திரங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. சரிபார்ப்பு மற்றும் ஆதார் அங்கீகாரத்திற்காக மட்டும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானால் போதுமானது.
4/5
காகிதமற்ற பதிவு முறை கட்டாயம் குறித்து அமைச்சர் சொன்ன விஷயம்
முன்னதாக 07.09.2026 அன்று சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் பதிவுத்துறை தலைவரின் (IG of Registration) பரிந்துரையின் அடிப்படையில், நிர்வாக வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ஆவணங்களை மீண்டும் மீண்டும் கையாள்வதைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5/5
காகிதமற்ற பதிவு முறை எப்படி செயல்படும்?
இந்த நடவடிக்கையின் கீழ், டிஜிட்டல் முறையில் நிறைவேற்றப்பட்ட பத்திரங்கள், தேவையான துணை ஆவணங்களுடன், ஆன்லைன் பதிவு வசதி மூலம் துணைப் பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும். பதிவுத் துறை அந்த ஆவணங்களைப் பரிசீலிக்கும், அதன் பிறகு சம்பந்தப்பட்ட தரப்பினர், அடையாளம் காணுதல், சான்றளித்தல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட பதிவு நடைமுறைகளை நிறைவு செய்வதற்காக சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் முன் ஆஜராக வேண்டும். அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த பிறகு, பதிவுசெய்யப்பட்ட ஆவணம் STAR அமைப்பில் பாதுகாக்கப்படும்.